தடங்கலினால் தவிப்பு

அக்டோபர் 4, 2021 அன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சமூக ஊடக தளங்களில் அதாவது வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பல மணி நேரம் இடையூறு ஏற்பட்டது. உலகெங்கிலும் தங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ந்து உள்ளவர்கள் சமூக ஊடகத் தொடர்பில்லாமல் மிகவும் மோசமாகவும் வருத்தமாகவும் உணர்ந்தனர். பல்வேறு வகையான எதிர்வினைகளும் இருந்தன.

1) ஏமாற்றம்:
 'ஆன்லைனில்' இருப்பது தான் உயிருடன் இருப்பது போல் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மிகை இணைப்புள்ள இளைஞர்கள் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும், உதவி அற்றவர்களாகவும், குழப்பமாகவும் இருந்தனர்.

2) கோபம்:
சிலர் அதற்கான உபகரணங்கள் மீது, நிறுவனங்கள் மீது மற்றும் அரசாங்கங்கள் மீது கோபமடைந்தனர். முதலில், அவர்களின் கோபம் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மீது இருந்தது. சிலர் தங்கள் ஸ்மார்ட்போன்களை உடைத்து நொறுக்கினர். அதாவது தங்கள் ஸ்மார்ட்போன்கள் தான் சரியாக வேலை செய்யவில்லையோ அல்லது காலாவதியானதோ, ஒருவேளை போனையே மாற்ற வேண்டுமோ என்றளவிற்கு அவர்கள் நினைத்தார்கள். இரண்டாவதாக, அவர்கள் சேவை வழங்குநர்கள் மீது கோபமடைந்தனர். அவர்களின் இணைய சேவை தரமற்றதாக எண்ணினர். மூன்றாவதாக, அரசாங்கம் தங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எல்லாரும் தங்கள் சந்தோஷத்தைப் பறித்துக் கொண்டதாக எண்ணினார்கள். 

3) அலட்சியம்:
சிலர் அதை அமைதியாக அல்லது இதை ஒரு பெரிய விஷயமாக எண்ணவில்லை. இது போன்ற விஷயங்கள் எப்போதாவது நடக்க வேண்டும். எத்தனை பேர் நிலைமையை தீவிரமாக எதிர்கொள்வார்கள் என்பதை அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியும், அதே நேரத்தில் அவர்களே தங்கள் முன்னேற்றத்தை எடுக்க முடியும்.

4) விருப்பு வெறுப்பற்ற நிலை:
ஒரு சிலர் இதை எல்லாம் விதி அல்லது என்ன செய்வது தலையெழுத்தின் படி தானே நடக்கும் என்பதாக எடுத்துக் கொள்வதுண்டு. அதாவது வலியும் வேதனையையும் கடந்து தானே ஆக வேண்டும் என்று ஏற்றுக்கொண்டனர், ஆனால் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை.

5) பிரதிபலிப்பு:
ஒரு சிலர் அந்த சூழ்நிலையை அமைதியாக கடந்தனர். "வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வு காலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்" (பிரசங்கி 7:14). ஆம், தகவல் தொடர்பு கருவிக்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தனர், ஆனால் தகவல் தொடர்பு என்பது கருவிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்தவர்களாக இருந்தனர், அது ஒரு உறவு என்பதை புரிந்தவர்களாக இருந்தனர். பல்வேறு நபர்களுடனான உறவுகளை மதிப்பிடுவதற்கான நேரம் இது என்பதை கருத்தில் கொண்டனர். உறவுகள் பற்றியும் முன்னுரிமைகள் எது என்பதும் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான யதார்த்தத்தையும் சரிபார்க்க வேண்டிய நேரமாக இதை எண்ணினர்.

வாழ்க்கையில் சில இடையூறுகளோ அல்லது சிக்கலோ ஏற்படும்போது அதை கருத்தில் கொள்வதும் அல்லது அதற்கு பிரதிபலிப்பதும் அல்லது சுய மதிப்பீடு செய்வதும் கிறிஸ்தவ வாழ்க்கை முறையாகும். நோய், இழப்பு, தோல்வி, மூடிய கதவுகள், நிராகரிப்பு... என அனைத்தும் நம்மை தேவனிடம் நெருங்கவும், அவருடைய சித்தத்தையும் வழியையும் தேட உதவுகிறது. இது நமது வாழ்க்கை நோக்கங்களை மாற்றியமைக்கவும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் உதவுகிறது.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களை கருத்தில் கொண்டு அதை என் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download