பொருட்களை வாங்கவும் விற்கவும் தேவைப்படும் ஒரு ‘முத்திரை’ மற்றும் '666' என்ற எண்ணைப் பற்றியும் பல ஊகங்கள் உள்ளன (வெளிப்படுத்துதல் 13: 16-18). சமூக ஊடக தளங்களில் கடுமையான விவாதங்கள் கூட நடக்கின்றன. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களால் ‘மைக்ரோசிப்’ உருவாக்கப்பட்டு, அரசாங்கங்களில் தன் செல்வாக்கை பயன்படுத்தி மனிதர்களின் உடலில் செலுத்த போவதாக எதிர்பார்ப்பும் உள்ளது. எப்படியாவது, அதை வடிவமைத்து செயல்படுத்தக்கூடிய சாத்தியமான நபர்களை அவர்கள் அடையாளம் கண்டு செயல்படுத்த முயற்சிக்கலாம். என் கருத்துப்படி, பவுல் காலத்திலிருந்தே சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாயிருக்கிறவர்களும், கட்டுக் கதைகளால் தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்போரும், பரம்பரை பெருமையை பேசிக் கொண்டிருப்போரும் எதிர்காலத்தைப் பற்றி ‘ஊகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’ (1 தீமோத்தேயு 4: 7).
மிருகத்தின் அடையாளமாவது அல்லது முத்திரையாவது அல்லது அதன் சொரூபத்தையாவது நெற்றியில் அல்லது வலது கையில் முத்திரையாக தரிக்கப்படும். நெற்றியில் போடப்படும் முத்திரை ஒரு அடையாளத்தையும் மிருகத்திற்கான குணத்திற்கான கருத்து ஒருமைப்பாட்டையும் குறிக்கிறது. வலது கையில் போடப்படும் முத்திரை என்பது மிருகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நெருக்கமான ‘கூட்டுறவிற்கு' விருப்பத்தை தெரிவிப்பது போலாகும்.
மொபைல் போனில் பயன்படுத்தப்படும் 'சிம் கார்டுகள்' கொண்டும் முடியுமா? ஆம், ஒவ்வொரு சிம் கார்டிலும் ஒரு தனித்துவமான எண் மற்றும் அதை வைத்திருக்கும் நபருக்கும் ஒரு அடையாளத்தை வழங்குகிறது. சிம் கார்டை நாம் பெறும்போது அதில் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிப்பதே இல்லை, ’ எல்லா விவரங்களையும் படிக்காமல் கூட நம்மில் பெரும்பாலோர் கையெழுத்திடுகிறோம். சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மொபைல் போன்களை வாங்குவதும் மற்றும் விற்பனை செய்வதும் சாத்தியமான ஒன்று. கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய் காலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. எப்படி வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமோ அது போன்று வீட்டிலிருந்து கொண்டே தேவையானவற்றை வாங்கவும் முடியும். சமூக விலகல் விதிமுறைகளால் மொபைல் பண பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானதாகவும் உள்ளது. இவ்வாறு, ஒரு நபர் தனது மொபைல் சிம் மூலம் பலருடன் அதிகமான தொடர்பும் கொண்டுள்ளனர். நட்புறவுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் நிறுவனங்கள் கூட உரிமையாளரின் அனுமதியின்றி எந்த மொபைல் அமைப்பிலும் ‘பயன்பாடுகளை’ நிறுவும் திறன் கொண்டவை.
யோவான் எழுதியதின் நோக்கம் என்னவெனில் விசுவாசிகளை எச்சரிப்பதற்காகவே, ஊகத்திற்காக அல்ல. மாறாக பரிசுத்தத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பதற்காகவுமே. பயனற்ற விவாதங்களில் நேரத்தை வீணடிப்பது, நம்பிக்கையை மேம்படுத்தாது அதற்கு பதிலாக, தெய்வபக்தி, பரிசுத்தம் மற்றும் தேவனின் விருப்பத்தைச் செய்வதற்கான வாஞ்சை ஆகியவை நம்முடைய விசுவாச வாழ்க்கையை உருவாக்குகின்றன.
அவரது வருகைக்கு நான் தயாரா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்