ஒரு தம்பதியினர் தங்கள் ஒரே குழந்தையை மிகுந்த சுயமரியாதையுடன் வளர்ப்பதற்கான ஒரு தத்துவத்தைக் கொண்டிருந்தனர். எனவே, அவர்கள் எப்போதும் தங்கள் மகனை பாராட்டுவார்கள், புகழுவார்கள், ஊக்குவிப்பார்கள். அவர்கள் தங்கள் மகனை ஒழுங்குபடுத்தவோ அல்லது அறிவுறுத்தவோ யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். மோசமான விஷயம் என்னவென்றால், பள்ளியில் ஒரு ஆசிரியர் தங்கள் மகனைத் ஒழுங்குபடுத்தினாலோ அல்லது தண்டித்தாலோ கூட அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிப்பார்கள். திருத்தம் மற்றும் ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு முதிர்ச்சி இல்லாமல் சிறுவன் ஒரு பொல்லாத போதைப் பழக்கத்திற்கு அடிமையானவனாகி தற்கொலையால் இறந்தார்.
உருவாக்கப்படுகிறவனா? சாதனையாளனா?
குழந்தைகள் கர்த்தரால் பெற்றோருக்குக் கிடைக்கும் ஒரு பரிசு. கர்த்தருடைய பயத்தில் குழந்தையை வளர்ப்பதே நல்ல உக்கிராணத்துவம். நல்ல தெய்வீக தன்மை, வாழ்வியல் மதிப்புகள் மற்றும் நீதிக் கொள்கைகளை உருவாக்குவதற்குவதே பெற்றோர்களின் முதன்மையாக பொறுப்பு. சில பெற்றோர்கள் குழந்தைகளை அதற்கு பதிலாக சாதிக்கிறவர்களாக கருதுகின்றனர்.
ஊக்கப்படுத்துதல் அல்லது சீர்திருத்தம்?
குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்துதலும் தேவை சீர்திருத்தலும் தேவை. அவர்கள் சரியான மற்றும் நல்லதைச் செய்யும்போது, அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் ஏதாவது தவறு செய்யும்போது, அவர்கள் சரி செய்யப்பட வேண்டும், எச்சரிக்கப்பட வேண்டும், அறிவுறுத்தப்பட வேண்டும், சரியாக ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
ஒழுக்கத்தின் பிரம்பு:
பிள்ளையிடமிருந்து முட்டாள்தனம் அல்லது அறியாமையை அகற்றவும், சரியான வழிகாட்டுதலை வழங்கவும் ஒழுக்கத்தின் பிரம்பைப் பயன்படுத்துமாறு பெற்றோருக்கு வேதாகமம் கற்பிக்கிறது. (நீதிமொழிகள் 23:13,14) ஒழுக்கத்தின் கோலை விவேகமாகவும், குறைவாகவும், புத்திசாலித்தனமாகவும், ஜெபத்துடனும், தனிப்பட்ட முறையிலும் பயன்படுத்த வேண்டும். பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். (நீதிமொழிகள் 13:24)
சுய-பொறுப்பு:
ஒரு குழந்தை என்பது தேவ சாயலில் உருவாக்கப்பட்ட நீதிக்குறிய படைப்பாகும். குழந்தைகளுக்கு ஆவிக்குறிய மற்றும் தார்மீக பொறுப்பு உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுய ஒழுக்கமானவர்களாகவும், சுய பொறுப்பாளர்களாகவும் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், குழந்தைகள் மற்றவர்களையும், சுற்றுச்சூழலையும், மற்றவர்களிடமிருந்து ஆதரவு இல்லாததையும் தங்கள் தோல்விக்குக் காரணமாகக் கூறுவார்கள். சுயமரியாதை அதிகமாக வலியுறுத்தப்படும்போது, சுய பொறுப்பு புறக்கணிக்கப்படுகிறது.
சுயமரியாதை:
உண்மையான சுயமரியாதை தேவ பயத்துடன் தொடங்குகிறது, ஏனெனில் அது அறிவு, ஞானம் மற்றும் புரிதலை அளிக்கிறது. (நீதிமொழிகள் 9:10) கர்த்தருக்குப் பயப்படுவது பிள்ளைகள் தீமையிலிருந்து விலகுவதற்கும் உதவுகிறது. (நீதிமொழிகள் 16:6) கர்த்தர் அவர்களைப் படைத்தார், அவர்களை நேசிக்கிறார், வழிநடத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது சுயமரியாதையை வளர்க்கிறது.
மாற்றம் அடைதல்:
குழந்தைகள் உட்பட அனைவரும் இறுதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற்றப்பட வேண்டும். சுயமரியாதை, சுய பொறுப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த திசையில் குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.
வேதாகமத்தின் கட்டளைகளின் அடிப்படையில் நான் சுயமரியாதை மற்றும் சுய ஒழுக்கத்தை உருவாக்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்