இஸ்ரவேல் தேசத்தைப் போலவே கர்த்தருக்கு கீழ்ப்படியும் ஒழுங்கை இகழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் (எபிரெயர் 12: 5,6). தேவன் தம் பிள்ளைகளை நேசிக்கிறார், ஆகவே தான் அவர் தம்முடைய அன்பு, அக்கறை மற்றும் கவனிப்பின் நிமித்தமாக அவர்களை ஒழுங்குபடுத்துகிறார். அதற்காக அவரது அன்பை நாம் நமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நாம் எடுத்தோமேயென்றால் அவரின் அன்பு, பொறுமை, இரக்கம் மற்றும் அக்கறை ஆகியவை பிற விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
எசேக்கியேல் இஸ்ரவேல் தேசத்தை எச்சரித்தார். அவர்கள் தேவனின் ஒழுங்கை மீறுகிறார்கள் அல்லது தங்களுக்கேற்றப்படி அதை வளைத்துக் கொள்கிறார்கள். மேலும் கடுமையான தண்டனையை விளைவித்த ‘ஒழுக்கத்தின் தடியை’ அவர்கள் கேலி செய்தனர். மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு, பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும், அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும், அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும், ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள். யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (எசேக்கியேல் 21: 12,13).
‘தடியா’ ‘வாளா’ என்பதற்கு இடையேயான தேர்வு நம்முடையது. முதலாவதாக, நாம் வழிதவறும்போது ‘சிவப்புக் கொடியை’ உயர்த்தும் மனசாட்சியை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இரண்டாவதாக, தேவனுடைய வார்த்தை நம் வாழ்க்கை பயணத்திற்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நாம் படித்து அதை தியானிக்கத் தவறினால், அது நமக்கு நாமே விளைவிக்கும் ஆபத்து. மூன்றாவதாக, தேவனுடைய ஆவியானவர் கர்த்தருடைய போதனைகளை நினைவுகூருகிறார். நாம் அவற்றை புறக்கணித்தாலோ அல்லது பரிசுத்த ஆவியின் உணர்த்துதலுக்கு உணர்வற்று இருந்தாலோ, அவர் நம்மை ஒழுங்குப்படுத்துகிறார். நான்காவதாக, தேவன் ‘ஒழுங்கின் தடியை’ கையிலெடுக்கிறார், அது நோயாக அல்லது எதிலும் தோல்வியாக அல்லது விபத்தாக அல்லது ஆசீர்வாதங்களில் தாமதம் அடைவதாக இருக்கலாம். ஐந்தாவதாக, இந்த வழிமுறைகள் மற்றும் இந்த அணுகுமுறைகள் அனைத்தும் நம் கவனத்தை ஈர்க்கத் தவறும் போது, தேவன் தன்னுடைய இறுதி ஆயுதமாக வாளை எடுக்கிறார். வாள் என்பது எதைக் குறிக்கிறது என்றால் கடினமான அடி அதாவது இரத்தம் சிந்தி மனிதனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். தனிப்பட்ட இழப்பைக் கொண்டுவருவதன் மூலம் நிஜ வாழ்விற்குள்ளும் மனந்திரும்புதலுக்கும் நாம் விழிப்புணர்வை அடைகிறோம்.
தேவனிடமிருந்து வரும் ‘ஒழுங்கின் தடிக்கு’ என் செயல்பாடு என்ன? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்