நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி.. எபிரெயர் 12:12
நெகிழ்ந்த என்றால் சோர்ந்துபோன, பெலன் அற்ற நிலையில் இருப்பது..தளர்ந்த தள்ளாடுகிற நிலை..கைகள் சோர்ந்துப்போகும்போது எதையும் செய்ய இயலாது..சரீரம் முழுவதையும் தாங்கிக்கொண்டிருப்பது முழங்கால்கள்..முழங்கால்கள் தளர்ந்து காணப்பட்டால் சரீரம் முழுவதும் வேதனை நிறைந்ததாக காணப்படும்..
உங்கள் நெகிழ்ந்த கைளை நிமிர்த்துங்கள் என்று ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார்..வெள்ளத்தினூடே சென்றுக்கொண்டிருக்கலாம்..நீர் பிளந்து வழி விடும்..ஆண்டவர் உங்களை வெற்றிக்கு வழிநடத்துவார்..உங்க கால்கள் வழி தவறாதிருக்கட்டும்.. ஒரு கப்பல், கொந்தளிக்கும் கடலிலோ, அமைதிக்கடலிலோ, வெயிலடிக்கும் பொழுதோ மழையிலோ அயராது முன் செல்வதுபோல் முன்னேறிச் செல்லுங்கள்..தளர்ந்து விடாதீங்க.. நீங்கள் நடந்து செல்ல உங்க முழங்கால்களுக்கு பெலன் தருவார்..நிமிரச்செய்வார்..உங்களை பெலப்படுத்துகிற நிமிரச் செய்கிற ஆண்டவரை பிடித்து கொள்ளுங்கள்..!!!
Pr.Mrs.Kirubai Anthony