ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தேவையில்லை என வீசி எறியும் பொருட்களைச் சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். அவர் ஒரு கை வண்டி வைத்திருந்தார், அதில் அவர் அனைத்து பொருட்களையும் வைத்திருப்பார். லோஹாவத் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவரை கேலி செய்ததாகவும், மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் மனவேதனையும், அவமானமும் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் (NDTV ஜூன் 24, 2024). கேலி செய்தல், கிண்டலடித்தல் மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவை ஒரு நபரின் ஆவி, அபிலாஷைகள், லட்சியங்கள் மற்றும் நம்பிக்கையைக் கொன்றுவிடும். இளைஞர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு கும்பலாக சேர்ந்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு தீங்கு விளைவிக்கலாம்.
எலிசா மற்றும் கட்டுக்கடங்காத இளைஞர்கள்:
எலிசா சுமார் 25 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளம் தீர்க்கதரிசி. கனத்த இதயத்துடன், தனது வழிகாட்டியான எலியா அக்கினி ரதங்களில் ஏறி பரலோகத்திற்கு சென்றதைப் பார்த்த பிறகு, அவர் பெத்தேலுக்குத் திரும்புகிறார். எலியா அவருக்கு ஒரு நல்ல நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி, ஆனால் அவர் மறைந்தார். எல்லாம் சிந்தித்துக் கொண்டே செல்லும் போது, உண்மையான தேவனை எதிர்த்த கட்டுக்கடங்காத இளைஞர்கள், மலைப்பாதையில் அவரைத் தடுத்தனர். அவர் வழுக்கையாக இருந்ததால் அவரை கிண்டல் செய்தார்கள், எலியா பரலோகத்திற்கு சென்றது போல் அவரையும் போகச் சொன்னார்கள் (2 இராஜாக்கள் 2:23-25). இளைஞர்கள் தன்னைத் தாக்கவும், தீங்கு செய்யவும், கொல்லவும் முடியும் என்பதைக் கண்டபோது, அவர் அவர்களை சபித்தார். அப்போது இரண்டு கரடிகள் தோன்றின, இளைஞர்கள் கரடிகளை அடக்க முயன்றனர். ஆனால் அவர்களில் 42 பேரை பீறிப்போட்டது. எச்சரிப்பாகவும் தண்டனையாகவும் காட்டு விலங்குகளை அனுப்ப தேவன் எச்சரித்திருந்தார் (லேவியராகமம் 26:22)
ஏளனம்
பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்களையோ அல்லது குடும்பத்தையோ கேலி செய்ய இளைஞர்கள் ஒன்றுகூடலாம். எலிசா ஜீவனுள்ள தேவன் மீதான நம்பிக்கைக்காகவும், தேவனின் கட்டளைப்படி மழையை நிறுத்திய எலியாவின் கூட்டாளியாகவும் இருந்ததற்காக கேலி செய்யப்பட்டார். வயதானவர் ஏளனம் செய்யப்பட்டார், ஏனென்றால் அவர் ஏழை, தனிமை, சக்தியற்றவர், தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை.
உழைப்பின் கண்ணியம்
சிலர் தங்கள் வேலை அல்லது தொழில் அல்லது வேலைக்காக அவமானப்படுத்தப்படுகிறார்கள். அசுத்தம் செய்பவர்கள், குப்பையாக்குகிறவர்கள் உயர் அடுக்கு மக்களாக மதிக்கப்படுகிறார்கள், ஆனால் சுத்தம் செய்பவர்கள் தாழ்ந்த ஜாதி என்று ஏளனம் செய்யப்படும் கலாச்சாரத்தில் வாழ்கிறோம், வயதான முதியவர் நகைச்சுவைக்கு ஆளானார். வீடியோ எடுத்து வைரலாக்கியது அவருக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவரது வேலையும் அவரது ஆளுமையும் கேவலப்படுத்தப்பட்டது
ஏழைகளையும் துரதிர்ஷ்டசாலிகளையும் காயப்படுத்தவும் கேலி செய்யவும் நான் ஒரு உணர்வற்ற நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்