பாதரட்சையைக் கழற்றிப்போடு

கர்த்தர் மோசேயிடம் "உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி" என்றார் (யாத்திராகமம் 3:5); அவர் யோசுவாவிடம் அதையே சொன்னார் (யோசுவா 5:15). சபைக்குள் காலணிகளோடு செல்வது சரியானதா என பலர் வியப்பதுண்டு.

பரிசுத்த தெய்வம்:
தேவன் பரிசுத்தமானவர், மனிதர்கள் அவரை நெருங்க முடியாது.  எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும்.  மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது, எனவே தேவனுக்கு சமமாக வாய்ப்பே இல்லை. இருப்பினும், தேவன் மனிதர்களோடு நல் ஐக்கியத்தை அளிக்கிறார்.

காலணிகளைக் கழற்றவும்:
தேவன் மோசேக்கும் யோசுவாவுக்கும் தோன்றியபோது, ​​கர்த்தர் அவர்களுடைய செருப்புகளைக் கழற்றும்படி கட்டளையிட்டார்.

பணிவு:
செருப்பைக் கழற்றுவது தாழ்மையின் வெளிப்பாடு.  எல்லா மனிதர்களும் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்ல தேவனை பணிவுடன் அணுக வேண்டும்.

தேவ பிரசன்னம்:
தங்கள் காலணிகளைக் கழற்றி, மோசேயும் யோசுவாவும் தேவனின் பிரசன்னத்தை ஒப்புக்கொண்டனர்.  தேவ சமூகம் பரிசுத்தமானது என்பதால் மரியாதையும் கனமும் வழங்கப்படுகிறது.

மாசு:
பழங்காலத்தில், மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்வார்கள், ஆகையால் கால்கள் அழுக்காகிவிடும்.  எனவே, அவர்கள் வீட்டிற்கு வந்ததும் கால் கழுவும் பணி நடந்தது; மாத்திரமல்ல அவர்களின் காலணிகளும் அழுக்காக இருக்கும். ஆனால் மொத்தத்தில் மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது ஒன்று தான், தேவனை அணுகும்போது மாசற்றவர்களாய் அவர் சமூகத்தில் காணப்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
 
அவசர அவசரமாக அல்ல:
செருப்பைக் கழற்றி விட்டு செல்லும் போது நீண்ட நேரம் உறவாடவும், விருந்து, உரையாடல் என ஐக்கியம் கொள்ளவும் முடியும். மோசே அவசர அவசரமாக செவிசாய்ப்பதை தேவன் விரும்பாமல் பொறுமையோடு நிதானமாக அவர் சமூகத்தில் காணப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

அர்ப்பணம்:
காலணிகளை கழற்றவது என்பது பாதிப்பு அல்லது ஆபத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் மற்றவர்களின் தயவில் இருப்பது என்பதும் பொருள்படும். ஆம், இது நம்பிக்கை மற்றும் சரணாகதியின் அறிக்கை எனலாம், முழுமையாக சரணடைதல்.  இது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஒப்படைப்பதற்கான அல்லது அர்ப்பணிப்பதற்கான விருப்பம் ஆகும்.

 உரிமைகளை பறித்தல்:
 ஒரு நபர் காலணிகளை கழற்றினால், அது உரிமைகளை பறிப்பதையும் குறிக்கிறது. மோசே தனது உரிமைகளை விட்டுக்கொடுத்து, தேவனின் கட்டளையை நிறைவேற்ற தயார் என்பதன் அடையாளம் ஆகும்.

 உள்ளான பரிசுத்தம்:
 வெளிப்புற சடங்குகள் மற்றும் மரபுகள் அர்த்தத்தை அளிக்கலாம் ஆனால் ஒரு நபரை இரட்சிக்கவோ மாற்றவோ முடியாது.  அது சரீர விருத்தசேதனத்தில் அல்ல, இருதயத்தின் விருத்தசேதனத்தில் அல்லவா உள்ளது (எரேமியா 4:4).

 கலாச்சார சூழல்கள்:
 சில இடங்களில், வெப்பமான காலநிலை காரணமாக, சபை ஆராதனையின் போது காலணிகளை கழற்றுவது எளிதானது மற்றும் நல்லது.  ஆனால் கடுமையான பனி இருக்கும் இடங்களில், காலணிகளை அகற்றுவது அசௌகரியமாகவும், ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகவும் கூட இருக்கலாம்.

 நான் தூய்மையான இருதயம் காணப்பட விரும்புகிறேனா அல்லது வெளிப்புற மரபுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download