வானில் ஒரு விண்மீன்

வழிகாட்டி

திசையறியா பயணங்களின்போது இன்றைய உலகம் சார்ந்திருப்பதும் நம்பத்தகுந்த வழிகாட்டியாகத் திகழ்வதும் ஜிபிஎஸ் என்னும் புவியிடங்காட்டியையே! இவ்வுலகில் எந்த ஓர் இடத்திற்கும் பிறர் உதவியின்றி செல்ல இத்தொழில்நுட்ப வசதி உதவுகிறது. சுருங்கச் சொன்னால் இதுவே இன்றைய உலகின் வழிகாட்டி! இதேபோல சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு புவியிடங்காட்டி வழிகாட்டியது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

வானில் ஒரு விண்மீன்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, வானியல் அறிஞர் சிலர் வானத்தில் வித்தியாசமான விண்மீன் ஒன்றைக் கண்டு அது  ஒரு வழிகாட்டி என உணர்ந்தனர், எனவே, அந்த வழிகாட்டியைப் பின்தொடர முடிவெடுத்து பல நாட்கள், மாதங்கள் பயணித்து அந்த வழிகாட்டி நின்ற இடத்தில் அவர்களும் நின்றனர். அங்கே அவர்கள் உலக ரட்சகர் இயேசு கிறிஸ்துவை குழந்தையாகக் கண்டு மிகவும் களிகூர்ந்தனர், அது அவர்களுக்கு எல்லை இல்லாத சந்தோஷத்தை அளித்தது. அவர்கள் இரட்சகரை ஆராதித்து திரும்பிச் சென்றனர். 
    
பூவில் ஒரு மீட்பர்  
இந்த உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களும் தவறு செய்கிறவர்களாகவே பிறக்கின்றனர். தவறு செய்யும் மனிதர்கள் பரிசுத்தமான தேவனிடத்தில் செல்லமுடியாது. அந்த பரிசுத்த தேவனிடத்தில் செல்லும் வழியாக கிறிஸ்து என்னும் இரட்சகர் பெத்லகேமில் பிறந்தார். பாவியான மனிதனை பரிசுத்த தேவனிடத்தில் கொண்டு செல்ல யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பரலோக சந்தோஷத்தை கண்டடைவார்கள். வழியாகிய இந்த கிறிஸ்துவை உள்ளத்தில் விசுவாசித்து நாவினால் அறிக்கையிட்டால், நித்திய மகிழ்ச்சியாகிய பரலோகவாழ்வை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். அவர் விண்ணக இறைவனாக இருந்தும் நம்மை மீட்கவே மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தார். 

அன்று அந்த விண்மீன் இந்த இரட்சகரைத்தான் காட்டியது. அங்கே அவர்கள் குழந்தையாகக் கண்டவர், பின்னாளில் கல்வாரி சிலுவையில் நமக்காக உயிர்கொடுத்தார், உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடிருக்கிறார்! 

- Sis. Sunija GoldTopics: Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil Sis. Sunija Gold

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download