ஏழு வகையான பரிசேயர்கள்

யூத இலக்கியத்தில், ஏழு வகையான பரிசேயர்கள் உள்ளனர்.  அவர்களில் பலர் எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுகிற யூத மதப் பிரிவினர், சிலர் தேவ பயமுள்ளவர்களாகவும் தேவனை நேசிப்பவர்களாகவும் இருந்தனர்.  தேவனுக்குப் பயந்த பரிசேயர்கள் நல்லவர்களாகக் கருதப்பட்டனர், அதே நேரத்தில் தேவனை நேசிக்கும் பரிசேயர்கள் சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர்.

 1.  தோள்பட்டை பரிசேயன்:
தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று இவர்கள் செய்கிறார்கள். மேலும் அவர்களது தோளில் தங்களுக்கு எல்லாரும் மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடையாளச் சின்னத்தை அணிந்துள்ளனர்.  கர்த்தராகிய இயேசு அவர்களைக் கண்டித்தார் (மத்தேயு 23:4). அவர்கள் மாய்மாலக்காரர்கள், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள் (மத்தேயு 6:5). கிறிஸ்தவ பரிசேயர்கள் அதிகமாகப் பேசுகிறார்கள், ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சொல்லுக்கு ஏற்ப செயல் ஒன்றுமில்லை. 

 2. காக்க வைக்கும் பரிசேயன்:
இவர் சில நற்செயல்களில் ஈடுபட்டுள்ளதால், மற்ற அனைவரையும் காத்திருக்க வைக்கிறார்.  மற்றவர்களுக்கு உதவி செய்ய உடனடியாக செல்வதை விடுத்து, அதனை தள்ளிப் போட காரணம் தேடுபவராக காணப்படுகிறார்.‌  நல்ல சமாரியன் உவமையில், சாலையில் மரிக்கும் நிலையில் இருக்கும் மனிதனைப் புறக்கணித்த ஆசாரியன் மற்றும் லேவியன் போன்ற கிறிஸ்தவர்கள் இன்றும் உள்ளனர்.

 3. குருட்டுத்தனமான பரிசேயன்:
 இது போன்ற நபர்கள் பெண்களைப் பார்ப்பதையே தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.  எனவே கண்களை மூடிக்கொண்டு எங்கேயாவது இடித்துக் கொள்கிறார்கள் மற்றும் தவறான அறிவுறுத்தல்களால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.  இன்னும் சில கிறிஸ்தவர்கள் பெண்களை மோசமாக நடத்துவதும் மற்றும் தவறான அணுகுமுறையுடனும் காணப்படுகின்றனர்

 4. உலக்கை பரிசேயன்:
 இந்த நபர் எப்பொழுதும் தலையை தாழ்த்திக் கொண்டும், மனத்தாழ்மையை வெளிப்படுத்தவும், ஈர்க்கும் சோதனைகளைத் தவிர்க்கவும் என இருக்கின்றனர்.  சில கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் மன்னிக்கப்படும் என்ற நிச்சயமற்ற தன்மையால் அல்லது நம்பிக்கையின்மையால் குற்ற  மனசாட்சியை ஏற்படுத்திக் கொண்டு நிரந்தரமாகத் துன்பப்படுகின்றனர்.

 5.  எண்ணும் பரிசேயன்:
 இந்த நபர் எப்பொழுதும் அவர் செய்த நற்செயல்களை எண்ணிக்கொண்டே இருப்பார், அவர் செய்யத் தவறியதை அல்லது அவரது தோல்விகளை ஈடுகட்டுவார்.  மேலும் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்கிறாராக காணப்படுகிறார்.

 6. தேவ பயமுள்ள பரிசேயன்:
 இவர்கள் தேவனுக்குப் பயந்து, அவர் நீதியுள்ள நீதிபதி என்பதை அறிவார்கள்.  எனவே, தண்டனை மற்றும் நித்திய தீர்ப்பு உட்பட பாவத்தின் அனைத்து விளைவுகளையும் தவிர்க்க பரிபூரணமாக இருக்க முயற்சி செய்வார்கள்.  சில கிறிஸ்தவர்கள் நரகத்திலிருந்து தப்பிப்பதற்காக பரிசுத்த வாழ்க்கையை நாடுகின்றனர்.

  7. தேவனை நேசிக்கும் பரிசேயன்:
 ஆபிரகாமைப் போலவே இவரும் தேவனை உண்மையாக நேசிக்கிறார்.  தன் மகன் ஈசாக்கை விட்டுக்கொடுக்கும் அளவிற்கும் கீழ்ப்படிதலுடன் இருக்க விருப்பமுடன் இருக்கிறார்.  ஒரு தேவராஜ்ய கிறிஸ்தவர் அன்புடன் கர்த்தருக்காக பலி செலுத்தவும் ஊழியம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்.

 நான் தேவனை நேசிக்கும் ராஜ்ய கிறிஸ்தவனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download