மகாத்மா காந்தியை உலகில் பலரும் புனிதராகக் கருதுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் 6 மில்லியன் ரேண்ட் (சுமார் ரூ.3.33 கோடி) பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயது கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு டர்பன் நீதிமன்றத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (ஜூன் 8, 2021, ஹிந்துஸ்தான் டைம்ஸ்). காந்தி தார்மீக மதிப்பீடுகளுக்காக இயங்கியவர், ஆனால் அவருடைய சந்ததியினர் சிலர் அவருடைய முன்மாதிரி அல்லது போதனைகளை பின்பற்றவில்லை. ஆம், தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தார்மீக மதிப்புகள் வீழ்ச்சியடைவதை உலகம் காண்கிறது.
ஆபிரகாம் தனது பிள்ளைகள் மற்றும் சந்ததியினருக்கு தேவனுக்கு பயப்படுவது பற்றியும் ஆண்டவரின் கட்டளைகளை பின்பற்றுவது பற்றியும் கற்றுக்கொடுப்பான் என தேவன் ஆபிரகாமில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் (ஆதியாகமம் 18:19). "அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்..." (சங்கீதம் 78: 5,6) என்பதாக ஆசாப் கூட இதைப்பற்றி பாடியுள்ளான்.
ஆயினும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோரின் சந்ததியினரான இளைய தலைமுறையினருக்கு ஆண்டவரின் கட்டளைகள் நினைவில் இல்லை அல்லது கற்பிக்கப்படவில்லை. தேவனின் மகத்துவங்களை காண்பிக்கும் செயலான எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த மீட்பு அல்லது மோசே பிரமாணம் என எதுவும் கற்பிக்கப்படவில்லை அல்லது விவாதிக்கப்படவும் இல்லை. "அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று" (நியாயாதிபதிகள் 2:10).
ரேகாபியர்களை தேவன் ஏன் ஆசீர்வதித்தார் என்பதை எரேமியாவின் கவனத்திற்கு தேவன் கொண்டுவந்தார் (ரேகோபியர்கள் மோசேயோடு தொடர்புடையவர்கள்; நியாயாதிபதிகள் 1:16). அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் அறிவுறுத்தலின் படி தங்கள் குடும்ப பாரம்பரியத்தை உண்மையாக வைத்திருந்தனர்: அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், தங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருந்தார்கள் (எரேமியா 35:6-7). அவர்கள் யெகூவின் காலம் முதல் எரேமியா வரை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியத்தை பின்பற்றி வந்தனர் (2 இராஜாக்கள் 10:15; எரேமியா 35: 8-10).
ஒரு குடும்பக் குலம் மனிதனுடைய கட்டளைகள் மற்றும் பாரம்பரியத்தை உண்மையுடன் பின்பற்றும்போது, இஸ்ரவேல் தேசம் ஆண்டவரின் கட்டளைகளைப் படிக்க, கேட்க, கற்றுக்கொள்ள அல்லது பின்பற்ற தயங்கவில்லை. ஆனால் தேசம் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க தவறிவிட்டது. கற்பித்தல் மற்றும் முன்மாதிரியான வாழ்வும் தேவனின் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கப்படுகிறது.
நான் என் குழந்தைகளுக்கு தேவனுக்கு பயப்படுகிற பயத்தையும் கட்டளைகளையும் கற்பிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran