கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அநேக உவமைகளைப் பகிர்ந்துகொண்டார், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் அதிக ஆவலுடன் கேட்பவர்களாக இருந்தனர். அதில் இளைய மகன் தன் தந்தையிடமிருந்து வாரிசைக் கோரும் உவமையை ஆண்டவர் பகிர்ந்துகொண்டது சுவாரஸ்யமானது (லூக்கா 15:11-32). அந்த உவமையைக் கேட்டுக் கொண்டிருந்த போது அவர்களின் மனதில், அந்த இளைய மகன் பன்றிகளோடு வாழ்ந்தான் என்பது அவனுக்கு நியாயமாக அல்லது மிகச்சரியான தண்டனை கிடைத்ததாக எண்ணினார்கள். ஆண்டவர் தொடர்ந்து உவமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்; அப்படி சொல்லும் போது பின்னான காரியங்கள் அந்த விமர்சகர்களை திகைக்க வைத்தது.
1) நிராகரிப்பு:
பன்றிகளுடன் வாழ்வது என்பது ஒரு யூத இளைஞனுக்கு கண்ணியக் குறைவு. அதுபோல புறஜாதிகள் மத்தியில் தஞ்சம் அடைவது என்பது மற்றொரு வெட்கக்கேடான விஷயம்.
2) நினைவு:
சரீர ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும், அவன் தனது தந்தையை நிராகரித்தாலும், அவரைப் பற்றிய நினைவுகளை அவனால் நிராகரிக்க முடியவில்லை. ஆம், எப்போதுமே நினைவுகள் நல்லது, பெருமூளை பதிவில் சரியான விஷயங்களை ஒழுங்குப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் போது திரும்ப சரியான நேரத்தில் அந்நினைவுகள் நமக்கு உதவியாக இருக்கும், நன்றாகவும் இருக்கும்.
3) மனந்திரும்புதல்:
வீட்டில் தந்தையுடன் இருந்த அவனது நேரங்களே அவனது வாழ்க்கையில் மிகச் சிறந்த நேரம். மகனாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு வேலைக்காரனாகவோ அல்லது அடிமையாகவோ மீண்டும் அங்கு செல்ல ஆசைப்பட்டான். அவன் தனது வீட்டுப் படிநிலையில் மீண்டும் முதலிலிருந்து அதாவது முதல் படியிலிருந்து ஏறிச் செல்ல, தன்னை மேம்படுத்திக் கொள்ளத் தயாராக இருந்தான்.
4) திரும்புதல்:
வீட்டை நோக்கிப் பயணம் செய்வது என்பது கவலையான தருணங்களாகவும் இருந்திருக்கும். ஆம், தன்னை ஏற்றுக் கொள்வார்களா அல்லது கதவுகள் சாத்தப்பட்டு மூடப்படுமா? விரோதம், அவமதிப்பு, கீழ்ப்படியாமை மற்றும் கலகம் செய்து வீட்டை விட்டு வெளியேறியதற்காக அக்கம்பக்கத்தினர் அவனைப் பிடித்து தண்டிக்க முடியும். மூத்த சகோதரன் எப்படி இருப்பானோ மற்றும் தந்தையிடம் அணுக அனுமதிப்பானோ? எனப் போன்ற பலவித குழப்பம், சந்தேகம் மற்றும் ஒரு நம்பிக்கையோடு வீடு திரும்பி நடந்தான்.
5) ஒப்புரவு:
அவன் தன் தந்தை தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு வியந்தான். அவர் எப்படி கவனித்தார்? அவன் வரவை எதிர்பார்த்து பால்கனியிலோ மொட்டை மாடியிலோ நின்று கொண்டிருந்தாரா? தந்தை தன்னோடு ஒப்புரவாகி மீண்டும் இணைத்துக் கொண்டு தன்னை மீட்டெடுத்தார் என்பதை மகனுக்குத் தெரிந்துகொள்ள அந்தத் தழுவல் போதுமானதாக இருந்தது. அவன் தனது பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கும் வரைகூட அனுமதிக்கப்படவில்லையே.
6) மீட்டெடுத்தல்:
இளைய மகன் ஒரு வேலைக்காரனாக இருக்க ஆசைப்பட்டான், ஆனால் அவன் மீண்டும் மகனாக, புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களுடன் மீட்கப்பட்டான். அது அவனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது.
7) மகிழ்ச்சி:
இசை, நடனம் மற்றும் விருந்துடன் ஒரு பெரிய விருந்தினர் பட்டியலைக் கொண்ட ஒரு கொண்டாட்டத்திற்கு தந்தை உத்தரவிட்டார்.
மூத்த குமாரன் போன்ற பரிசேயர்கள் தேவ கிருபையையும், பெருந்தன்மையையும், மன்னிப்பையும் கண்டு திகைத்தனர்.
எனது மறுசீரமைப்பில் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்