எளிமை தான் வலிமை

சங்கீதம் 69:33  கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார்

1. எளியவனை உயர்த்துகிறார்
சங்கீதம் 113:7; 1சாமுவேல் 2:8; அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்.  சங்கீதம் 107:41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து...

2. எளியவனை நினைக்கிறார்
சங்கீதம் 40:17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். 
சங்கீதம் 9:18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை

3. எளியவனை இரட்சிக்கிறார்
யோபு 5:15 எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். 
சங்கீதம் 109:31

4. எளியவனை விடுவிக்கிறார்
சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவ னையும் அவர் விடுவிப்பார். 
சங்கீதம் 70:5; சங்கீதம் 82:4

5. எளியவனை தப்புவிக்கிறார்
எரேமியா 20:13 அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்

6. எளியவனை விசாரிக்கிறார்
சங்கீதம் 140:12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பார் என்று அறிவேன்.

7. எளியவனுக்கு இரங்குகிறார்
எரேமியா 20:13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
உபாகமம் 15:7,11; யாத்திராகமம் 23:6; லேவியராகமம் 19:10; 23:22

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download