குல்தீப் சிங் ராஜஸ்தானில் ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தவர். சுங்க அதிகாரியாக தனது பணியுடன், அவர் ஒரு வலதுசாரி அமைப்பில் தன்னார்வத் தொண்டராக இளைஞர்களுக்கு அவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழங்கால மதம் குறித்து பெருமிதம் கொள்வதற்காக, உடற் பயிற்சியும் கற்பித்து பயிற்சி அளித்தார். அதே கிராமத்தில் ஒரு குடும்பம் மிஷனரி பணியைச் செய்து வந்தது. மிஷனரி பணியின் காரணமாக ஏற்பட்ட வளர்ச்சியின் நிமித்தம் கோபமடைந்த குல்தீப் சிங், கே.ஜே. ஜானை முதல்முறையாக சந்தித்த போதே, ஓங்கி அறைந்து விட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் அறைந்தார், பத்து நாட்களுக்குள் மீண்டும் மீண்டும் ஐந்து தடவைகள் அறைந்தார், அன்றே குல்தீப் நோய்வாய்ப்பட்டார். அவரது மூக்கில் ரத்தம் கொட்டியதால் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியவில்லை. விசாரித்ததில் முடிவு என்னவென்றால், அவரது இடது நுரையீரல் பயனற்றதாகிவிட்டது, காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது.
சரியானபடி மருந்து சாப்பிட்டு வந்தால் சுகம் கிடைக்கும் என்று மருத்துவர் கூறினாலும், பதினேழு நாட்களாக, அவரால் சாப்பிடவோ, குடிக்கவோ முடியவில்லை, மேலும் மூக்கில் இருந்து இரத்தக்கசிவு நிற்கவும் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிகாலை 3 மணியளவில் இறந்தார். சடலம் கட்டிலில் கிடத்தப்படாமல் பாயில் வைக்கப்பட்டிருந்தது; ஜான் ஜெபத்திற்காக அதிகாலை 5 மணியளவில் எழுந்திருப்பார். அவரிடம் ஒருவர், "உங்கள் எதிரி (குல்தீப்) இறந்துவிட்டார்" என்றார். அதற்கு ஜான்; "எனக்கு எதிரிகள் இல்லையே" என பதிலளித்தார். அவர் குல்தீப்பின் வீட்டிற்கு விரைந்தார்; இறந்த சரீரத்தைக் கண்டவுடன் அவருக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர, குல்தீப் மனைவியின் அனுமதியுடன் ஜெபிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களில், குல்தீப்பின் இடது ஆள்காட்டி விரலிலும், அடுத்த விரலிலும் அசைவுகளை மக்கள் கவனித்தனர். சில நிமிடங்களில் அவர் உயிர் பெற்றார். அடுத்த ஞாயிற்றுக்கிழமையே குல்தீப் ஆராதனையில் ஜானோடு இணைந்து கலந்து கொள்ளத் தொடங்கினார் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி இப்போது ஒரு போதகராக பணியாற்றுகிறார்.
எதிரி இல்லை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பழிவாங்கலுக்கு எதிராக போதித்தார். அதற்கு பதிலாக, "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு" (மத்தேயு 5:39) என்றார். ஜானை ஐந்து முறை அறைந்தார், ஆனால் அவரோ எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. குல்தீப்பை தனது எதிரியாக கருத ஜான் மறுத்துவிட்டார்.
மன்னித்து ஜெபியுங்கள்:
குல்தீப் ஐந்து முறை அறைந்ததற்காக ஜான் மன்னித்தார். அற்புதமான பணிவு மற்றும் நம்பிக்கையுடன், ஜான் இறந்த குல்தீப்பிற்காக ஜெபம் செய்தார் (மத்தேயு 5:44). கர்த்தர் அங்கு ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்.
கிறிஸ்துவுக்காக நான் பாடுபட விருப்பமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்