வழியோரத்தில் விழுந்த விதை

வழியோரத்தில் விழுந்த விதை

விதை மற்றும் விதைவிதைப்பவன் உவமையில், சில விதைகள் நடைபாதையில் விழுந்தன. 
கர்த்தர் விளக்கினார் “ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.” (மத்தேயு 13:19) 
அவனுக்கு அந்த மொழி தெரியாது என்று அர்த்தமா? அல்லது வார்த்தைகள் புரியவில்லையா? அல்லது யோசனை விளங்கவில்லையா? இல்லை, வெறுமனே அவன் வார்த்தையின் அர்த்தத்தையும் அதை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் மறுக்கிறான். 

1) சுய-பெருமை: 
இது இன்று மிகுதியாகக் காணப்படுகிறது. *முதலாவதாக* , கலாச்சார பெருமை மக்களை சத்தியத்திலிருந்து விலக்கி வைக்கிறது. அவர்கள் தங்கள் கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது மற்றும் தெய்வீகமானது என்று நினைக்கிறார்கள், மற்றவை அனைத்தும் தரம் குறைந்தவை என நினைக்கிறார்கள். *இரண்டாவதாக* , அவர்களின் மதப் பெருமையாக வெளிப்படும் சில ஆவிக்குறிய அனுபவங்கள் அல்லது கருத்துக்கள் உள்ளன. *மூன்றாவதாக* , அவர்களுக்குத் தார்மீக மதிப்புகள் உள்ளன, அதை மதிப்பீடு செய்யவோ அல்லது தீர்மானிக்கவோ கூடாது, இது தார்மீக பெருமை. பல நேரங்களில், அவர்களின் தார்மீக மதிப்பீடுகள் சுய முரண்பாடானவை.     

2) மூடிய மனம்: 
இரண்டு சாளரங்கள் மற்றும் கதவுகள் கொண்ட துர்நாற்றம் வீசும் அறையில் ஒருவர் வசித்து வந்தார். இருப்பினும், அவர் நல்ல வாசனைக்காக பல்வேறு வகையான வாசனை திரவியங்களைப் பயன்படுத்த முயன்றார். அது இன்னும் மோசமாகிவிட்டது. அவரது நண்பர்கள் அவரிடம் இவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சாளரங்கள் மற்றும் கதவுகளைத் திறக்க அறிவுறுத்தினர், இதனால் வெளிச்சமும் காற்றும் வந்து அறையை புதுப்பிக்கும் என்றனர். மூடிய மனம் கொண்டவர்களும் அப்படித்தான். அவர்கள் தங்கள் மனதில் அல்லது இதயத்திற்குள் ஒளியை அனுமதிப்பதில்லை. பவுல் எழுதுகிறார்: “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.” (2 கொரிந்தியர் 4:6)        

3) சுய -நிறைவு:
மாற்றத்திற்கு பயப்படுபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஒரு பழக்கமான வாழ்க்கையை வசதியாக உணருகிறார்கள். அது விரக்தியாகவும் துன்பமாகவும் இருந்தாலும் கூட. உண்மையில், அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இழக்கிறார்கள், ஆனால் பாசாங்குத்தனமாக சுய-நிறைவைக் காட்டுகிறார்கள். 

4) சுய-நீதியுள்ளவர்கள்: 
நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது பிரபலங்களில் ஒருவரை விடவும் தாங்கள் நேர்மையானவர்கள் அல்லது சிறந்தவர்கள் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள்: "நான் அவரைவிட சிறந்தவன்" என்பார்கள். அவர்கள் கர்த்தரின் முழுமையான தராதரங்களைப் புறக்கணித்து, தங்களை நீதிமான்களாக அறிவிக்கிறார்கள்.

அவருடைய வார்த்தைகளை நான் பெற்று புரிந்துகொள்கிறேனா?

Author : Rev. Dr. J. N. ManokaranTopics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download