இறைவனடி சேருதல்


சிலர் கங்கை நதிக்கரைப் போன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் இறக்க விரும்புகிறார்கள்.  அவர்களின் நம்பிக்கையின்படி, அங்கு இறந்தவர்கள், கடவுளை திருமணம் செய்து, பிறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.   வாரணாசியில் இறைவனடி சேர்தல் என்பது போன்றதான பல வசதிகள் அடங்கிய அறைகள் உள்ளன, இப்படி மோட்சம் அடைய விரும்புபவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய அவர்களின் அன்பான குடும்ப உறுப்பினர்களாலே அழைத்து வரப்படுகிறார்கள். 

இறப்பதற்கு நியமிக்கப்பட்டவர்: 
இவ்வுலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இறக்க நேரிடும் என்று வேதாகமம் போதிக்கிறது (எபிரெயர் 9:27). மனிதர்களால் அழிக்கப்பட வேண்டிய கடைசி எதிரி மரணம் என்று பவுல் விவரிக்கிறார் (1 கொரிந்தியர் 15:26).

பொறுப்பு:  
மரணம் என்பது மனித வாழ்வின் முடிவல்ல.  தேவன் மனிதர்களைப் படைத்தது மரணத்திற்கு அப்பால் வாழ்வதற்காகத்தான்.   இறந்த பிறகு நியாத்தீர்ப்பு உண்டு.   புனித நதிகளின் கரையில் இறக்கும் பலர், மரணத்தை மனித வாழ்க்கையிலிருந்து துண்டித்து, ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம், அதாவது தெய்வத்தை திருமணம் செய்வது அல்லது ஒன்றிணைவது அல்லது கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது என்று நினைக்கிறார்கள்.   மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது வாழ்க்கை வாழ்ந்த விதத்திற்கான வெகுமதியாகும்.   பாவத்திலிருந்து மனந்திரும்பி, தங்கள் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றவர்கள் பரலோகத்தில் என்றென்றும் தேவனுடன் வாழ்வார்கள்.   மற்றவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளிப்படுத்துதல் 21:8).

பரலோகம்:   
பரிசுத்த தேவன் அவருடைய வாசஸ்தலமான பரலோகத்தில் வசிக்கிறார்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாகபலியாக மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலின் காரணமாக அவர் விசுவாசமுள்ள மனிதர்களை நித்தியத்தில் பெறுகிறார். 

உயிர்த்தெழுதல்:  
மறுபிறவி இல்லை, ஆன்மா மனித உடலை 8.4 மில்லியன் உயிரினங்களாக மாற்றுகிறது என்ற நம்பிக்கை உள்ளது.   கிறிஸ்துவுக்குள் மரிக்கும் அனைவரும் உயிர்த்தெழுந்து, கர்த்தர் வரும்போது அவரைச் சந்திக்கும்படி மாற்றப்படுவார்கள்.   தேவனை நிராகரித்த எஞ்சிய மனித இனமும் தேவனின் தீர்ப்பை எதிர்கொள்ள உயிர்த்தெழுப்பப்படும். 

வெளிப்புற உண்மைகள்:  
ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது மங்களகரமான நேரத்திலோ அல்லது அன்பானவர்களின் கரங்களிலோ மரணிப்பது, (தவறான மத ஜிஹாத்கள் உட்பட) தெய்வீகக் கடமையைச் செய்வது என இதெல்லாம் பரலோகத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.  அப்படியானால், ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது தேசத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே இரட்சிப்புக்கு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்.   இரட்சிப்பின் சுவிசேஷம் உலகளாவியது மற்றும் விசுவாசிக்கிற அனைவருக்குமானது.    

இயேசுவின் மீதுள்ள விசுவாசம் பரலோகத்தில் நித்திய வாழ்வுக்கு உத்தரவாதம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download