நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன் என்று தனது தாழ்ந்த தன்மையையும் நிகழ்நிலையையும் உணர்ந்து எருசலேமின் தோழிகளிடம் கூறுகிறாள். "நான், இலையுதிர் காலத்தில் சாரோனின் சமதளத்தில் மலரும் ஒரு சிறிய ரோஜாவாக இருக்கிறேன். நான் கடின பள்ளத்தாக்கில் வளரும் ஒரு லில்லிப் பூவாக இருக்கிறேன்", என்று கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 2:1). உண்மையான ஒரு கிறிஸ்துவின் மணவாட்டி எப்போதும் தன்னை மற்ற தேவப் பிள்ளைகளிடத்தின் முன்னால் தாழ்த்துகிறாள். உண்மையான ஒரு கிறிஸ்துவின் மணவாட்டி தனக்கோ தனது ஊழியத்திற்கோ எந்தவிதமான புகழையும் விரும்பமாட்டாள். மற்றவர்கள் தன்னை புகழும்போது . "நான், இலையுதிர் காலத்தில் சாரோனின் சமதளத்தில் மலரும் ஒரு சிறிய ரோஜாவாக இருக்கிறேன், நான் கடின பள்ளத்தாக்கில் வளரும் ஒரு லில்லிப் பூவாக இருக்கிறேன்", என்று கூறுவாள்.
பிரதானமான அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் குறித்தோ தனது ஊழியத்தைக் குறித்தோ அல்லது தனக்கு கிடைத்த தரிசனங்களைக் குறித்தோ மேன்மை பாராட்டாமல் "பிரதான பாவி நான்..." 1 தீமோ 1:15) என்றும், "நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல" என்றும் (1 கொரி 15:8,9) கூறுகிறார்.
கொர்நேலியு பேதுருவின் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டவுடன் பேதுரு "அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்" (அப்போஸ்தலர் 10:26).
பர்னபாவையும் பவுலையும் தேவர்கள் என்று புகழ்ந்து அவர்களுக்கு யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட போனவுடன், அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய் "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே" என்று கூறினர் (அப்போஸ்தலர் 14:8-15).
அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரசித்த பெற்ற சுவிசேடகருக்கு ஒரு ஆலோசனை கடிதம் எழுதியவுடன் அவர் எனக்கு "பிரதர், நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல. நான் ஒரு தேவமனிதன்" என்று பதிலளித்தார். அப்போஸ்தலன் பவுலோ வேறு எந்த அப்போஸ்தலரோ, "நான் ஒரு தேவமனிதன் என்றோ அல்லது விசேஷ கிருபை பெற்ற மனிதன் என்றோ கூறவில்லை!
அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரசித்த பெற்ற சுவிசேடகருக்கு ஒரு ஆலோசனை கடிதம் எழுதியவுடன் அவர் எனக்கு "பிரதர், நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல. நான் ஒரு தேவமனிதன்" என்று பதிலளித்தார். அப்போஸ்தலன் பவுலோ வேறு எந்த அப்போஸ்தலரோ, "நான் ஒரு தேவமனிதன் என்றோ அல்லது விசேஷ கிருபை பெற்ற மனிதன் என்றோ கூறவில்லை!
சத்தியம் பேசுவோமாகில், ஒரு உண்மையான கிறிஸ்துவின் மணவாட்டி ஒரு முட்களின் மத்தியில் மலரும் ரோஜா பூவைப் போலிருக்கிறாள். முட்களின் மத்தியில் மலரும் ஒரு ரோஜாவுக்கு பாதுகாப்பு கொடுப்பது முட்கள்தான்! முட்கள் செடியின் அங்கங்களாக இருக்கிறது. முட்கள் மலரை மலரவிடாமல் தடுப்பது கிடையாது. ஆனால் பாதுகாப்பு கொடுக்கிறது. முட்கள் கடந்த கால பாவங்களாக இருக்கலாம். அல்லது கடந்த கால தோல்விகளாக இருக்கலாம். அல்லது கிறிஸ்துவின் நாமத்தில் வரும் உபத்திரவங்களாக இருக்கலாம். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.." (ரோமர் 8:28). இந்த முட்களும் நமது நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறியவேண்டும்.
Author: Dr. Job Anbalagan