"நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்" (யோவான் 10:11-12). உங்கள் மேய்ப்பனாக இருக்கும் பொறுப்பில் இருந்து நான் ஓடிப்போகவோ அவசரப்படவோ இல்லை என்று எரேமியா கூறினார் (எரேமியா 17:16).
முதன்மைப்படுத்துவதில் முரண்பாடு:
சீஷர்களை உருவாக்கவும், ஒரு மேய்ப்பனைப் போல பராமரிக்கவும் தேவன் எல்லா சீஷர்களையும் அழைத்துள்ளார். இருப்பினும், பல சீஷர்களுக்கு எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் முரண்பாடு உள்ளது. பலரால் தேவனுடைய ராஜ்யத்திற்கு முன்னுரிமை கொடுக்க முடியவில்லை (மத்தேயு 6:33). முன்னுரிமை இல்லாதபோது, அருட்பணி மற்றும் ஊழியத்தில் அர்ப்பணிப்பு இல்லை.
குடும்ப சச்சரவு:
பலர் ஊழியத்தில் ஈடுபட்டுள்ளனர் (முழுநேர அல்லது தன்னார்வத் தொண்டர்கள்) ஆனால் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களுடன் அழைத்துச் செல்வதில்லை. இது குடும்பத்தில் சலசலப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் மனைவியும் குழந்தைகளும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். குடும்பத்தை நன்றாக நடத்துவதன் மூலம் மக்களையும் சீஷர்களையும் மேய்ப்பதற்கும் தலைமைத்துவத்தை உருவாக்கவும் உதவுகிறது. குடும்பத்தில் சமாதான குலைச்சல் காணப்பட்டாலும், அப்படி எதுவுமே நடக்காதது போல தங்களை வலுவான தலைவர்களாக காட்டுகிறார்கள். உண்மையாகவே இது போலித்தனம். பல மிஷனரிகள் மற்றும் போதகர்கள் ஊழியத்திற்கு தங்கள் துணைவர்களிடமிருந்து ஆதரவு இல்லாததால் ஊழியத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைகள் காணப்படுகிறது.
பற்றியெரிதல்:
சில தலைவர்கள் எப்போதும் பணியிலேயே மூழ்கி கிடக்கிறார்கள், அது மாத்திரமல்ல தங்கள் சக்திக்கு மீறி அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி அல்லது நலன் அல்லது முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் பொறுமையோடும் மற்றும் மிகுந்த ஆர்வத்தோடும் அதிக வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்யும் தலைவர்கள் உள்ளனர். இன்னும் எலியா போன்று ஊழியத்தின் தீவிரத்தினால் சிலர் ஒளிந்து கொள்கிறார்கள் (1 இராஜாக்கள் 19).
தார்மீக குறைபாடு:
ஊழியத்தில் இருப்பவர்கள் சாத்தானின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஊழியத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஞானமும் பகுத்தறிதலும் மிக அவசியம், குறிப்பாக அது ஆலோசனை போன்ற தீவிரமான ஊழியமாக இருக்கும்போது. பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பற்றிய சோதனை பலரை ஒழுக்க ரீதியாக தோல்வியடையச் செய்துள்ளது. சபைகள், அருட்பணி நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் சமூகத்தில் மோசமான சாட்சிகளாக இருப்பது மிகுந்த வேதனையே. அரசியல் மற்றும் சமூகத் துறையில் காணப்படும் அதே வகையான ஊழல், திருச்சபைகளிலும் காணப்படுகிறதே.
மோசமான பொருத்தம்:
புரிதல் இல்லாமல் (பயிற்சி, உணர்திறன் மற்றும் வார்த்தையைக் குறித்த அறிவு இல்லாமை) ஊழியத்தில் பல தவறுகள் நடக்கின்றன. போதாமை மற்றும் தோல்வி உணர்வுடன், பலர் ஊழியம் செய்வதை நிறுத்திவிடுகிறார்கள்.
எரேமியாவைப் போல, சீஷர்கள் தேவன் கொடுத்த பணிகளிலிருந்து ஓடிவிடக் கூடாது.
நான் உண்மையுள்ள மேய்ப்பனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்