சமாதானத்தோடே அனுப்புங்கள்

மத்தேயு 5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ரோமர் 12:18; எபிரெயர் 12:14; யோவான் 14:27
 
1. சமாதானத்தோடே போ (ஏலி-அன்னாள்)
1சாமுவேல் 1:17 அன்னாள் தேவாலயத்தில் ஜெபம்பண்ணும்போது ஆசாரியனாகிய ஏலி அவளைப் பார்த்து: சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

2. சமாதானத்தோடே போ (யோனாத்தான்-தாவீது)
1சாமுவேல் 20:42 அப்பொழுது யோனாத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி..

3. சமாதானத்தோடே போ (எலிசா-நாகமான்)
2இராஜாக்கள் 5:19(1-14) சீரிய படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் குஷ்டரோகியாயிருந்தான்... எலிசாவின் மூலம் யோர்தானில் ஏழுதரம் முழுகின போது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி, அவன் சுத்தமானான் சமாதானத்தோடே போ என்றான்.

4. சமாதானத்தோடே போ (இயேசு-பாவமுள்ள ஸ்திரீ)
லூக்கா 7:48,50 அவர் கண்ணீரால் தன் பாதங்களைக் கழுவிய  அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். அங்குள்ளவர்கள் பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத் தோடே போ என்றார்

5. சமாதானத்தோடே போ (இயேசு-பாடுள்ள ஸ்திரீ)
லூக்கா 8:43-48 பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்த ஸ்திரீ, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. இயேசு அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download