"எனக்கான முடிவுகளை எடுக்க எனக்கு உரிமை உண்டு" என ஒரு இளம்பெண் சொன்னாள். 25 வயதுடைய அந்த இளம்பெண் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவில் ஈடுபட்டார், ஒருநாள் அவரது ஆண் துணையாலே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் போடப்பட்டது (இந்தியன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 15, 2022). தேவன் மனிதர்களுக்கு முடிவெடுக்கும் வரத்தையும் உரிமையையும் கொடுத்துள்ளார்.
சரியான முடிவுகள்:
முடிவெடுக்கும் உரிமை ஒரு அற்புதமான பொறுப்பு. ஒவ்வொருவரிடமும் தேவன் எதிர்பார்ப்பது சரியான முடிவு எடுக்க வேண்டும் என்பது மாத்திரமே. சரியான முடிவுகளை எடுக்க விவேகம் தேவை. இருப்பினும், அந்த இளம் பெண்ணின் தரிசனம் மேகமூட்டமாக இருளடைந்ததாக இருந்தது மற்றும் வெறும் கண்மூடித்தனமான அன்பு, துணை மீது கொண்டிருந்த ஆசை அவளது முடிவெடுக்கும் திறனை சிதைத்தது.
ஞானமான முடிவுகள்:
தேர்ந்தெடுப்பதற்கு ஞானம் தேவை, குறிப்பாக தன்னிடம் கேட்பவர்களுக்கு தாராளமாக கொடுக்கும் தேவனிடமிருந்து தெய்வீக ஞானம் மிக அவசியம் (யாக்கோபு 1:5). விக்கிபீடியா, என்சைக்ளோபீடியா போன்ற மனித மூலங்களிலிருந்தும், உளவியலாளர்கள் போன்ற மனித ஆலோசகர்களிடமிருந்தும் பெற்ற அறிவு போதுமானதாக இல்லை.
சட்டபூர்வமான முடிவுகள்:
இந்த பெண் திருமணம் செய்து கொள்வதை விட சேர்ந்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். புனிதமான திருமணம் என்ற உடன்படிக்கை உறவுக்கு அவள் தயாராக இல்லை. இருவரும் ஒருவரையொருவர் அர்ப்பணித்து வாழ தயாராக இல்லை, மாறாக இயன்ற போதெல்லாம் 'உரிமையை' உடைக்க விரும்பினர். ஒரு காலக்கட்டத்தில், இந்த உறவை திருமணமாக மாற்ற வேண்டும் என்று அப்பெண் வலியுறுத்தியபோது தான் கொலை நடந்துள்ளது.
நியாயமான முடிவுகள்:
பல நாடுகளில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. ஆனாலும் தார்மீக ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும், அது அநீதியான, தீமையான மற்றும் பாவச் செயலாகும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது வேதாகம அடிப்படையில் 'இரண்டு விபச்சாரிகள் தங்கள் வசதிக்காக ஒன்றாக வாழ்வது' என்றே எளிமையாகப் பொருள்படும்.
ஆபத்தான முடிவுகள்:
வாழ்க்கையில், ஆபத்துகள் இருக்கும். ஆயினும்கூட, பல சந்தர்ப்பங்களில், நெருங்கிய ஆபத்தைப் பற்றி எச்சரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த பெண்ணும் அவளது தந்தையால் இந்த உறவைத் தேர்ந்தெடுப்பதன் வெளிப்படையான ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டாள். அவள் அதை அலட்சியப்படுத்திவிட்டு தன் துணையுடன் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு சென்றாள். ஆம், சில பாதைகள் நல்லதாகத் தோன்றினாலும் அவை மரணத்திற்கு வழிவகுக்கும். "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" (நீதிமொழிகள் 16:25).
அழிவுபடுத்தும் முடிவுகள்:
ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிடத் தேர்ந்தெடுத்தனர், அது சுய அழிவில் முடிந்தது, அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்து, சாத்தானுக்கும் பாவத்திற்கும் பூமியில் சுதந்திரமாக இயங்குவதற்கான கதவுகளைத் திறந்தனர். இன்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பது ஒரு அழிவுகரமான முடிவு என்பதை மனதில் பதிப்போம்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவேன் என்ற சரியான முடிவை எடுத்து விட்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்