ஒருவர் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டார்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; 'தேவன் உலகத்தில் அன்பு கூர்ந்தார்' என்று சொன்னார். ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான்; உலகத்தில் அன்புகூராதிருங்கள் என்று கூறுகிறார் (யோவான் 3:16; 1 யோவான் 2:15-16). அப்படியென்றால் யாரைப் பின்பற்றுவது? வேதாகமம் உலகத்தைப் பற்றி மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது.
1) உருவாக்கப்பட்ட உலகம்:
தேவன் வானங்களையும் பூமியையும் படைத்தார், மலைகள், பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், தாவரங்கள், மரங்கள், காய்கறிகள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள்... என காணக்கூடிய அனைத்தையும் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1). அனைத்தும் மனிதகுலத்திற்கான இடமாக உருவாக்கப்பட்டன. இப்படி அனைத்தையும் படைத்த பிறகுதான் தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார்.
2) உலகில் உள்ள ஜனங்கள்:
நிக்கொதேமுவுடனான உரையாடலில், தேவன் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று கர்த்தராகிய இயேசு கூறினார். அதாவது, உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் தேவன் அன்பு கூருகிறார். அதாவது ஆண்டவர் பாவிகளை நேசிக்கிறார், ஆனால் பாவத்தை வெறுக்கிறார். எனவே, மக்களை மீட்க தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
3) மக்களின் வாழ்க்கை முறை:
அப்போஸ்தலனாகிய யோவான் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் என்று கூறுவது எதுவெனில் உலகின் கொள்கைகள் அல்லது போக்குகள் அல்லது நாகரீகத்தை மையப்படுத்துகிறார் (ரோமர் 12:2). உணர்வுபூர்வமாகவோ அல்லது அறியாமலோ மக்கள் தங்கள் விருப்பங்களைப் பாதிக்கக்கூடிய கருத்துக்கள், சார்புகள், அன்பு அல்லது கசப்பு, ஈர்ப்பு அல்லது வெறுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். மனிதர்கள் இரையாகின்ற மூன்று அடிப்படை இயக்கங்களை யோவான் மையப்படுத்துகிறார்; அவை கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை. எதுவாக இருந்தாலும், மக்கள் நல்லது, கவர்ந்திழுக்கக்கூடியது, மென்மையானது, அழகானது மற்றும் விலைமதிப்பற்றது என்று நினைப்பதால் கைப்பற்ற விரும்புகிறார்கள். அடைய வேண்டும் என்ற எண்ணம் அல்லது உந்துதல், பேராசை அதாவது இச்சை பத்தாவது கட்டளையை மீறுவதற்கு வழிவகுக்கும் (யாத்திராகமம் 20:17). இன்னும் சொல்லப் போனால், இச்சையென்னும் பாவம் மற்ற கட்டளைகளை மீறுவதற்கும் வழிவகுக்கும்; ஆம், இது கொலை, பொய், வன்முறையில் கொண்டு விடுமே. கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் விபச்சாரம், ஆபாசம், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, திருமணத்திற்கு புறம்பான உடலுறவு, இயற்கைக்கு மாறான உறவு, பெருந்தீனி, மது, போதைப்பொருள், ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதல் போன்றவை சரீர பாவங்களுக்கு வழிவகுக்கும். ஜீவனத்தின் பெருமை, தாங்கள் பிரபஞ்சத்திற்கே கடவுள் என்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப அனைத்தும் நடக்க வேண்டும் என்று நினைக்குமளவு மனநிலையை அளிக்கிறது. இந்த பெருமை கண்கள் அல்லது மாம்சத்தின் ஆசைகளை நியாயப்படுத்துகிறது மற்றும் அனைத்து கவனம், ஆற்றல் மற்றும் சக்தியுடன் பாவத்தைத் தொடர்கிறது.
எச்சரிக்கை என்னவென்றால், இந்த ஆசைகள் அனைத்தும் ஒழிந்து போகக் கூடியது, இதில் தலையிடுவது ஆபத்தானது. மாறாக ஒரு சீஷன் தேவ சித்தத்தைச் செய்ய வேண்டும். ஆம், "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1 யோவான் 2:17) என்பதை நினைவில் கொள்வோம்.
நான் உலக வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேனா அல்லது தேவ சித்தத்தைப் பின்பற்றுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran