நெருப்பிலிருந்து காப்பாற்றப்படல்

கணவனே கடவுள், அவன் இறந்தால் அவனது மனைவியான அடிமையானவளும் இறுதிச் சடங்கில் கணவனோடு எரிக்கப்பட வேண்டும், இதை சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்பர். கோகிலா ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார், தஞ்சாவூர் அரசவையில் பணியாற்றிய செல்வந்தரை மணந்தார். அவர் திடீரென்று ஒருநாள் மரித்துப் போனார். கணவனோடு சேர்த்து கோகிலாவையும் உயிருடன் எரிக்க ஆயத்தமாக்கப்பட்ட போது, ​​ஒரு ஆங்கில இராணுவ அதிகாரி ஹென்றி லிட்டில்டன் அவளைக் காப்பாற்றினார்.  ஏனென்றால், திக்கற்ற பிள்ளைகளும்,  விதவைகளும் படுகிற உபத்திரவத்தில் இருந்து அவர்களை மீட்பது என்பது உண்மையான ஆவிக்குரிய நிரூபணம் என்று கூறும் வேதாகமத்தை அவர் படித்திருக்கிறார் (யாக்கோபு 1:27). பின்பதாக கோகிலா பாளையங்கோட்டைக்கு வந்தார், அங்கு ஹென்றி லிட்டில்டனிடம் நற்செய்தியைக் கற்றுக்கொண்டார்.  வாதரோகத்தால் ஹென்றி அவர்கள் திடீரென இறந்த பிறகு, கோகிலா 1778 இல் ஞானஸ்நானம் பெற கிறிஸ்டியன் ஃப்ரீட்ரிக் ஸ்வார்ட்ஸிடம் சென்றார்.  அங்கு அவருக்கு கிளாரிந்தா என்ற பெயர் வந்தது. பின்னர் கிறிஸ்தவத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார்; சில காலங்களில் அவர் புதிய சீஷர்களைக் கூட்டி ஒரு சிறிய சபையை உருவாக்கி 1785 இல் தனது சொந்த நிதியில் ஒரு திருச்சபையை (கிளாரிந்தா ஆலயம்) கட்டினார் மற்றும் ஸ்வார்ட்ஸால் அது அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பின்னர் பள்ளிகள் மற்றும் சபைகளையும் நிறுவினார்.

 1) மீட்பு நடவடிக்கை:
வேதாகம உலகக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்ட ஹென்றி லிட்டில்டன் அவர்கள் கோகிலா உயிருடன் எரிக்கப்படாமல் காப்பாற்றினார்.

 2) காரணம்:
 ஒரு தீவிபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றும் அபாயத்தை ஏன் ஹென்றி எடுத்தார் என்று கோகிலா கேட்டிருக்க வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து மரித்து வாழ்வளிக்க வந்த சுவிசேஷத்தை அவர் பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும்.  சத்தியம் நித்திய வாழ்வைப் போதிக்கிறது, வாழ்க்கையை பறிப்பதில்லை.

 3) மீளுருவாக்கம்:
ஹென்றியின் உத்வேத்திற்கான காரணமான வேதாகமமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்தும் கோகிலா சத்தியத்தை தேட காரணிகளாகும்.  தான் ஒரு பாவி என்பதைக் கண்டுபிடித்தாள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டாள். அவளுடைய வாழ்க்கை மாறியது. அவள் ஞானஸ்நானம் பெற்று தன் பெயரை கிளாரிந்தா என்று மாற்றிக்கொண்டாள்.

4) அணுகல்:
ஒரு சீஷன் செயலற்றவராக இருக்க முடியாது மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கை புதைக்கப்படவில்லை, ஆனால் வெளிப்படுத்தப்படுகிறது.  அவள் மற்ற அனைவருக்கும் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டாள். திருநெல்வேலியில் முதல் சீர்த்திருத்த திருச்சபையை உருவாக்கியவர் கிளாரிந்தா அவர்களே. தேவன் அவளை உயிருடன் எரிக்காமல் காப்பாற்றினார், அவள் உலகத்தின் ஒளியானாள்.

 திருநெல்வேலியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் ஒரு இந்தியரால் கட்டப்பட்டது:  
கோகிலா என்ற கிளாரிந்தா 1785 இல் தனது தனிப்பட்ட நிதியை அர்ப்பணித்தார்.  கிளாரிந்தாவிற்க்கு மதம் மாற பணம் கொடுக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக உடனடி மரணத்திலிருந்து உயிர் கொடுக்கப்பட்டது.

அழிந்து போக இருப்பவர்களை நான் காப்பாற்றுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download