தூதன் செய்த திருப்பணிகள்

1. யோசேப்பைச் சந்தித்தல்   
மத்தேயு 1:20 கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே...
மத்தேயு 1:24 கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு...
மத்தேயு 2:13 கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யேசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்...
மத்தேயு 2:19 கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: 
2. மரியாளைச் சந்தித்தல்   
லூக்கா 1:26,28 கர்த்தருடைய தூதன் மரியாள் இருந்த வீட்டில் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்... 
லூக்கா 1:30 கர்த்தருடைய தூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
லூக்கா 1:35,38 கர்த்தருடைய தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதாலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
3. மேய்ப்பர்களைச் சந்தித்தல்   
லூக்கா 2:9,10 கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படா திருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
4. சகரியாவைச் சந்தித்தல்   
லூக்கா 1:11,19(11-23) கர்த்தருடைய தூதன் சகரியாவுக்கு தரிசனமானான். சகரியா இவனைக் கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download