‘மதில் மேல் பூனை’ என்பது ஒரு பொதுவான உவமை. பூனை வசதியாகவோ அல்லது பாதுகாப்பாகவோ உணரும்போது இருபுறமும் குதிக்கலாம். மேலும் அதை மனதில் தீர்மானிக்க நீண்ட நேரம் ஆகலாம். ஆம், முடிவெடுக்க முடியாத பூனைகளைப் போல் அங்கலாய்ப்போடு ஜனங்கள் இருக்கிறார்கள். “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது”
(யோவேல் 3:14).
அவமானகரமான நிகழ்வு
மோசே யோசுவாவுடன் சேர்ந்து பத்துக் கட்டளைகளைப் பெற சீனாய் மலைக்குச் சென்றபோது, ஆரோன் ஒரு கன்றுக்குட்டியை வணங்கும்படி மக்களை தவறாக வழிநடத்தினான். மோசே கற்பலகைகளை உடைத்து, ஆரோனையும் மக்களையும் கடிந்து கொண்டான். தேவனுடைய தீர்ப்பு மக்கள் மீது வந்தது. "பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்” (யாத்திராகமம் 32:26). லேவியர்கள் விரைவான, ஞானமான, சரியான மற்றும் பக்குவமான முடிவை எடுத்தார்கள்.
நிதானமான மனம்
விசுவாசிகள் தெளிவான மனதுடன் இருக்க வேண்டும் என்று பேதுரு எழுதுகிறார். அதாவது, புதுப்பிக்கப்பட்ட மனம் செயலுக்குத் தயாராக உள்ளது. “ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 1:13). கர்த்தருக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க லேவியர்களுக்கு அத்தகைய மனம் இருந்தது. தாவீதும் அவனது ஆட்களும் எல்லாவற்றையும் இழந்தனர், அவர்கள் நிதானமான மனதுடன் இல்லை, ஆனால் குழப்பமடைந்து உணர்ச்சிவசப்பட்டார்கள். தாவீதைக் கல்லெறிய விரும்பினர். இருப்பினும், தாவீது நிதானமான மனதுடன் கர்த்தருக்குள் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான் (1 சாமுவேல் 30:6). முட்டாள்தனமான சிலை வழிபாட்டை நிறுத்த ஆரோன் தெளிந்த புத்தியுடன் இருக்கவில்லை.
தீர்மானம்
தேவனை உலக இரட்சகராகவும், சத்தியத்தின் நற்செய்தியாகவும் ஏற்றுக்கொள்வது அல்லது அங்கீகரிப்பது போதாது. ஒரு முடிவை எடுக்கும் போது, தேவ சித்தத்தின் படி செயல்படுவது மற்றும் முழுமையான அர்ப்பணிப்போடு இருப்பது மிக அவசியம். நல்ல எண்ணம் நல்ல தீர்மானங்கள் அல்ல. உறுதியற்ற ஆரோன் மக்களை முட்டாள்தனமான முடிவுகளை எடுக்க அனுமதித்தான்.
செயல்
லேவியர்கள் செயல்பட வேண்டியிருந்தது. அவர்களால் வெறுமனே பார்வையாளர்களாக நிற்க முடியாது. மோசேயின் அழைப்பைக் கேட்டு, அவர்கள் மோசேயின் பக்கம் வந்து பதிலளித்தார்கள். நடவடிக்கை இல்லாத தீர்மானங்கள் முடங்கி விடுகிறது. நல்ல தீர்மானங்கள் பொறுப்பான நடவடிக்கை மூலமாக எடுக்கப்படும்.
பிரித்தல்
தீமையிலிருந்து விலகி தேவனுக்காக பிரிந்து நிற்பதாகும். லேவியர்கள் மற்றவர்களிடமிருந்து பிரிந்து இருக்க வேண்டியிருந்தது. அதாவது உலகில் உள்ள எல்லா உறவுகளையும் விட தேவனை அதிகமாக நேசிப்பது என்று அர்த்தம். தேவன் மீதுள்ள அன்போடு ஒப்பிடும் போது மக்கள் மீதான அன்பு வெறுப்பாகவே தோன்றும் (மத்தேயு 10:34-39).
நான் சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்