ஒற்றைக் குயில்

இவ்வுலகத்தின் மீட்பு சிலுவைதான் என்பதை அறிவுறுத்தும் வண்ணம் தன் கோபுரத்தில் சிலுவையைத் தாங்கி உயர்ந்து நின்றது பரிசுத்த யோவான் ஆலயம்!

இளம் பெண்களுக்காக நடந்த நற்செய்திக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிய திருமதி கிரேஸ் துரைராஜ் பலருடைய பாராட்டுதல்களை ஏற்றபடி ஆலயவளாகத்தை விட்டு வெளியேறினாள்! அவள் மனம் பெருமிதத்தால் விம்மியது. கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி எடுத்துக்கூறி அழகிற் சிறந்த அவர் நமக்காக அந்தக்கேடடைந்தார். அவருக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்?”” என்ற வினாக்கணையோடு துவங்கிய பிரசங்கம் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்க கடவது (1 பேதுரு 3 : 4) என்ற வசனத்தை அடிப்படையாக வைத்து அழகாக அமைந்திருந்தது! தன் பிரசங்கத்தால் எத்தனையோ இளம் உள்ளங்கள் திருந்தியிருக்கும் என எண்ணி மகிழ்ந்தவளாக நடந்து கொண்டிருந்த கிரேஸ் தனக்கு முன் சில அடி தூரத்தில் நடந்து கொண்டிருந்த ரூபி, எஸ்தர் என்ற மங்கையர் உரையாடலை செவிமடுக்க நேர்ந்தது தன் பெயர் அடிபடவே கவனிக்கலானாள்!

“ரூபி ! இன்றைய பிரசங்கம் என்னை அசைத்துவிட்டதடி! போலியான அழகும், ஆடம்பரமும் வீண் என்று அழகாக, ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்கள்?'*

“எஸ்தார்? சொல்வது சுலபமடி! செயலில் வாழ்க்கையில் இருக்க வேண்டாமா?”

“ஏன் ரூபி! கிரேஸ் அம்மா சிம்பிளாத்தானே இருக்காங்க? *

“அவங்க மட்டும் இருந்தப்போதுமா? அவங்களுடைய ஒரே பொண்ணு மதுரையில் காலேஜில படிக்கிறா, அவ பண்ணாத ஸ்டைலே இல்லை! அது மட்டுமா ? யாரோ பாய் ப்ரண்டோட ஸ்கூட்டரில் சுத்தறாளாம். எங்க அண்ணா சொன்னார்”.

அது ஏனோ எனக்குத்தெரியாது. லதா... இங்க வரும்போது சிம்பிளா வருவா! எஸ்தர்! கிரேஸ் அம்மாவுக்கு குடும்பப் பொறுப்பே கிடையாது! அவங்க மகன் ஜான் என் தம்பியோட படிக்கிறான்! பாவம் அவன்! சரியான கவனிப்பே இல்லை! வீட்டு வேலைக்காரிக்குத்தான் எல்லாப்பொறுப்பும் ஜாணுக்குத் தரவேண்டிய பிஸ்கட், ஆப்பிள் ஜூஸ் எல்லாம் வேலைக்காரிக்கும். அவ மகனுக்கும் போய்விடும், படிப்பில் ௬ட வர, வர டல்லாகி வருகிறான். 6 வகுப்பு படிக்கும் அவனுக்கு குவனிப்பு இல்லாவிட்டால் எப்படி?

இதல்லாம் உனக்கு எப்படித் தெரியும்??”

ஜான் தான் எங்கள் வீட்டுக்கு வருவானே!'*

ஜான் அப்பா ௬ட அவனை கவனிக்க மாட்டாரா!!!

ஜான் அப்பா ஆபீஸ் முடிந்து வந்தா இந்த அம்மா வீட்டில் இருந்தாத்தானே. அவருக்கு நல்லா இருக்கும் இந்த அம்மா எங்கேயாவது, வீடு சந்திப்பு, அல்லது எந்த ஊருக்காவது பிரசங்கம் என்று போய்விடுவார்கள் அவரும் கிளப்புக்கு சீட்டாடப் போய்விடுவார். இரண்டொருமுறை பிரன்ட்ஸ்கூட சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். ஜான் தான் சொன்னான். கிரேஸம்மாவைப் பொறுத்தவரை பைபிளை நன்கு ஆராய வேண்டும்! தன்னை பிறர்புகழ பிரசங்கம்செய்யவேண்டும். அதுதான் அவர்கள் இலட்சியம்!

ஏண்டி ரூபி ! கிரேஸம்மா கடவுள் வேலையைத்தானே செய்றாங்க! அது தப்பா?':

“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான் ”(1 தீமோ 5 ;8) என்று பவுல் ௮ப்போஸ்தலர் கூறுகிறார். மேலும் ':“கண்காணியானவனுக்குரிய தகுதிகளைக் கூறும் பவுல் தன் சொந்தக் குடும்பத்தை நடத்துகிறவனுமாயிருக்க வேண்டும் என்று கூறுகிறார், முதலில் நம் குடும்பத்தை கவனிக்க வேண்டுமடி! பெண்ணை குடும்ப விளக்குண்ணு ஏன் சொல்றாங்க தெரியுமா? குடும்பம் ஒளி பெற்று விளங்குவதும், இருளடைந்து போவதும் பெண் கையில் தான். பெண் குடும்ப விளக்கா இருந்தாப் போதும், குடும்பத்தை இருளடைய வைச்சிட்டு தெருவிளக்கா திகழ்ந்தா மதிப்பில்லையடி! மற்ற பெண்களைவிட கிறிஸ்தவ பெண்ணுக்கு இன்னும் கடமை அதிகம். (நீதி. 31: 10-31) ஞானி சாலமோன் பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என தன் நீதிமொழிகளில் கூறுகிறார். தன் கடமைகளை முடித்தபின், ஓய்வு நேரத்தில் நற்செய்திப்பணி செய்ய வேண்டுமடி,” 

“ரூபி! நீ பெரிய அதிகப்பிரசங்கியா வருவடி”: கல கலவென சிரித்தாள் எஸ்தர்.

இருவரும் இடப்புறமிருந்த சந்தில் திருப்பி நடக்கலானார்கள்.

இதுவரை கேட்டுக் கொண்டுவந்த கிரேஸ் மயக்கம் போட்டு கீழே விழாமல் இருந்ததே கர்த்தர் கிருபை எனலாம். உரையாடலில் உள்ள விஷயங்களில் ஓரளவு அவள் அறிந்தே இருந்தாள். சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என நம்பினாள். ஆனால் தன் மகள் யாரோ ஒருவனுடன் சுற்றுகிறாள் என்ற செய்தியை அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தவளுக்கு “உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைமுதலில் எடு. பின் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்க வழிபார்”* என்று இச்சமுதாயம் ரூபி மூலம் கூறுவதை உணர்ந்தாள் இதுவரை அவளுக்குக் கிடைத்த பாராட்டுதல்கள் எல்லாம் வெறும் காகித மலர்களாக அவளுக்குக் காட்சியளித்தது.

விரைவாக வீட்டை நோக்கி நடந்தவளை மற்றொரு காட்சி ஈர்த்தது. அந்த ஆலமரத்தில் ஒரு சிறு குயிற்குஞ்சை சில காகங்கள் கொத்தி கொத்தி விரட்டிக் கொண்டிருந்தன! கிளைக்குக்கிளை பறந்து செல்லும் அக்குயிற்குஞ்சைப் பரிதாபமாகப் பார்த்தாள் கிரேஸ்! சோம்பற் பறவையான குயில் கூடு கட்டுவது இல்லை! தன் முட்டைகளை காக்கைக் கூட்டில் இட்டுவிடும்! காகம் அம்முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்த்து வரும். குஞ்சு சிறிது வளர்ந்ததும் கூவத் துவங்கும், தன் இனமல்ல என்றறிந்த காகம் அக்குஞ்சை கொத்திக் கொத்தி விரட்டிவிடும். இவ்வாறு அந்தக் குஞ்சு விரட்டப்படுவதற்குக் காரணம் அதன் பொறுப்பற்ற பெற்றோர் தானே! மனித சமுதாயத்திலும் பொறுப்பற்ற பெற்றோரால் பாதை தவறிய இளம் உள்ளங்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவதை காண்கிறோம் அல்லவா? என் குழந்தைகள் குயிற் குஞ்சுகளா?” அவள் மனமே அவளைக் கேள்வி கேட்டது! கிரேஸ் நினைவுகளில் புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்தீரியோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள் என்ற சாலமோன் கூற்று எழுந்து விஸ்வரூபமெடுத்தது !

இறைவன் இயேசுவிடம் தன் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொண்டே வீட்டையடைந்தாள். வழக்கத்திற்கு மாறாக, விரைவில் வீடு திரும்பிய தன் எஜமானியைக் கண்ட வேலம்மாள் திகைத்தாள்! ஏனென்றால் தன்னருமை மகனுடன் பிஸ்கட் கேக்குகளை ருசித்துக் கொண்டல்லவா இருத்தாள்! ஒருவாறு சமாளித்தபடி சமயலறைக்கு விரைந்தாள்! கிரேஸ் பீரோவைத் திறந்தாள்! அதில் சில இடங்கள் காலியாக இருப்பதை அறிந்தாள்! சமயலறைக்குள் புகுந்தாள். பாத்திரங்கள் கூட குறைவாகத் தென்பட்டன. வேலம்மாளைக் கடிந்து கொள்ளவில்லை கிரேஸ்! தன் பொறுப்பற்ற தன்மைக்கு கிடைத்து தண்டனை என உணர்ந்தாள்! அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்! முதலில் வேலம்மாளின் சம்பளக் கணக்கை முடித்து வீடு அனுப்பினாள்! சுவர்க்கடிகாரம் 7 அடித்தது! விளையாடி விட்டு வீட்டுக்கு வந்த ஜான் கூடத்தில் தன் தாயைக் கண்டதும் திகைத்தான்! என்ன ஜான்! ஏழுமணி வரைக்குமா விளையாடுவது? அன்போடு கடிந்து கொண்ட கிரேஸ் “*பாத்ரூம் போய் முகம், கை, கால் கழுவிவிட்டு வா, சாப்பிடலாம்!” என்றாள்,  

பாத்ரூம் சென்று வந்த ஜான், அன்னை பரிமாறிய உணவை பரக்கப்பரக்கப் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தான். அவனுக்கு நல்ல பசி! அவனருகில் அமர்ந்த கிரேஸ். "ஜான்! இனி ஸ்கூல் விட்டதும் நேரா வீட்டுக்கு வரணும், டிபன் சாப்பிட்டு அப்புறம் விளையாடப்போ 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இப்பொழுதிருந்து. நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்கணும். தெரியுதா? என்றாள்.

சரிங்கம்மா:

அவனுக்கு ஒரே ஆச்சரியம்! மகிழ்ச்சி! அனாதை போல் வாழ்ந்தவன் அன்பின் பிரவாகத்தில் மூழ்கினான். சுவர்க்கடிகாரம் பதினொன்று அடித்து முடிந்தது! கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே கிரேஸ் கதவைத் திறந்தாள்! கிரேஸைக் கண்ட துரைராஜ்| திகைக்தார். **வழக்கமாகத் திறக்கும் வேலம்மாள் எங்க! அவர் மனம் கேள்வி கேட்டுக் கொண்டது.

என்னங்க! பதினொரு மணிக்கு வர்றீங்க ! இனி எப்ப சாப்பிட்டு தூங்குவது? நேராநேரம் ஒழுங்கா சாப்பிட்டு தூங்க வேண்டாமா? இப்படியா உடம்பைக் கெடுத்துக் கொள்வது? உரிமையோடு கண்டித்தாள் கிரேஸ் 

நீ தூங்கலையா?.. ., நீ சாப்பிட்டாயா கிரேஸ் ???

இல்லைங்க நீங்க வரவும் சாப்பிடலாம் என்றிருந்தேன்.

இருவரும் உணவருந்த அமர்ந்தனர்! மனைவி பறிமாற மகிழ்ச்சியோடு சாப்பிட்டார் எவ்வளவு நாட்களுக்குப் பின்பு இந்த மகிழ்ச்சியான அனுபவம்.

“என்னங்க ! இனிமேல் ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கு வர்ரீங்களா '' ஏக்கத்தோடு கேட்டாள்.

ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் துரைராஜ்க்கு “ஏன் கிரேஸ்?'*

“எட்டரை மணிக்கெல்லாம் குடும்ப ஜெபம் செய்யணுங்க! நம்ம லதாவை அடுத்த வருடம் நம்ம ஊர் காலேஜிலேயே சேர்க்கணுங்க! காலம் கெட்டுக் கிடக்கு! வாலிபப்பிள்ளை! அதுவும் பெண்பிள்ளை! நம்ம கண்காணிப்பில் இருப்பது நல்லது. நல்ல வரன் வந்தால் மேரேஜ் பண்ணி விடுவது நல்லது”:

சரி கிரேஸ்! ஆமா -- வேலம்மாள் எங்கே ?

நான்தான் வேண்டாம் என்று அனுப்பிவிட்டேன், வீட்டிலேயே டேப் (குழாய்) இருக்கு. ஸ்டவ் குக்கர், மிக்ஸி, கிரைண்டர் என்று வைத்துக் கொண்டு எதற்கு வேலைக்காரி? யாராவது சின்னப் பிள்ளை கிடைத்தால் மேல்வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்'

“கிரேஸ் ! உன்னால் வேலையெல்லாம் செய்துவிட்டு, ஹவுஸ்விசிட், ஹாஸ்பிடல் விசிட் என்று போக முடியுமா? ”

*ஏன் முடியாமல்? வீட்டை முதலில் கவனித்துவிட்டு நேரம் கிடைக்கும்போது போவேன் உங்களையும், பிள்ளைகளையும் கவனித்து, குடும்பத்தை கிறிஸ்தென்னும் கற்பாறையில் கட்டப்பட்ட வீடாக விளங்கச் செய்யத்தானே ஆண்டவர் என்னை உங்களுடன் மணவாழ்வில் இணைத்துள்ளார். அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் நான் குற்றமுடையவள் ஆவேன் அல்லவா?! சிரித்தாள் கிரேஸ்

துரைராஜ் உள்ளம் மகிழ்ந்தது ! அவர் நன்றாகச் சாப்பிட்டு, உறங்கி, எத்தனை வருடங்களாகிவிட்டன.

அன்பான கவனிப்பு வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது அல்லவா!

கிறிஸ்து இவ்வில்லத்தின் தலைவர்” என்று வீட்டின் முன் ஹாலில் அழகான சட்டத்தில் தொங்கிய வாசகம் புதுப் பொலிவுடன் திகழ்ந்தது. 

இந்தக் கதை  மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Maayaapuri Santhaiyilee - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download