அறிவியலா? இறையியலா?

தொடர் - 14

பசுஞ்சோலை கிராமத்தில் இராமசாமித் தேவரால் சும்மா இருக்க முடியவில்லை. மருத்துவமனைக்குப் போகப் புறப்பட்டுவிட்டார். அவருடைய வேதனையைக் கண்ட கிராமத்தாரும் மாணவர்களும், எவராலும் அவரைப் பகைக்க முடியவில்லை. பாவம்! அறியாமல் செய்துவிட்டார் என இரக்கம் கொண்டனர். “ஜெபசிங் இறந்தால்... இவரும் இறந்துவிடுவார்” என நம்பினர். அவருடைய இளைய மகன் அழைத்து வர, மருத்துவமனையை அடைந்தார். உதவித் தலைமையாசிரியர் தினகரன் ஜெபாவைத் தன் மார்புமீது சாய்த்து வைத்து ஆரஞ்சு ஜுஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அறையினுள் நுழைந்த இராமசாமித்தேவர் ஓடிப்போய் ஜெபாவின் இரு கரங்களைப் பற்றி தன் விழி நீரால் கழுவினார். “ஐயா! என்னை மன்னிச்சிடுங்கய்யா! ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேனய்யா!” தேம்பித்

தேம்பி அழுதார்! மூன்று நாட்களாக உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இருந்த அவர் ஒரு நடைப்பிணம் போல் காட்சியளித்தார்.

“அழாதீங்கய்யா! அறியாமல்தானே செய்துவிட்டீர்கள்!” நிறுத்தி, நிதானமாகப் பேசினார் ஜெபா. அவர் கரங்கள் இராமசாமித் தேவரின் விழி நீரைத் துடைத்தது.

“ஐயா! இயேசுசாமிதான் ஐயா உண்மையான தெய்வம், நான் கண்டுபிடிச்சிட்டேய்யா!” உற்சாகமாகச் சொன்னார். எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல ஜெபசிங்கின் மனம் மகிழ்ந்தாடியது. அவர் உடலில் புது இரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தார். தினகரனும் உன்னிப்பாகக் கேட்டார்.

இதே நேரத்தில் தன் அத்தையோடு வேகமாக வந்த தன் தந்தையைக் கண்டார் ஜெபா. தினகரன் மெல்ல இறங்க.

“ஜெபா! ஜெபா!” வார்த்தைகள் தடுமாற தன் மகன் அருகில் அமர்ந்தார். அவர் விழிகள் கலங்கியிருந்தன. தலையை மெல்லத் தடவினார் டேனியல். தினகரனின் இருதயம் வேகமாக இயங்கியது. அடிபட்டு வீழ்ந்த ஜெபசிங், அடித்த இராமசாமித் தேவரை “பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல விடுங்கள்” என்று கூறி வீழ்ந்த ஜெபாவின் வார்த்தைகள் அவருக்குப் புதுமையாக, புதிராக இருந்தது.  
 
“நீதிக்கு நீதி, அநீதிக்கு அநீதி” என்ற தீர்ப்பு தான் அவர் அகராதியில் உண்டு! பகைவன் மீது பாசமா? இது அவருக்கு வியப்பாக இருந்தது! ஜெபாவின் நன் நடத்தைகள் தினகரனது சிறந்த நட்பை சம்பாதித்திருந்தன. இப்போதோ ஜெபா தன்னை விட மிக மிக உயர்த்தவர் என உணர்ந்தார் தினகரன். அதுமட்டுமல்ல! மருத்துவர்களின் அறிக்கைகள் ஜெபசிங்கின் இறுதி நாளையே கோடிட்டது. நேற்று இரவு இவருக்கு மிகவும் வேண்டிய மருந்துவரை தனியே அணுகி விசாரித்தபோது கூட “எப்பேர்பட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாலும் ஜெபாவைக் காப்பாற்றுவது அரிதான செயல்! பிழைத்தாலும் மூளை பலமாகத் தாக்கப்பட்டுள்ளதால் சித்தம் தடுமாறியவராக அல்லது ஒன்றுமே தெரியாத ஒரு பொம்மைக் குழந்தையைப் போல் இருப்பார்” என்று கூறினார். தன் நண்பனின் இறுதி நாளைக் காணப்போகிறோம் என எதிர் பார்த்தவர், இருள் மறைந்த நாளைக் காண்பதாக உணாந்தார். ராமசாமித் தேவரின் வேண்டல், நடந்த நிகழ்ச்சி அனைத்தும் அவருக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது. “அறிவியலை மிஞ்சக் கூடிய ஒரு இயலா? அது இறையியலா?”சிந்திக்க ஆரம்பித்தார் சீர்திருத்தவாதி! கடவுள் இல்லை எனக் கூறிக் கொண்டிருந்த அவர் கொள்கையின் அஸ்திபாரம், ஆட்டம் காண் ஆரம்பித்தது.

இதன் தொடர்ச்சி   வந்தது வசந்தம்!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download