ஒரு இளைஞன் யோகா பற்றியும் அதன் புதிய நுட்பத்தைப் பற்றியும் உற்சாகம் கொண்டிருந்தான். யோகா பயிற்சி பற்றி அவனது நண்பன் தான் அறிமுகப்படுத்தி இருந்தான்; ஒரு வருடத்திற்கும் மேலாக யோகா பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவனுடைய போதகர் அவனிடம்; 'நீங்கள் 12 ஆண்டுகளாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வருகிறீர்களே, தேவ வார்த்தையிலும் மற்றும் ஜெபத்திலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கிறீர்களா? ஆவிக்குரிய காரியங்களையும் இணைத்தாற்போல உடல் பயிற்சியை மேற்கொள்ளலாமே' என்றார். ஆனால் அந்த இளைஞனோ “யோகா எளிதாக இருக்கிறது, அது என்னை உற்சாகப்படுத்துகிறது” என்றான். அவனைப் பொறுத்தவரை, ஆவிக்குரிய ஆரோக்கியத்தை விட சரீர ஆரோக்கியம் முக்கியமானது. அவனது நல்வாழ்வு ஒரு திருப்திகரமான அனுபவமாக இருந்தது, அது ஆவிக்குரிய அனுபவம் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால், ஒரு சடங்கு அல்லது உடற்பயிற்சி தேவனுடைய வார்த்தையை விட முக்கியமானதாகி விட்டது போலும்.
வஞ்சகம்:
சாத்தான் வஞ்சகத்தை தனது மூலோபாய ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவன் ஏவாளை ஏமாற்றி, அவனுடைய வார்த்தைகளை நம்பத்தகுந்ததாகவும் அதிகாரப்பூர்வமாகவும் "நீங்கள் சாகவே சாவதில்லை" (ஆதியாகமம் 3:4) என்றான் அல்லவா. ஆம், தான் அதிகாரமுள்ள ஒரு நபர் என்பதையும், தான் கூறியதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பதையும் வலியுறுத்த 'சாகவே சாவதில்லை' என்ற நிச்சயத்தை அளித்தான். சொற்பொழிவுகளோ அல்லது தத்துவமோ அல்லது தியான நுட்பங்களோ அல்லது வேறு ஏதேனும் ஆன்மீகமோ என எதுவாக இருந்தாலும் தேவ வார்த்தைக்கு பதிலாக மாற்றப்படும் போது, அது நிச்சயமாக ஒரு வஞ்சகமே.
விலகல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே வழி (யோவான் 14:6). அது மாத்திரமல்ல அந்த வழி ஒரு அகலநெடுஞ்சாலை, அதில் பயணம் தொடரும் போது அதில் இணைவதற்கோ அல்லது மாற்று வழிகளில் வருவதற்கோ அல்லது வேறு பாதைகளில் வருவதோ அல்லது குறுக்கு பாதையில் இணைவதோ என எதுவும் வாய்ப்பு இல்லை.
திசையற்றது:
அந்த இளைஞன் நல்வாழ்வு, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்ல உணர்வு ஆகியவற்றை தனது முன்னுரிமைகளாக நினைத்தான். இவற்றைப் பெற பல வழிகள் உள்ளன, ஆனால் அவை நோக்கமற்ற நாட்டங்கள். வாழ்க்கையில் நோக்கமின்றி நல்ல ஆரோக்கியம் மட்டும் இருந்து என்ன பயன்?
ஆபத்தான இலக்கு:
"மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்" (நீதிமொழிகள் 14:12). வாழ்க்கைக்குப் பிறகு ஒரே ஒரு இலக்கு மட்டுமே இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அது சொர்க்கமாக இருக்கும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், கற்பனை செய்கிறார்கள், நம்புகிறார்கள். அனைத்து சாலைகளும் ஒரே இலக்கை நோக்கி செல்லும் என்று கூறும் தத்துவங்கள் உள்ளன. இருப்பினும், மரணத்திற்குப் பிறகு இலக்கு இந்த வாழ்க்கையில் தீர்மானிக்கப்படுகிறது என்று வேதாகமம் கற்பிக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்பது பரலோக நித்திய வாழ்க்கை, அவரை நிராகரிப்பது என்பது ஆவிக்குரிய தற்கொலை, அது நரகத்திற்கே வழிவகுக்கும்.
சரியான முன்னுரிமைகளுடன் நான் சரியான பாதையில் செல்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்