இரண்டாம் மகன் - இரண்டாவது வாய்ப்பு

ஊதாரி மகனின் உவமை மிகவும் பிரபலமானது, அதில் மூன்று கதாபாத்திரங்கள் உள்ளன; தந்தை, இளைய மகன் மற்றும் மூத்த மகன். குறைவுப்பட்ட இளையவரின் ஆவிக்குரிய பயணம், மீட்டெடுக்கப்பட்டது (லூக்கா 15:11-32).

எல்லாவற்றையும் வீணடித்தல்:
இளைய மகன் சுதந்திரத்தை விரும்பினான், தன் தகப்பனின் கண்பார்வையில் இருந்தும் தூரமாய் செல்ல விரும்பினான். அவன் தனக்கான சொத்தையெல்லாம் பிரித்துக் கேட்ட‍ போது அதை கொடுக்க வேண்டிய நிர்பந்தமோ அல்லது சட்டத்தின்படி கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லாதபோதும் அந்த தந்தை தனது இளைய மகனுக்கு அவன் கோருவதைக் கொடுக்க இரக்கமும் தாராள மனதும் கொண்டிருந்தார். ஆனால் அவனோ எல்லா சொத்தையும் விற்று பணமாக அல்லது தங்க நாணயங்களாக வைத்திருந்தான்.

எல்லாவற்றையும் செலவு செய்தல்:
ஒரு திட்டமும், நிதி ஒழுங்கும் இல்லாமல், அவன் எல்லாவற்றையும் செலவழித்தான். அவனோடு சேர்ந்து செலவழிக்க சில நண்பர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். அவனுடைய பணம் தங்க நாணயங்கள் மற்றும் பிற அனைத்தும் செலவழிக்கப்பட்டன.

கடுமையான பஞ்சம்:
இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள், மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் என பல விரும்பத்தகாத சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.  இருப்பினும், தேவன் தனது திட்டத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்ற அவற்றைப் பயன்படுத்துகிறார். நாட்டில் பணமற்ற நிலை மற்றும் பற்றாக்குறை, ஆகையால் அந்த இளைஞன் தன்னை தானே போஷிக்க அடிமையாகவோ அல்லது வேலைக்காரனாகவோ செல்ல வேண்டியிருந்தது. ஆக சுதந்திரமாக வாழ நினைத்து வீட்டை விட்டு வெளியேறிய இளைஞனின் வாழ்வு ஒரு அடிமையாக முடிந்தது.

 பன்றிகளுக்கு சேவை:
 யூதர்களைப் பொறுத்தவரை, பன்றி என்பது ஒரு அசுத்தமான விலங்கு.  இஸ்ரவேலின் தேசிய எல்லைகளுக்கு வெளியே மட்டுமே பன்றிகள் வளர்க்கப்பட்டன.  தன் அடையாளத்தையும் கண்ணியத்தையும் இழந்து ஒரு சுதந்திரம் தேடும் இளைஞனுக்கு மிகவும் தேவைகள் இருந்தது.

 கடுமையான தேவை:
 ஆடம்பரமாகவும், செழுமையாகவும் வாழ்ந்த இளைஞன் ஏதாவது கொஞ்ச உணவு கிடைக்காதா என ஏங்கினான்.  பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் தீவனத்தைக் கண்டு ஏங்கிக்கொண்டிருந்தான், ஆனால் கொடுமை அது கூட கொடுக்கப்படவில்லை.

ஆவிக்குரிய விழிப்புணர்வு:
துன்பமான நேரத்தில் தான், அந்த இளைஞன் தன் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்துகொண்டான்.  அவன் வீட்டை விட்டு வெளியேறினாலும் தந்தையின் தாக்கத்திலிருந்து வெளியேற முடியவில்லை.  வீட்டை விட்டு வெளியே இருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்க்க அவனது நினைவாற்றல் அவனுக்கு உதவியது.  அவன் நினைத்துப் பார்த்தான், வருந்தினான், வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தான். அவன் ஒரு காலத்தில் மகனாக இருந்த அதே வீட்டில் வேலைக்காரன் அந்தஸ்தை ஏற்கும் அளவுக்கு பணிவானான்; ஆம், தன்னை தாழ்த்தினான் 

அர்ப்பணம்:
அவன் தகப்பனை தேடி நாடி செல்ல ஆரம்பித்தான்; அங்கு அவன் தந்தை அவனை வரவேற்ற விதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான், அவன் தன்னை முழுமையாக  தாழ்த்தினான்; பாவங்களை அறிக்கையிட்டான். ஆனால் அவன் கேட்ட மன்னிப்பை தந்தை கண்டு கொள்ளாமல் மீண்டும் மகனை இழந்து போன பழைய நிலைக்கு கொண்டு வருவதில் மாத்திரம் கவனம் செலுத்தினார்; ஆம், அவனை மீட்டெடுத்தார்.

 பரலோகத் தந்தையிடம் உண்மையான சுதந்திரத்தை நான் அனுபவிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download