ராஜாவின் அறைகள் - உன்னதப்பாட்டு 1 :4

ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" (உன்னதப்பாட்டு 1 :4).


இராஜாதிராஜா, கேடுகெட்ட மனிதனாக இருந்த உன்னைத் தமது அறைக்குள் அழைத்து வந்திருக்கிறார். உன்னில் கறைகளும் அழுக்கும் இருந்தும் கூட, அவர் உன்மேல் கொண்ட அனாதி அன்பினால் உன்னைத் தன் அறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்! உனக்கு தகுதியோ, உன்னில் நீதியோ ஒன்றுமே கிடையாது என்பதை அவர் நன்கு அறிந்தும் கூட, தன் அறைக்குள் அழைத்திருக்கிறாரே! நீ இப்போது அவரது பரிசுத்தமாகிய அறைக்குள், அவரது நீதியாகிய அறைக்குள், வந்துவிட்டாய்! அவரது அறைக்குள் உன்னைத் திரும்ப அழைத்துக்கொண்டதினால் உன் ஆத்துமாவை மீட்டுக்கொண்டாரே! 

ராஜா உன்னை தனது தெய்வீக சுகமளிக்கும் அறைக்குள் அழைத்துச் செல்லுகிறார். அங்கே உனக்கும் உனது குடும்பத்தினருக்கும் சுமளிக்கிறார். இது அவரது விசேஷித்த சுகமளிக்கும் அறை.  இந்த அறைக்குள் நீங்கள் வந்தாலே போதும்.

தகப்பன் வீட்டிற்கு திரும்பி வந்த இளைய குமாரனுக்கு, அன்பான தகப்பன், இனிய பாடல்களும், நடனமும் நிறைந்த மகிழ்ச்சியான விருந்து மண்டபத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைத் தந்தார். நீ அவரிடம் திரும்பி விடுவது, மற்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்க கூடிய காரியமாகும். ஆகவே, நம் பழைய வாழ்க்கையில் நாம் செய்துள்ள பாவங்களின் மூலம் மனச்சாட்சியில் குத்துண்டவர்களாய் புலம்பி வேதனைப்பட்டுக்கொண்டிருக்கமால், அவருக்குள் நெருங்கி மகிழ்ந்து களிகூறுவோமாக! 

நம் பழைய வாழ்க்கையில் பாவமாகிய திராட்சரசம் நம்மை வெறிகொள்ளச் செய்ததைவிட அவரது நேசம் மிகவும் சிறந்தது! இனிமையானது! உங்கள் பழைய மனிதனின் மாம்சத்துக்குரிய சுபாவங்கள் அவரது ஊற்றப்படும் அன்பினால் மறைந்து போகட்டும்! "உத்தமார்கள் உம்மை நேசிக்கிறார்கள்" - நாம் அவரின் செலுத்துகிற அன்பில் உத்தமாயிருக்கவேண்டும். மற்ற மனிதரிடம் காண்பிக்கும் அன்பிலும் நாம் உத்தமாயிருக்கவேண்டும். மனிதனின் எந்த நற்குணங்களைவிடவும் உத்தமம் தான் தேவனுடைய பார்வையில் சிறந்தது! அவர் விரும்பும் அளவு உங்களில் பரிசுத்தமும், நேர்மையும் இல்லாதிருக்கலாம். ஆனால் உங்கள் பரிசுத்த குறைச்சலையும் உங்கள் நேர்மையற்ற தன்மையையும் உண்மையோடு அவரிடம் ஒத்துக்கொள்ளவேண்டும்! அதுபோல, மற்றவர்களிடம் என்னென்னெ நேர்மையற்ற காரியங்கள் செய்தீர்களோ, அவைகளையும் அவர்களிடம் ஒத்துக்கொள்ளுங்கள். தேவனக்கு முன் மாய்மாலக்காரராக இருக்கவேண்டாம். நீ எப்படி இருக்கிறாயோ அதை அப்படியே அவரிடம் மறைக்காமல் கூறவேண்டும். மாய்மாலக்காரன் அவரை நேசிக்க முடியாது. ஆனால் உத்தமன் தன்னில் குறைகளிருந்தாலும் அவரை அதிகமாய் நேசிக்கக்கூடும். 

Author Name: T. Job Anbalagan

(மொழியாக்கம் by Caroline Jeyapaul) 

 



Topics: உன்னதப்பாட்டு T. Job Anbalagan

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download