இன்றைய நவீன உலகில், எல்லா மனிதர்களும் வார விடுமுறை நாட்களைக் கொண்டாட விரும்புகிறார்கள். ஓய்வுநாளைக் கொண்டாடுவதன் மூலம் மனிதர்களுக்கு உதவுவதே தேவனின் நோக்கமும் வாஞ்சையும் ஆகும். வாரயிறுதியைப் பற்றிய ஊடகப் பரபரப்பு இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவனுக்குப் பயந்த சமுதாயம் ஓய்வுநாளை மதிக்கிறது, அதே சமயம் தேவனற்ற சமூகம் வார இறுதிகளில் களியாட்டங்களில் களிகூருகிறது.
ஓய்வுநாளால் பலப்படல்
ஓய்வு:
"தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்" (ஆதியாகமம் 2:2). ஏழாவது நாள் பரிசுத்தமானது மற்றும் கொண்டாடப்பட வேண்டியது, அது மாத்திரமல்ல மனிதர்களை வேலைக்காகப் படைக்கவில்லை, மாறாக அவருக்காகவே படைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்தல் வேண்டும்.
மறுசீரமைப்பு:
ஓய்வுநாள் ஐக்கியம் என்பது ஒரு விசுவாசியின் முன்னுரிமைகள், தரிசனம், நோக்கம் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை மீட்டெடுக்கிறது.
மறுகட்டமைப்பு:
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பத்துக் கட்டளைகளின் மூலம் தேவன் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 20:8) தேவனை வணங்குவதற்கும், அவருக்கு சாட்சி கொடுப்பதற்கும் இது ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு ஆராதனை ஒரு விசுவாசியின் இருதயம், மனம் மற்றும் ஆத்துமாவை புதுப்பிக்கிறது. மற்ற விசுவாசிகளுடன் இணைந்து தேவனுக்குள்ளாக மேம்படவும், வல்லமையடையவும் மற்றும் களிகூருவதற்கான நேரமும் ஆக அமைகிறது.
மீட்பு பணி:
அழிந்து வருபவர்களைக் காப்பாற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுமாறு அனைத்து விசுவாசிகளையும் தேவன் அழைத்துள்ளார். ஞாயிறு அல்லது வாராந்திர விடுமுறை நாட்களில் நல்ல செயல்களைச் செய்தல், மக்களை ஆசீர்வதித்தல், நோயுற்றவர்களைச் சந்தித்தல், ஏழைகளைப் பராமரித்தல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யலாம்.
மனிதன் வலு இழத்தல்
சாத்தான் ஒரு நாளை மட்டும் எடுக்கவில்லை, இரண்டு நாட்களை, பலவீனப்படுத்தி, தேவனிடமிருந்து நம்மை வெகுதூரம் இழுக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறான்.
சாப்பாடு:
உலகில், மக்கள் பெரிய அளவிலான வணிக வளாகங்கள் அல்லது உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு மகிழும் போக்கு உள்ளது. குடும்பமாக சமூகமாக இணைந்து ஒன்றாக சாப்பிடுவது நல்லது. விசுவாசிகளின் அன்பான ஐக்கியத்தில் இது செய்யப்படலாம்.
பொழுதுபோக்கு:
இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்கி உலகத்தினால் ஈர்க்கப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, உலகம் ஸ்மார்ட்போன்களின் வடிவத்தில் அவர்களின் கைகளில் உள்ளது.
மகிழ்ச்சி:
மக்கள் வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் பொது அரங்கங்களில் சென்று அரட்டையடிக்க விரும்புகிறார்கள். நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது களியாட்ட விழாவில் கலந்து கொள்வது பொதுவான வார இறுதி சடங்குகளாக மாறி வருகின்றது. குடிப்பழக்கமும் நடனமும் அதிகரித்தன. ஆண்களும் பெண்களும் இந்த வகையான இன்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உல்லாசப் பயணம்:
வார இறுதியில் உல்லாசப் பயணங்களுக்குச் செல்பவர்கள் சிலர் உள்ளனர்; ஓய்வு விடுதிகள், கடற்கரைகள், பனிச்சறுக்கு, விளையாட்டுகள், மலை ஏறுதல், வன சரணாலயங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும் கூட்டமும் உள்ளது.
தெரிவு எப்போதும் என்னுடையதே; ஆக, ஒய்யாரமா அல்லது ஓய்வுநாளின் சத்தியமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்