தொடர் - 9
“பக்தி மயக்கமா”? எனக்கேட்ட கவிதாவை உற்று பார்த்தாள் குளோரி. மெல்ல அவள் உதடுகள் முணுமுணுத்தன. “அவரும் இப்படித்தான் சொல்வார் சில விநாடிகள் அங்கு மயான அமைதி நிலவியது. அமைதியை கலைத்தாள் கவிதா.
குளோரி! நான் உன் நெருங்கிய சிநேகிதி தானே உண்மையைச் சொல், அவருடைய அதாவது உண் கணவருடைய நினைவு உனக்கு வருவதில்லையா? கணவன் மனைவியாக ஜோடியாகச் செல்லும் மக்களைப் பார்க்கும் போது குழந்தைகளைக் காணும்போது உன் மனதில் ஏக்கம் இல்லையா?”' குளோரியின் நாடியைத் தன்கரத்தால் தூக்கியபடி அவள் கண்களை இமைக்காமல் பார்த்தாள் மீண்டும் மெளனம்.
குளோரியின் கண்கள் கலங்கின, நினைவு வரும் ஆனால்...” ஒன்றும் பேசாமலேயே நிறுத்தினாள்.
தன் தோழியை பாசத்துடன் மெல்ல அணைத்த கவிதா, 'குளோரி! நாம் வாழும் இக்காலம் கடைசிகாலம் கள்ளப் போதனைகளுக்குக் குறைவில்லை. கள்ளத்தீர்க்கதரிசனத்திற்கும் கணக்கில்லை. தீர்க்க தரிசனம் கூறுகிறார்களே என்பாய். சாத்தானுக்கும் வல்லமையுண்டு என்பதை மறந்து விடாதே. சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. எனவே நாம் மிகவும் கவனமாக வாழவேண்டும். நம்மை வழிநடத்தும் பொறுப்பை இயேசு கிறிஸ்துவிடம் விட்டுவிட வேண்டும், வேதமே வழிகாட்டி! ஆண்டவர் நமக்கு குடும்பப் பொறுப்பை கொடுக்கும்போது அதை செவ்வனே நிறைவேற்ற வேண்டாமா? குடிகாரக் கணவனைக் கூட பிரிந்து வந்தால் அவன் திருந்தமாட்டான். அதிகமாகக் குடியில் மூழ்கி மடிந்து போவான். இறைவழிபாடும் நாம் செலுத்தும் அன்புமே மாற்றமுடியும்?
கவிதா அவர் மிகவும் நல்லவர். ஒரு கெட்ட பழக்கமுமில்லை, சபைப் பிரிவுதான் எங்கள் பிரிவுக்குக் காரணம்”
அப்படிங்களா தாயே! கேலியாக சிரித்தாள். பின், ஆவியில் அனலுள்ள சபை, என்று நீ கூறும் சபையில் கணவனை பிரிந்து நீ வாழ்வது தெரியுமா?” எனக்கேட்டாள்.
தெரியும்?
அவர்கள் உங்களை இணைக்க ஒரு முயற்சியும் செய்யவில்லையா? தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்று தானே வேதம் கூறுகிறது, அப்படியானால் வேதத்திற்குப் புறம்பாக நடக்கிறார்கள் என்று தானே பொருள்? ஆத்திரமாகச் சொன்னவள், அது சரி நமக்கெதற்கு அந்த பேச்சு! உன் வாழ்க்கை பிரச்சனக்கு வருவோம், உன் கணவரோடு சேர்ந்துவாழ முயற்சி செய்!”
கவிதா எனக்கு பலமுறை அறிவுரை கூறிப்பார்த்தார். என் பிடிவாதப் போக்கைக் கண்ட அவர் உன் மயக்கம் தீர்ந்ததும் வா, அதுவரை பொறுமையோடு. காத்திருக்கிறேன் எனக் கூறிவிட்டு கோவை சென்று விட்டார். அங்குதான் வேலை பார்க்கிறார்.?” கண்ணீர் முத்துக்கள் உருண்டன.
கவிதா ஆவிக்குரிய வளர்ச்சியில் தடுமாற்றமின்றி வளர்கிறாயடி!'” என்றாள். |
அந்தப் பெருமை... என் தந்தை இயேசுவையும், கல்லூரி வாழ்வில் எனக்காக ஜெபித்த அன்புத் தோழி எனக்குக் கிடைத்த அருமைத் தோழி குளோரியையும், ஜாய்ஸியையும் சேரும்
ஜாய்ஸி... ஜாய்ஸி! எந்த ஜாய்ஸி?'' அதிர்ச்சியுற்றவள் போல் கேட்டாள் குளோரி.
மிஸ்டர் டேவிட் அவர்களின் ஒரே மகள்! மிஸிஸ் ஜோசப் உனக்கு ஜாய்ஸியைத் தெரியுமா?
தெரியுமாவா? என் கணவரின் தம்பி மனைவி அவர்களும் கோயம்புத்தூரில்தான் இருக்கிறார்கள்!””
கார் முகிலைக் கிழித்து கதிரவன் வெளிவரத் துடிப்பது போன்று எதிர்கால எதிர்பார்ப்புகள் எழுந்தன.
“குளோரி! கர்த்தர்... ரொம்ப... ரொம்ப... நல்லவர் நான்... உங்கள் இருவரையும் எப்படி இணைக்கிறது என்று நினைச்சேன். ஆண்டவர் வழி காட்டிட்டார். நாளை வெள்ளிக் கிழமைதானே நாம் இருவரும் உபவாசமிருந்து ஜெபிப்போம். ஜாய்ஸிக்கு கடிதம்போடுகிறேன்' என்றவள்,சரி குளோரி நேரமாகிறது வருகிறேன்” விடை பெற்றுப் புறப்பட்டாள்.
நாட்கள் நகர்ந்தன. இறைவன் திருவருளால் கவிதாவின் முயற்சியால் குளோரியும் அவள் கணவர் ராக் லான்ட் வசந்த்குமாரும் இணைந்தனர், மீண்டும் அவர்கள் வாழ்வில் வசந்தம் தோன்றியது.
சுதா பிரசவத்திற்காக வந்திருந்தாள். மஞ்சள் நிறமேறிய முகம். பூரித்த உடல் சுதா அழகாக இருந்தாள். அந்த வீட்டில் கலகலப்புத் தோன்றியது, தன் தங்கை விரும்பியவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்தாள், கவிதா, அந்த நா... பிரசவ நாளும் வந்தது. ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டாள். சுதா வலியால் துடித்தாள். “*அக்கா! எனக்கு பயமாயிருக்கு, என் கூடவே இரு.”” என்ற தங்கையின் வேண்டுகோளின்படி விடுப்பு எடுத்திருந்தாள் கவிதா. சுதா படும் வேதனை கவிதாவை பிழிந்தது டாக்டரம்மா மருந்துச் சீட்டுகளை மாறி மாறி கொடுக்க" ஹாஸ்பிடலுக்கும் மருந்து கடைக்குமாக அலைந்தார் தனராஜ். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. சுதா துவண்டாள். புதிய ஜீவன் இன்னும் வெளிவரவில்லை. டாக்டரம்மா, 'ஆப்பரேசன் செய்யாவிட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்து, என அறிவித்தார். தனராஜ் கலங்க மேரி கண்ணீர் வடிக்க, அனலில் இட்ட புழுவென கவிதா துடித்தாள். ஏதோ ஒரு வேகம் அவளை உந்தித் தள்ளியது. அவள் படுக்கை அருகே மண்டியிட்டாள். கண்ணீர் மாரி சொறிந்தாள். துக்கம் தொண்டையை அடைக்க விசுவாசம் வழிகாட்ட இயேசப்பா என் தங்கைக்காகவும் அருமைக் குழந்தைக்காகவும் ஸ்தோத்திரம் !'” என்று கூறியவள் முழங்காலில் நின்றபடி மனம் மெழுகுவர்த்தியென கரைய ஜெபித்தாள். ஆப்பரேசணுக்கான. ஏற்பாடுகள் நடந்தன. சுதா கொண்டுபோகப்பட்டாள். “அம்மா”? அலறல். ஒன்று வெடித்தது. ஆயத்தம் செய்து கொண்டிருந்த நர்சும், டாக்டரம்மாவும் விரைந்து செயல்பட்டனர். மறுநிமிடம் குவா' குவா' பிஞ்சுக் குரலில் அழுதான் குட்டிப் பையன்.
அதிசயம்! ஆனால் உண்மை'' எனக் கூறிய டாக்டரம்மா வெளியே வந்து தனராஜிடமும் மேரியிடமும் ஆப்ரேஷன் இல்லாமலேயே உங்களுக்குப் பேரன் பிறந்துவிட்டான்”? என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
“தேங்யூ ஜீசஸ் தேங்யூ'” கவிதாவின் இதழ்கள் டைப்அடித்தன.
குட்டிப் பையன் பாபு தன் குறு குறு கண்களை அடிப்பதும், சிரிப்பதும்,, திடீரென பெருங்குரலில் அழுவதும் அந்த வீட்டை மகிழ்ச்சிப் பூங்காவாக்கியது. அவன் பிஞ்சுக் கரங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஆனந்திப்பாள் கவிதா. சுதாவின் கணவன் வீட்டார் வந்து பார்த்து இருநாட்கள் இருந்து சென்றனர். குழந்தைப் பார்க்க வந்த ரவி ஒரு ரெடிமேட் உடையை பிரசண்ட் செய்துவிட்டு போய் விட்டான். மாதம் உருண்டது, சுதாவின் கணவரிடமிருந்து கடிதம் வந்தது. சுதாவையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல வருவதாகவும் குழந்தைக்கு கொடி, கொலுசு, மோதிரம், செயின் பவுன் எல்லாம் செய்து ஆயத்தமாக இருக்கும்படியும் எழுதியிருந்தான், உங்கப்பா சும்மா வெறுமனே அனுப்பி விடுவார். அதனால்தான் என்ன தேவையென எழுதியுள்ளேன் என்று குத்தலாக வேறு எழுதியிருந்தான். கடிதம் வீட்டை ஒரு கலக்கு கலக்கியது. செலவோ கட்டுக்கு மீறி சென்று கொண்டிருந்தநிலையில் விலையுயர்ந்த ஆடைகள், கொலுசு, மோதிரம் கொடி என, வாங்கிவிட்டார். செயினுக்கு என்ன செய்வது? திகைத்தார். சுதா கண்ணீர் வடித்தாள்.
அலுவலகம் முடிந்து வந்த கவிதா வீட்டின் சோக நிலைமையை உணர்ந்தாள். மேஜையின் மேலிருந்த கடிதம் விபரம் கூறியது. “குழந்தைச் செல்வம். உயிருக்குப் போராடி, மனைவி ஈன்றெடுத்துத் தரும் குழந்தை போதாதா? நகை, நட்டு, அது இது என்று பெண் வீட்டாரை கஷ்டிப்படுத்துகிறார்களே! மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டில் பணம் பழுக்கும் மரம் இருக்கும் என்ற நினைவு போலும். திருமணத்திற்கு வரதட்சணை அது...இது ... என்று வாங்குகிறார்கள். இந்தப் பணம் பறிப்பு திருமணத்தோடு முடிந்து விடுவதில்லை. முதல் கிறிஸ்மஸ், குழந்தைசீர் என்று தொடருகிறது” என்றெல்லாம் நினைத்த கவிதாவிற்கு. வாழ்க்கை வெறுத்தது. வீட்டின் நிலை, கடன் தொல்லை, வியாபார நிகழ்ச்சி நெருக்கடியான நிலை அனைத்தையும் உணர்ந்த கவிதா ஒரு முடிவுக்கு வந்தாள்:
திடீரென கத்தினான் குழந்தை பாபு! தூங்கித் தொலையேன்”: சிடுசிடுத்தாள் சுதா. கணவன் வீட்டார் மீது எழுந்த கோபத்தை குழந்தை மீது கொட்டினாள். கோபத்திற்கு வடிகால் வேண்டுமே! கவிதாவின் தாய் தொட்டிலை ஆட்டினாள். தொட்டிலை தாயிடமிருந்து வாங்கியவள். தொட்டிலை விலக்கி அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். தன் செயினைக் கழற்றினாள்.
அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை யூகித்த தாய் கவிதா! கழற்றாதே! வேண்டாம்!'” படபடத்தாள். அவளுக்கென இருப்பது அந்த செயின் தானே!
அக்கா! அக்கா! வேண்டாக்கா!?? கண்ணீரோடு ஓடி வந்து தடுத்தாள்.
கவிதாவோ செயினை பாபு கழுத்தில் அணிவித்தாள்.
மாடியிலிருந்து இறங்கி வந்த தனராஜ் இக்காட்சியைக் கண்டதும் கவிதா'' என அலறினார்.
இதன் தொடர்ச்சி மாயவலை கிழிந்தது என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.