ஒரு சுவாரஸ்யமான இந்திய கட்டுக்கதை உள்ளது. காட்டில் பலத்த மழை பெய்தது. பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பியது, குளிருக்கு இதமாக தங்களை வைத்துக் கொண்டது. ஒரு குரங்கு வந்து கூடு அருகே உள்ள கிளையில் அமர்ந்தது. குளிரில் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த பறவைகள் குரங்கிடம்; நீ ஏன் எங்களைப் போல கூடு கட்டிக் கொள்ள கூடாது? அப்போது குளிரில் இருந்து பாதுகாக்கப்படுவாய் அல்லவா! மழையின் போது இப்படி நடுங்க வேண்டியதில்லையே என்றது. அதற்கு குரங்கு; எனக்கு கூடு கட்டத் தெரியாது. ஆனால் ஒரு கூட்டை எப்படி அழிக்க வேண்டும் என்று தெரியும் என்று சொல்லியப்படியே, சிறிது நேரத்திலேயே குரங்கு பறவைகளின் கூட்டை பிய்த்து போட்டது, பறவைகள் பயத்தில் பறந்தன.
திருடவும், கொல்லவும், அழிக்கவும்:
"திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார். இந்த குரங்கின் நடத்தை கூட அப்படி தானே இருந்தது. நோக்கமும் ஊக்கமும் எப்போதும் எதிர்மறையானவை. சாத்தான் இயல்பிலேயே தீயவன் மற்றும் பொல்லாதவன், ஒருபோதும் நல்ல நோக்கங்களைக் கொண்டிருக்க முடியாது, எனவே, நன்மை செய்ய முடியாது.
பொறாமை:
லூசிபர் தேவன் மீது பொறாமை கொண்டான், எனவே தன்னை உயர்த்திக் கொள்ள விரும்பினான், மேலும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலாக தனது சிம்மாசனத்தைப் பெற விரும்பினான் (ஏசாயா 14:12-14). தேவன் ஒருவரே துதிக்குப் பாத்திரர், அவரே எல்லா புகழுக்கும் தகுதியுடையவர் என்பதில் அவன் பொறாமை கொண்டான்; அதுமாத்திரமல்ல எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினான். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக, அவன் பெருமை கொண்டான். எனவே, அவன் பரலோகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டான். தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, அந்த முதல் மனித தம்பதிகள் மீதும் தேவன் அவர்களுடன் கொண்டிருந்த ஐக்கியத்தையும் கண்டு பொறாமை கொண்டான். தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ய அவர்களை ஏமாற்றினான்.
கொடுமையில் இன்பம்:
இரக்கமின்மை, மிருகத்தனம் மற்றும் பிறரின் வலியையும் துன்பத்தையும் கண்டு ஆனந்தம் கொள்வது சாத்தானிய இயல்பு. அவன் மனிதர்களுக்கு மகத்தான வலி, துன்பம், இழப்பு மற்றும் தோல்வியை நோக்கமாகக் கொண்டிருந்தான். லட்சக்கணக்கானோர் துன்பத்தில் தவிக்கும்போது, சாத்தான் அதைக் குறித்து சந்தோஷப்படுகிறான். அன்பு "அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்" (1 கொரிந்தியர் 13:6).
தனிப்பட்ட அன்பும் அரவணைப்பும்:
தேவன் அன்பானவர் அவர் முதலில் நம்மை நேசித்தார் (1 யோவான் 4:8). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அக்கறையையும் அரவணைப்பையையும் வெளிப்படுத்துவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தினார்; மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்றவர்கள் (மத்தேயு 9:36). தேவ அன்பு மக்களை நல்லதைச் செய்ய தூண்டுவதன் மூலம் ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்களாக மாற்றுகிறது (கலாத்தியர் 6:9-10).
உபத்திரவம்:
மிஷனரிகள் தங்கள் சேவையின் மூலம் உழைக்கிறார்கள், தியாகம் செய்கிறார்கள் மற்றும் சமூகங்களை உயர்த்துகிறார்கள். கிறிஸ்தவ எதிர்ப்பு சக்திகள் திருச்சபைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் கல்லறைகளை கூட அழிக்கின்றன.
எதிர்ப்பின் சூழலில் அல்லது எதிர்ப்பின் மத்தியில் நல்லது செய்வதில் நான் சோர்வடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்