பல தலைவர்கள் நன்றாகத் தொடங்கினாலும் இறுதியில் தடுமாறி விடுகிறார்கள்; இதோ மூன்று உதாரணங்கள்:
மோசே:
மிகப் பெரிய தீர்க்கதரிசி, பிரமாணத்தை வழங்கியவன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல முடியவில்லை, ஆனால் நேபோ மலையிலிருந்து பார்க்க மட்டுமே முடிந்தது (உபாகமம் 34:1-12). ஏனெனில் கர்த்தருடைய பரிசுத்தத்தை நிலைநிறுத்தாமல் மோசே வனாந்தரத்திலுள்ள காதேசிலே தன் நம்பிக்கையை உடைத்துவிட்டான் என்று கர்த்தர் கூறினார். ஆம், கன்மலையை இரண்டு தரம் அடித்தது மாத்திரமல்லாமல் ஜனங்களைப் பார்த்து 'கலகக்காரரே' என்பதாக கண்டனம் செய்தான் (உபாகமம் 32:51-52; எண்ணாகமம் 20).
யோசபாத்:
யோசபாத் ஒரு நல்ல ராஜா, உண்மையுள்ளவன், செல்வந்தன், ஒரு பெரிய படையை வழிநடத்தி யூதாவின் நான்காவது ராஜாவாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தான் (2 நாளாகமம் 17:3-19). ஆகாப் வடக்கு இஸ்ரவேலின் ராஜா, துன்மார்க்கன், நீதியுள்ள யோசபாத் ஆகாபின் மகளுக்கு தன் மகனைக் கொடுப்பதில் ஆகாபுடன் திருமண உடன்படிக்கை செய்தான் (2 நாளாகமம் 18:1). பின்னர் அவன் சமாரியாவிற்கு விஜயம் செய்தான், மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத் நகரத்தை மீண்டும் கைப்பற்ற யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தான் (2 நாளாகமம் 18:3). யோசபாத் கர்த்தரிடம் விசாரிக்க விரும்பினான், 400 தீர்க்கதரிசிகள் வெற்றியை முன்னறிவித்தனர், ஆனால் அதே நேரத்தில் மிகாயா படைகளின் தலைவர் இறந்துவிடுவார் என்று சுட்டிக்காட்டினான். தந்திரமான ஆகாப் யோசபாத்தை ஏமாற்றி ஒரு ராஜவஸ்திரத்தை தரிக்க வைத்து யுத்தத்தில் நிறுத்தி வைப்பான்; ஆனாலும் தேவன் யோசபாத்தை மரணத்திலிருந்து காப்பாற்றினார். யெகூ தீர்க்கதரிசி யோசபாத்தைக் கண்டித்தான் (2 நாளாகமம் 19:2). பின்பதாக யோசபாத் மரித்து தன் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணப்பட்டான். ஆகாபின் மகள் தாவீதின் வம்சத்திலிருந்த ஒருவளைத் தவிர அனைவரையும் கொலைச் செய்தாள் (2 நாளாகமம் 22:10-12). "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?" (2 கொரிந்தியர் 6:14). ஆகாபுடனான பிணைப்பு யோசபாத்தை கீழே இழுத்தது.
யோசியா:
யோசியா ஒரு பெரிய ராஜாவும் சீர்திருத்தவாதியுமானவன். "கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை" (2 இராஜாக்கள் 23:25). ஆனாலும் அவனுக்கு பகுத்தறியும் திறன் இல்லை. பார்வோன் (எகிப்தின் ராஜா) நேகோ அசீரியாவின் ராஜாவைத் தாக்க கிளம்பினான். யோசியா அவனுக்கு விரோதமாக கிளம்பியதால் எகிப்தின் ராஜா மிக தெளிவாக யோசியாவை தாக்கவில்லை, அசீரியா ராஜாவைதான் தாக்க போவதாக எச்சரித்தான் (2 நாளாகமம் 35:22). ஆனாலும் யோசியா தேவையில்லாமல் அவனுடன் சண்டையிடச் சென்று மெகிதோவிலே வில்வீரர்கள் அம்பு எய்ததில் காயப்பட்டு இறந்தான் (2 ராஜாக்கள் 23:29).
நல்ல ஆரம்பம், உறுதியான (நிலையான) ஓட்டம் மற்றும் வெற்றிக்கான இறுதிக் கோட்டினை கடக்குதல் ஆகியவை கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்றியமையாதது.
நான் என் ஓட்டத்தில் தள்ளாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்