இரவு மணி 11. தூக்கம் வராமல் தன் கட்டிலில்” புறண்டு கொண்டிருந்தார் நாராயணராவ்! நாளை மறுநாள் ஒரு கூட்டத்தில் இந்துமத தர்மம் பற்றி பேசவேண்டியதிருந்ததால் அதற்கான குறிப்புகளைத் தயார் செய்வோமென அமர்ந்தார். கடந்தமாதம் ஜானிடமிருந்து பறித்த புத்தகங்களை தன் வீட்டிலே கொண்டு வந்து, பத்திரப்படுத்தி வைத்த நினைவு வந்தது. அதைப்படித்தால், கிறித்தவர்களைக் குறைத்துக் கூற ஏதாவது அகப்படும் என எண்ணினார். புத்தகங்களை எடுத்தார். “அப்போஸ்தலர் நடபடிகள் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் புரட்டினார்.
அப் 9ஆம் அதிகாரம் 5ஆம் வசனம் கண்ணில் பட்டது””. அதற்கு அவன் ஆண்டவரே நீர் யார்? என்றான். அதற்குக் கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்” என்றார். வாசித்தார் திடுக்கிட்டார் 9ஆம் அதிகாரம் முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் உள்மனம் அவரோடு பேசியது.” நீ... நீயே அந்த மனிதன்?” அதிர்ச்சி அடைந்தார்! புத்தகத்தை மூடி வைத்தார். அவர் மனம் ஒரு நிலையில்லாமல் அலைந்தது அன்று தன்னிடம் அடி வாங்கிக் கொண்டே ஐயா! இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று சொன்ன அவனுடைய கள்ளங்கபடமற்ற முகமும் மெலிந்த சரீரமும் அவர் நினைவில் தோன்றி அவரை வதைத்தது. அன்று தான் செய்தது தவறு என உணர்ந்தார். என்ன அடி வாங்கினாலும் எதிர்த்து பேசவோ, அடிக்கவோ செய்யாமல், பொறுமையாக *உங்களை இயேசு நேசிக்கிறார்?” என்று கூற வலிமையும் மனோ வல்லமையும் அந்த மெலிந்த சரீரமுடைய இளைஞனுக்கு எங்கிருந்து கிடைத்தது? சிந்தித்தார் புதிய ஏற்பாடு கண்ணில் பட்டது. “எடுத்துப் படி! படி! படி! ஒரு குரல் ஒலித்தது. சுற்றும் முற்றும் பார்த்தார் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் ஒன்றும் புலப்படவில்லை. தன் ஆத்மாவின் ஓலமோ? படிக்க ஆரம்பித்தார். ஒன்றிப் போய்விட்டார் நேரம் ஓடிக் கொண்டிருந்தது இறைமகன் இயேசுவின் பரிசுத்த பிறப்பு! மற்றவர்களுக்காக உழைத்த உழைப்பு! பாவிகளின் மீட்புக்காக தன்னையே கொடுத்த அற்பணிப்பு! சிலுவையின் கொடிய மரணத்திலும் கூட தன்னை விரோதித்த அனைவருக்கும் அவர் அளித்த மன்னிப்பு! ஆகியவை இவரைக் கவர்ந்தது, கலங்கவும் வைத்தது. இறைவனின் அடியார்களும் அவர் வழி சென்றபோது அவர்கள் அடைந்த நிந்தைகளையும் படித்தார்! மனம் நெகிழ்ந்தார் அவர் மனத்திரையிலே, இயேசு முள் முடி சூடியவராய் இரத்தம் வடிய மண்ணுலக மீட்புக்காக சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார்! யார் கடவுள்?
பாவிகளை இரட்சிக்க வெயிலென்றும், குளிரென்று பாராமல் அலைந்து திரிந்து அன்பொழுகப் பேசிகுற்றத்தை உணர்த்தி, அவர்களை மீட்க' தன்னையே தந்த பரிசுத்த பார்த்திபன் மறுபுறம் நின்றார். சிந்தித்தார்! “என்ன இருந்தாலும் கிறிஸ்து அந்நிய நாட்டுக் கடவுள் அல்லவா?'' அவர் மனம் வாதாடியது.
சிந்தனையைக் கலைத்தது */கி...கி...கி'! என்ற ஒலி! நிமிர்ந்து பார்த்தார் மணி மூன்று. சுவர்க்கடிகாரத்தின் நடுவில் அழகிய நீலநிறப் பறவை தோன்றி ஒலி எழுப்பும். இரு அழகிய குதிரைகள் ஒன்றையொன்று நோக்கிப் பாய்வது போல் நின்றிருந்த அழகிய வேலைப்பாடுடன் கூடிய கடிகாரம்! “சுவிஸ் மேட்” என்று பொறிக்கப்பட்டிருந்த சிறிய பொன்னிற எழுத்துக்கள் அவர் விழிகளுக்கு மிகப் பெரியவைகளாகக் காட்சியளித்தது.
அவர் மனம் கேட்டது, *கடிகாரம் உள்நாட்டுப் பொருள் அல்லவே!'
“உயர்ந்த அழகிய இப்பேற்பட்ட கடிகாரம் இங்கு கிடைக்காதே.” அவரை அறியாமலேயே சத்தமாக பதில் சொன்னார்
சாதாரணமான ஒரு பொருள் அழகியது என்பதற்காக அயல் நாட்டுப் பொருளை உபயோகிக்கலாம். உன்னை மீட்க உன்னதத்தை விட்டிறங்கி பாழுலகு வந்த பார்த்திபனை மாத்திரம் அந்நிய நாட்டவர் என ஒதுக்க வேண்டுமோ?:' சிந்தித்துக் கொண்டே உறங்கி விட்டார்.
மறுநாள் எழுந்ததும், அடுத்தநாள் கடவுள் இருக்கின்றாரா? என்பது பற்றி தான் பேச இருந்த கூட்டத்திற்கு “தன்னால் வர இயலாது”! என தந்தி அனுப்பினார். ஜானிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டுமென முடிவு செய்தவராக அவனிடமிருந்து தான் கைப்பற்றிய புத்தகங்களையெல்லாம் எடுத்துத் தேடினார். ஒரு சின்ன டைரியில் விலாசத்தைக் கண்டார். மாலையில் ஜானைக் காணச் சென்றார். மாலை 4 மணி! அப்போது தான் மதிய உணவருந்திக் கொண்டிருந்த 3 இளைஞர்கள் இவரை வரவேற்றனர், அதில் ஜான் இல்லை! ஜான் மிஷனரிகளின் கல்லறைத் தோட்டமெனக் கூறப்படும் பீஹாருக்கு மாற்றப்பட்டதையும் அறிந்தார் பல காரியங்களைப் பேசிப்பிரிந்தனர்! காலச்சக்கரம் சுழன்றது.
மின்விளக்குகளால் ஒளிபெற்ற உயர்ந்த மேடை. மேடையின் முன் கண்ணீரோடும், எதிர்பார்ப்போடும், அமர்ந்திருந்த கூன், குருடு, நொண்டி உட்பட பலதரப்பட்ட மக்கள். மேடையில் தோன்றிய அந்த நடுத்தரவயதுடைய மனிதன் இறைமகன் இயேசு இன்று ஜீவிக்கிறார்” எனப் பேச ஆரம்பித்தார்! ஊசி விழும் ஓசையும் தெளிவாகக் கேட்கும்! அவ்வளவு அமைதி! ஜெபவேளை! இயேசுவின் வல்லமை இறங்கியது அற்புதங்கள் நிகழ்ந்தன.
அநேகர் பிசாசின் பிடியினின்றும், நோயினின்றும் விடுதலை பெற்றனர்! அந்த மனிதரோ...கடுகளவு பெருமையுமின் இயேசுவே நன்றி! நன்றி!'' எனக் கூறியபடி நின்றிருந்தார்! அவர் வேறுயாருமல்ல! 20 ஆம் நூற்றாண்டின் புதிய பவுல்! பால்ஜெயசிங்காக மாறிய பஸ்தியின் பள்ளித் தலைமையாசிரியர் நாராயணராவ் தான்!
தன்னையும், தன் அனைத்தையும் முற்றிலும் தேவனுக்கு அற்பணித்த அவரை ஆவியின் கனியாலும், வரங்களாலும் நிறைத்திருந்தார், சர்வ வல்ல தேவன்.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.