மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவன், அவனைக் காப்பாற்ற முயன்ற பலரின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் உயிரிழந்தான் (டெலிகிராப் இந்தியா, ஏப்ரல் 14, 2024). இதுபோன்ற விபத்துக்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், இதுபோன்ற மரணங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. பாதுகாப்பும் பராமரிப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், பலர் அலட்சியமாக உள்ளனர். அரசாங்கம் சட்டங்களை உருவாக்கத் தவறுகிறது அல்லது சட்டங்கள் வெறுமனே புறக்கணிக்கப்படுகின்றன. “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்” (உபாகமம் 22:8) என வேதாகமம் கற்பிக்கிறது.
சுயநலம்:
சிலர் மிகவும் சுயநலவாதிகள் மற்றும் மற்றவர்களின் தேவைகள், உரிமைகள் அல்லது பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள். சுயநலவாதிகள் மற்றவரின் பாதுகாப்பு மற்றும் கவனத்திற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று நினைக்கிறார்கள். சிலர், அவர்கள் செய்த பாவங்கள், பாதிக்கப்பட்டவரின் முந்தைய சாபங்கள் என்று கூட விளக்குகிறார்கள்.
கஞ்சன்:
பணத்தை சேமிப்பது ஒரு நல்ல குணமாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது. பணத்தைச் சேமிப்பது எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பு பெற முயற்சிக்கிறது, ஆனால் அது மற்றவர்களை உடனடியாக ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது.
பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டுதல்:
சிலர் பரிதாபப்படாமல் பாதிக்கப்பட்டவரையேக் குற்றம் சாட்டுகிறார்கள், அவர்கள் அவசரமாகவும் கவனக்குறைவாகவும் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். பொறுப்பை தான் ஏற்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது பழியைப் போட முயற்சிக்கிறார்கள்.
இராஜரீக பிரமாணம்:
உங்கள் முழு இருதயம், ஆத்மா, சரீரம் மற்றும் பலத்துடன் தேவனை நேசிக்கவும், உங்களைப் போலவே அண்டை வீட்டாரை நேசிக்கவும் இராஜரீக பிரமாணம் உங்களுக்குக் கற்பிக்கிறது. போர்வெல் மூடப்படாதது, ஆளிறங்குத்துளை அகற்றப்பட்டிருப்பது, பள்ளம் மூடப்படாதது, மின் கம்பிகள் பாதுகாப்பற்றது, பாதுகாப்புச் சுவர்கள் இல்லாதது, கைப்பிடிச் சுவரற்ற படிக்கட்டுகள், சுவர்கள் இல்லாத கூரைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்காதது என சில விஷயங்களால், மற்றவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது துஷ்பிரயோகம் பண்ணப்படுகின்றன.
குற்றம்:
மோசேயின் பிரமாணத்தின்படி, அத்தகைய அலட்சியம் தேவனுக்கு எதிரான பாவமாகும். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியவர்கள் மீதுதான் ரத்தம் சிந்திய குற்றமும் இருக்கும். இது ஒரு காயம், தற்காலிக இயலாமை அல்லது மரணம். ஆனால் முழு பிரபஞ்சத்தின் நீதிபதியாக தேவன் மற்றவர்களின் நலனைப் புறக்கணிப்பவர்களைத் தண்டிப்பார், தீர்ப்பளிப்பார்.
மற்றவர்களின் பாதுகாப்பில் நான் கவனம் செலுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்