பண்டைய நாட்களில், மன்னர்கள் தங்கள் உருவப்படங்களை வரைவதற்கு கலைஞர்களை நியமித்தனர். அப்படத்தை வரைவதற்காக, அப்படம் கிட்டத்தட்டநேர்த்தியாய் வருவதற்காக மன்னர் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் (அப்படி வரையும்போது அந்த படம் மன்னர்கள் கற்பனை செய்த அளவை எட்டாமல் உயிரையிழந்த கலைஞர்களின் கதைகளும் உண்டு) இன்றைய காலங்களில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் ஃபோனின் முன்பதாக நின்று தாங்களாகவே தங்களின் சுய-உருவப்படத்தை சரியான கோணத்தில் ஒரே கிளிக்கில் எடுக்க முடிகின்றது.
செல்ஃபி என தன்னைத்தானே புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். வாத்து போல் உதடுகளைக் குவித்து (duck face photography) எடுக்கும் புகைப்படம் முதல் ஆபாச வீடியோக்கள் வரை பல செல்ஃபிகள் உள்ளன. செல்ஃபிகள் சுய வெளிப்பாடு, சுயமரியாதை, சுய ஊக்குவிப்பு, சுய விளம்பரம் ஆகியவற்றின் இறுதி வெளிப்பாடாக மாறி வருகின்றன, அவை நாசீசிசம் (narcissism) என்று அழைக்கப்படுகிறது அதாவது தன்னைத்தானே அதிகமாக நேசிப்பது என பொருள் கொள்ளலாம். இந்த நாசீசிஸ்ட் என்று அழைக்கப்படுபவர், ஒரு சுயநலவாதியாகவும், எதிர்பார்ப்பு உடையவராகவும் அல்லது ஆசை கொண்டவராகவும் அல்லது நிறைய கவனம் செலுத்துபவராகவும், தன்னை போற்ற வேண்டும் மற்றும் வணங்க வேண்டும் எனவும் அத்துடன் மற்றவர்கள் தன்னை விரும்ப வேண்டும் என்ற விதத்திலும் செயல்படுகிறவராய் இருக்கிறார். செல்ஃபி, வெறித்தனம் எப்படியென்றால் சமூக வலைத்தளத்தில் தான் போஸ்ட் செய்வதை எவ்வளவுபேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள், தன்னை தொடருபவர்கள் எத்தனை, பதிலளித்திருக்கிறார்களா இல்லையா அல்லது கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றனரா என தங்களின் சுய மதிப்பை இதை வைத்து அளவிடுவார்கள். இவை அதிகரித்தால், அந்த நபர் ஒரு புகழை அனுபவிக்கிறார், அது ஒரு போதையாக மாறுகிறது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘ஊழியர்-கலாச்சாரம்’ (மத்தேயு 23:11) என்பதைக் கற்பித்துள்ளார், ‘செல்ஃபி-கலாச்சாரத்தை' அல்ல. கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய சீஷர்களை தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல சுயத்தை வெறுத்து வர வேண்டுமென அழைத்தார் (லூக்கா 14: 26-27). "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலாத்தியர் 5:24). சிலுவையில் அறையப்பட வேண்டிய உணர்வுகளும் ஆசைகளும் என்னவெனில்; கண்களின் இச்சையும், மாம்சத்தின் இச்சையும் மற்றும் ஜீவனத்தின் பெருமையுமாகும் (I யோவான் 2: 15-16). நிச்சயமாகவே, 'ஜீவனத்தின் பெருமை’ என்பது சுய-ஈடுபாட்டை உள்ளடக்கியது, ஏனெனில் இது செல்ஃபி கலாச்சாரத்தில் வெளிப்படுத்தப்படும் ஈர்ப்பு.
செல்பி-கிறிஸ்தவத்தில் ஆபத்து உள்ளது. ‘செல்ஃபி நற்செய்தி’ என்பது மனந்திரும்புதலுக்கும் சிலுவையை எடுத்துக்கொள்வதற்குமான அழைப்பாக இல்லாமல்; அதற்கு பதிலாக : “நீங்கள் தேவனுடைய பார்வையில் வியக்கத்தக்கவர், அற்புதமானவர்! உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்! நேர்மறையாய் எண்ணுங்கள்! நம்பிக்கையாய் பேசுங்கள்! உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்! ” என்பதே சிறந்ததாக இருக்க முடியும். செல்ஃபிகள் தேவபக்தியை ஊக்குவிக்கும் என்றால் அவை அவ்வப்போது எடுக்கப்படலாம், அதிலும் சாதாரணமாக!
கடைசி நாட்களில், மக்கள் மேலும் மேலும் சுயநலவாதிகளாகவும், சுயமாக உள்வாங்கிக் கொள்ளப்படுபவர்களாகவும், சுயத்தை நேசிப்பவர்களாகவும் மாறுவார்கள் (II தீமோத்தேயு 3: 2-5).
நான் செல்பி பித்து சுழலில் சிக்கிய செல்ஃபி வெறித்தனம் உள்ளவனா /ளா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்