ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும் (உன்னதப்பாட்டு 1:12), என்று மணவாட்டி, தனது உள்ளத்தில் வசிக்கும் மணவாளனை வாசனையை வீசும் "என்னுடைய நளததைலம்" என்று மணவாட்டி அழைக்கிறாள். "நாம் ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிற" பரம பிதாவோடு ஐக்கியம் வைக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் (1 தீமோத்தேயு 6:15-16). அவருடைய பந்தியில் பங்கு பெறும்படி நாம் தகுதியுள்ளவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்து தனது நீதியின் நிமித்தம் உங்களுடைய நளததைலமாயிருக்கிறார். இவர் தனது வாசனையை உங்களுக்கு அனுப்பி உங்களை பரிசுத்தமாக்குகிறார். இந்த நளததைலத்தை உங்களது அயராத ஊழியத்தின் மூலமாகவோ, நீண்ட ஜெபத்தின் மூலமாகவோ சம்பாத்திக்கவில்லை. ஆனால் மணவாளனின் இரத்தினால் அவர் சம்பாதித்த நீதியின் மூலமாக இந்த நளததைலம் உங்களின் வாசம் செய்கிறார்.
"மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" (யோவான்12:3). இதேபோல நாமும் நம்முடைய விலைமதிப்பு இல்லாத நளதம் போன்ற பொருட்களால் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மேல் ஊற்றவேண்டும். உங்களின் இருதயத்தில் பரிசுத்தாவியானவர் நளததைலமாக வாசம்பண்ணும்போது நீங்கள் அவரின் உண்மையான, எளிய ஊழியர்களுக்கு தியாகமாக கொடுக்கும் காணிக்கைகளை அவர்கள் பெற்றவுடன் நன்றியுள்ள இதயத்துடன் அவர்கள் அளிக்கும் தோத்திரங்கள் சுகந்த வாசனையாக தேவனிடம் போய் சேர்ந்து, உங்களுக்கு ஆசீர்வாதங்களை அனுப்புகிறது. "இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்" (II கொரிந்தியர் 9 :12).