விவசாயம் இவ்வுலகத்தின் முதுகெலும்பு. விவசாயம் இல்லாவிடில் மனித வாழ்வு இல்லை. இயற்கைiயாக, இயற்கையை நம்பி, அதைப் பெருக்கி, பாதுகாப்பவரே விவசாயி. ஒரு மனிதன், குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டின் வளர்ச்சி அனைத்தும் விவசாய வளர்ச்சியையே மையமாகக் கொண்டுள்ளது. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளிதான் விவசாயி.
கடவுள் விவசாயிகளுக்கு ஒரு முன்னோடி விவசாயி. உலகில் அனைத்து உயிரினங்களையும் அதினதின் ஸ்தானத்தில் கடவுள் உருவாக்கினார். எந்தெந்தப் பயிர் எந்தெந்த மண்ணில், எந்தெந்த தட்பவெப்ப சூழலில் வளரும் என்பதை அறிந்திருந்தார். மனிதனுக்காக ஒரு அழகான ஏதேன் தோட்டத்தை உண்டாக்கினார். விவசாயத்திற்கு தேவையான மண், நீர், காற்று, உஷ்ணம், விதை எல்லாமே அவரிடமிருந்தே இப்பூமிக்கு வந்தது. நல்லோர் மேலும் தீயோர் மேலும் கடவுள் மழையை பெய்யப்பண்ணுகிறார்.
கடவுளைப் போலவே ஒரு தலைசிறந்த விவசாயியாக மண்ணை பண்படுத்தவும், பாதுகாக்கவும் மனிதரைப் பணித்தார். ஆனால் மனிதன் அதை செய்யாத போது அவனது அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தை அடித்தார். கடவுளை நம்பி, கீழ்படிந்து, அவர் விருப்பப்படி வாழ்ந்தால் அவர்களை ஆதிர்வதிக்கும் அடையாளமாக விவசாயத்தை ஆசீர்வதிக்கிறார். அவர்கள் ஆற்றோங்களில் நடப்பட்டு ஏற்ற காலத்தில் கனி கொடுக்கும் மரங்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
விவசாயத்தை ஆசீர்வதிக்கும் கடவுளுக்கு, அதன் முதற்பலனை ஆலயம், பூசாரி, மற்றும் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் விவசாயிகள் செழிக்கவும், விவசாயம் வளம் பெறவும் வரலாற்றில் கடவுள் மனிதனாக, இயேசு இந்த உலகில் பிறந்தார். மனிதர்களின் பாவம் போக்கும் பலியானார். அமைதி வாழ்வு தருகிறார்.
விவசாயத்தை நன்கு புரிந்து, விவசாயிகளுடன் என்றும் வாழ்ந்து, அனைத்து வளங்களையும் கொடுக்கும் மனிதனாகப் பிறந்த இயேசுவின் அருளும், ஆசியும், இன்பமும் என்றும் உங்களோடு இருப்பதாக!
Author. Rev. Dr. C. Rajasekaran