லூக்கா 1:11-23

1:11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
1:12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
1:13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
1:14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
1:15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
1:16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
1:17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
1:18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
1:19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
1:20 இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
1:21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
1:22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
1:23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.




Related Topics


அப்பொழுது , கர்த்தருடைய , தூதன் , ஒருவன் , தூபபீடத்தின் , வலது , பக்கத்திலே , நின்று , அவருக்குத் , தரிசனமானான் , லூக்கா 1:11 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 11 IN TAMIL , லூக்கா 1 11 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 11 IN TAMIL , Luke 1 11 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,