தேவன் பொதுவாக ஒரு தனிநபரை அழைத்து, அதை நிறைவேற்ற ஒரு தரிசனத்தைக் கொடுக்கிறார். மோசே அல்லது நெகேமியாவைப் போல தேவன் ஒரு நோக்கத்துடன் தனிநபர்களை அழைக்கிறார். இந்த நபர்கள் ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் தரிசனத்தை நிறைவேற்ற வேண்டும். மோசே மூப்பர்களை அழைத்தார் அல்லது தேசத்தை உளவு பார்க்க ஒரு குழுவை அனுப்பினார். குழுவை வழிநடத்த பல திறமைகள் மற்றும் ஒரு மேய்ப்பனின் இதயம் தேவை. ஆண்டவராகிய இயேசு பன்னிரண்டு பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார், அவர்கள் திருச்சபைகளை நட்டு, உலகை வியத்தகு மற்றும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணினார்கள்.
பிரிக்கப்பட்ட குழு:
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ஆராய மோசே பன்னிரண்டு உளவாளிகளை அனுப்பினார். இருப்பினும், அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். பத்து பேர் எதிர்மறையான அறிக்கையை வழங்கினர், மற்ற இருவர் யோசுவா மற்றும் காலேப் நேர்மறையான மற்றும் சாத்தியமான அறிக்கைகளை வழங்கினர் (எண்ணாகமம் 13). எதிர்மறையான அறிக்கை தேசத்தின் உரிமையை நாற்பது ஆண்டுகள் தாமதப்படுத்தியது.
ஆற்றல்மிக்க குழு:
மிஷனரி குழு பவுல் மற்றும் பர்னபாவுடன் ஒப்புரவு செய்து கொண்டது, பின்னர் பவுல் மற்றும் சீலா ரோமானியப் பேரரசின் பல நகரங்களைச் சென்றடைய ஆற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் உலகையே தலைகீழாக மாற்றினார்கள் (அப்போஸ்தலர் 17:6).
தைரியமான குழு:
பெலிஸ்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெத்லகேமில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றின் தண்ணீரைக் குடிக்க தாவீது ஆசைப்பட்டான். அவருடைய விசுவாசமான வீரர்கள் மூன்று பேர் பாதுகாப்பு வளையங்களை ஊடுருவி, நகரச் சுவரின் மேல் ஏறி, தண்ணீரை எடுத்து வந்து தாவீதிடம் கொடுத்தனர் (2 சாமுவேல் 23:16-17).
ஆபத்தான குழு:
சீமோனும் லேவியும் சீகேமின் மீது படையெடுத்து, விருத்தசேதனம் செய்து வலியில் இருந்த எல்லா ஆண்களையும் கொன்றனர். அவர்கள் தங்கள் சகோதரி தீனாளின் அவமானத்திற்கும் கற்பழிப்புக்கும் பழிவாங்கினார்கள் (ஆதியாகமம் 34).
ஒருங்கிணைந்த குழு:
எஸ்தர் மொர்தெகாயுடன் ஒருங்கிணைந்து ஆமான் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தடுத்தாள். நெகேமியா குடும்பங்கள் உட்பட பலரைத் திரட்டி திறம்பட ஒருங்கிணைத்து வந்து எருசலேமின் சுவர்களைக் கட்டுவதில் தன்னோடு இணைந்து செயல்பட வைத்தான், இது சாதனையாக ஐம்பத்திரண்டு நாட்களில் நிறைவேற்றப்பட்டது.
உறுதிமிக்க குழு:
ரூத் மற்றும் நகோமி ஒரு தனித்துவமான அணி. ஒருவரையொருவர் நேசித்து சேவை செய்து, மேசியாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்களான மாமியார் மற்றும் மருமகள் ஆகியோரின் அழகான குழு.
திசைதிருப்பப்பட்ட குழு:
இயேசு சிலுவையில் மரித்தபோது பதினொரு சீஷர்களும் திக்குமுக்காடி மூடிய கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். உயிர்த்தெழுந்த இரட்சகரின் உயிர்த்தெழுதல் மற்றும் தோற்றத்திற்குப் பிறகுதான், அவர்கள் ஆண்டவர் கொடுத்த உலகளாவிய பணியை நிறைவேற்ற முடிந்தது (யோவான் 20:19-29).
தேவ நாம மகிமைக்காக நல்ல குழுக்களை ஏற்படுத்தி பணியாற்றுகிறோமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்