உப்பு நல்லது மற்றும் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது சுவை அளிக்கிறது, சுவை சேர்க்கிறது, உணவைப் பாதுகாக்கிறது, ஈறு நோய்களைக் குணப்படுத்துகிறது, காயங்களை சுத்தப்படுத்துகிறது, கிருமிகளைக் கொன்று காரணங்களைச் சுத்தப்படுத்துகிறது, மற்றும் வீக்கமடைந்த திசுக்களை ஆற்றுகிறது. பண்டைய காலங்களில் உப்பு மிக விலை உயர்ந்தது மற்றும் மதிப்புமிக்கது. ஆம், கர்த்தருடைய சீஷர்கள் பூமிக்கு பயனுள்ள உப்பாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (மத்தேயு 5:13-16). அதாவது அவர்கள் சமுதாயத்தில் வினையூக்கிகளாக (ஒரு செயல்முறைக்கு உதவும் நபர்), எதையாவது மாற்றும் ஒரு நபராக, மதிப்பை கூட்டுபவர்களாக, பாதுகாப்பவர்களாக மற்றும் குணப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
ரசாயன கலவை:
பொதுவான உப்பு என்பது இரண்டு இரசாயனங்களின் கலவையாகும். சோடியம் மற்றும் குளோரைடு ஒரு எலக்ட்ரானைக் கொண்ட ஒருங்கிணைக்கிறது. எனவே, உப்பு ஒரு படிக வடிவத்தில் நிலையானது.
உப்புத்தன்மை இழப்பு:
இருப்பினும், உப்பு அதன் தன்மையை இழந்தால் அதாவது சாரமற்றுப் போனால், அதற்கு மதிப்போ அல்லது நோக்கமோ இல்லை (லூக்கா 14:34-35). அது பயனற்றதாக வீதியில் கொட்டப்படும், மண்ணோடு மண்ணாக கலந்து மக்கள் அதன் மேல் நடந்திடுவார்கள்.
பலி மற்றும் உப்பு:
பழைய ஏற்பாட்டில், உப்பு உடன்படிக்கை நடைமுறையில் இருந்தது. அனைத்து பலிகளுடனும் உப்பு சேர்க்கப்பட்டது. "நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக" (லேவியராகமம் 2:13).
உப்பில் கலப்படம்:
உப்பு அதன் மூல வடிவத்தில் செயலாக்க எளிதானது அல்ல. இரசாயனங்கள், மணல், சிறு கற்கள்... போன்ற அழுக்குகள் இருக்கும். இந்த மாசுக்கள் உப்பைக் கெடுக்கும்.
அடுப்பில் உப்பு:
ரொட்டி சுடுவதற்கு ஏற்ப அடுப்பின் (கற்களின்) சூட்டை அதிகரிக்க மத்திய கிழக்கு நாடுகளில் உப்பு தீயில் போடப்படுகிறது. உலை மற்றும் அடுப்பில் எரிபொருளில் உலர்த்தப்பட்ட மாட்டுச் சாணத்துடன் உப்பு ஒரு வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சிறிது நேரம் அல்லது பல பயன்பாடுகளுக்குப் பிறகு, உப்பு அதன் உப்புத்தன்மையை இழக்கிறது. பின்னர், உப்பு வெளியே எறியப்பட்டு விடும், மக்கள் அதன் மீது நடந்திடுவார்கள்.
தண்ணீரால் நீர்த்துதல்:
உப்பு அதன் படிக வடிவில் வினைபுரியாதது. ஆனால் தண்ணீரில் கலக்கும்போது அது பாதிக்கப்படுகிறது.
மின்சாரம்:
மின்சாரத்தால் உப்பு பாதிக்கப்படலாம். தண்ணீரில் உள்ள உப்பு ஒரு மின்கடத்தியாகும், இது ஆபத்தானது.
உப்பு போன்ற விசுவாசிகள்:
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக, கிறிஸ்தவர்கள் சமூகங்கள் மற்றும் நாடுகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒரு ஊக்கியாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்தில் தார்மீக விழுமியங்கள், ஆவிக்குரிய வாழ்வு, நீதி மற்றும் நியாயத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நீர்த்துப்போகச் செய்வது சாத்தானின் தாக்குதலுக்கும் உலகப்பிரகாரத்திற்கும் அவர்களை அம்பலப்படுத்தும். உலகின் சித்தாந்தங்கள், மரபுகள் மற்றும் சடங்குகள் என மின்சார அதிர்வை கொடுக்கக்கூடாது, அவற்றை அவருடைய வார்த்தையின் மூலம் எதிர்க்க வேண்டும்.
நான் உப்புத்தன்மையை இழக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்