சில சமயங்களில் நம்மால் தூங்க முடிவதில்லை. பெரும்பாலான நேரங்களில் ஒரு துக்கத்தினாலோ அல்லது உடல்பலவீனங்களினாலோ அல்லது வலியினாலோ அல்லது மனப்பாரத்தினாலோ தூக்கமில்லாமல் இருக்கக் கூடும். உற்சாகத்தின் மிகுதியில் தூக்கமில்லாமல் இருந்த நேரங்களும் உண்டு.
கர்த்தருக்காக வாழ்ந்த அநேகர் இத்தகைய தூக்கமில்லா அனுபவங்களை அனுபவித்திருக்கிறார்கள். தாவீது ராஜா : "என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்" என்பதாக எழுதுகிறான் (சங்கீதம் 63:6). அநேகமாக, தூக்கம் வராத இரவுகளில் தேவனுடைய இரக்கம், அரவணைப்பு மற்றும் கிருபையான செயல்களை நினைவில் வைத்துக் கொண்டு அவருடைய அளவற்ற அன்பை தியானித்திருக்கலாம்.
சரி, அத்தகைய நம்பிக்கை இல்லாத மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? அந்த ராத்திரியிலே அகாஸ்வேரு ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற புஸ்தகத்தை தன் உதவியாளரையும் எழுப்பி கொண்டுவரச்சொன்னான், பின்னர் பழைய சம்பவங்கள் அடங்கிய அப்புஸ்தகம் ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது (எஸ்தர் 6:1) மொர்தெகாயின் உண்மையுள்ள மறக்கமுடியாத செயலுக்கு வெகுமதி வழங்கப்படவில்லை என்பதை ராஜா கண்டான். பின்னர் மொர்தெகாயைத் தூக்கிலிட வேண்டும் என்று பேச ஆமான் நீதிமன்றத்திற்கு வருகின்ற போது, ராஜா மொர்தெகாயை கனப்படுத்தும்படி கட்டளையிடுகிறான். தேவனளித்த தூக்கமின்மை, மறக்கப்படக்கூடிய மொர்தெகாய்க்கு வெகுமதியைக் கொடுத்தது.
தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்பட்டதால் தரியு ராஜாவுக்கு தூங்க முடியவில்லை. இது அவனது கவனக்குறைவு காரணமாக நடந்தது, ஏனெனில் மற்ற அதிகாரிகள் அரசனை ஏமாற்றி அப்படி ஒரு சட்டத்தை இயற்ற வைத்தனர். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரை வணங்குவதற்காக தானியலை ஒரு குற்றவாளியாக மாற்றினர் (தானியேல் 6:18). தரியு ராஜா அன்பான தேவனைப் பற்றி அறியாததினால் தூங்காமல் துக்கத்தில் இருந்தான் (சங்கீதம் 121: 4). ஒருவேளை தேவனைப் பற்றி அறியாதவனாக இருந்தாலும் ராஜா தானியேலை விடுவிப்பதற்காக கடவுளிடம் ஜெபித்திருக்கலாம், மேலும் அவன் சத்தமாக அழுது பின்னர் தூங்கச் சென்றிருக்கலாம் (சங்கீதம் 3: 4,5). நாம் தூங்க முடியாமல் போகும்போது ஜெபிப்பதும், அழுவதும், நம் இருதயத்தை அவருடைய முன்னிலையில் ஊற்றுவதும் ஒரு நல்ல செயல்
நாம் தூங்க முடியாமல் இருக்கும்போதெல்லாம் ஜெபிக்கவும், அவரின் அற்புத கிரியையைகளையும் மற்றும் வார்த்தைகளையும் தியானிக்க கற்றுக்கொள்வோம், நினைவுகளை அசைபோடுவது என்பது நமக்கு தேவனின் உண்மைத்தன்மையைக் கண்டறிய உதவும். ஆமாம், இதுபோன்ற தூக்கமில்லாத இரவுகள் பின்னோக்கிய இனிமையான இரவுகளாக மாறும்
தூக்கமின்மையை நாம் எவ்வாறு கையாள்வது? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்