தேவனின் தாழ்மை
மனிதகுலத்தை மீட்க ஆண்டவராகிய இயேசு மனிதனாக மாறுவது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது. அவருக்கு விருப்பங்களும் வாய்ப்புகளும் இருந்தது, ஆனாலும் பணிவையும் எளிமையையும் தேர்ந்தெடுத்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:8).
1) தேவதூதன் அல்ல, மனிதன்:
கர்த்தராகிய இயேசு தான் ஒரு மனிதனாக மாற தேர்ந்தெடுத்தார். நிச்சயமாக, தேவதூதர்களை விட மனிதனுக்கு அதிக வரம்புகள் இருந்தன. பிதாவின் திட்டத்தில் ஆண்டவராகிய இயேசு மனிதனாக மாறுவது இன்றியமையாததாக இருந்தது.
2) பிறப்பு, சுகாதாரமற்ற இடம்:
அவர் பிறந்தபோது ரோமானியப் பேரரசு மகிமையுடன் உலகை ஆண்டது. அவர் ரோமானிய அரண்மனையில் பிறக்க தேர்வு செய்திருக்கலாம் அவர் ஒரு முக்கியமற்ற நகரமான பெத்லகேமையும், அதிலும் ஒரு மாட்டுத் தொழுவத்தையும், குழந்தை பிறப்பிற்கு சுகாதாரமற்ற இடத்தையும் தேர்ந்தெடுத்தார்.
3) குழந்தை, வயது முதிர்ந்தவர் அல்ல:
ஆதாம் ஒரு குழந்தையாக படைக்கப்படவில்லை, வயதில் கூடியவனாக படைக்கப்பட்டான். வயதில் பெரியவராக ஒரு பாராசூட் மூலம் உலகிற்கு வந்திருக்க முடியுமே! ஆனாலும், தேவன் தன்னை மற்றவரை சார்ந்து வாழ்பவராக, பாதிக்கப்படக்கூடியவராக, பலவீனமான குழந்தையாகப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.
4) பணக்காரரல்ல, ஏழை பெற்றோர்:
எருசலேமில் ஒரு பணக்கார குடும்பத்தை ஆண்டவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். யோசேப்பும் மரியாளும் மிகவும் ஏழ்மையில் இருந்தனர், அவர்களால் ஆண்டவராகிய இயேசு பிறந்தபோது எருசலேம் ஆலயத்தில் பறவைகளை மட்டுமே காணிக்கையாக செலுத்த முடிந்தது (லூக்கா 2:24)
5) வெள்ளை ஆடை வேலையல்ல, தச்சராகப் பயிற்றுவிக்கப்பட்டவர்:
கர்த்தராகிய இயேசு ஒரு தச்சராகப் பயிற்றுவிக்கப்பட்டார். அவர் 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் அந்த வேலையைச் செய்தார்.
6) மாளிகையல்ல, எளிய வாழ்க்கை:
தேவன் பன்னிரண்டு சீஷர்களுடன் ஒரு சமூகமாக வாழ்ந்தார். அது ஒரு மாளிகையில் இல்லை, எளிமையான இடத்தில் தான் இருந்தார். அவருக்கு தலை சாய்க்க இடம் இல்லை (மத்தேயு 8:20) என்பதாக வேதம் தெரிவிக்கிறதல்லவா.
7) ஆவிக்குரியல்ல, சரீரப் போராட்டங்கள்:
கர்த்தராகிய இயேசு பசி, தாகம், சோர்வு போன்று மனிதனுக்கான போராட்டங்களைச் சந்தித்தார், அவர் தூக்கத்தைப் போல ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.
8) வாதையல்ல, சோதனை:
கர்த்தர் சாத்தானால் சோதிக்க அனுமதிக்கப்பட்டார் (மத்தேயு 4). மற்ற மனிதர்களைப் போலவே எல்லா வகையிலும் அவர் சோதிக்கப்பட்டார் (எபிரெயர் 4:15).
9) ஆவிக்குரிய வேதனை: கர்த்தராகிய இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஆவிக்குரிய கொந்தளிப்பைக் கடந்து, தேவனிடம் இந்தப் பாத்திரம் நீங்குமானால் நீங்கட்டும் என்பதாக கூட மன்றாடினார் (மத்தேயு 26:36-56). தனிமையில் விடப்பட்டதற்காக பிதாவிடம் அவர் கூக்குரலிட்டது மிகுந்த ஆவிக்குரிய வேதனையாக இருந்தது (மத்தேயு 27:46).
10) மரணம்:
அவரது மரணம் அவரது சொந்த சிருஷ்டிப்பின் அவமானம், சபிக்கப்பட்டது, மிருகத்தனமானது மற்றும் தகுதியற்றது.
அவரைப் போல நாமும் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாமா?
Author : Rev. Dr. J. N. Manokaran