‘வாழ்க்கை சிதைந்து விட்டது' என்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் கூறினாள். 'திருமணத்தில் தோல்வி, விவாகரத்து செய்தேன்' என்று மற்றொரு பெண் கூறினாள். ‘எனது பணி ஒரு விவேகமான அநீதியான அதிகாரியால் முடக்கப்பட்டது,’ என்று அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர் கூறினார். ‘மூத்த போதகர் தனது மகனை ஊழியத்தில் பொறுப்பேற்க வைத்ததால் என் ஊழியம் திடீரென முடிந்தது', என ஒரு போதகர் தெரிவித்தார். ‘ஒரு விபத்து என்னை ஊனமுற்றவனாக்கியது' என்று அழுதான் ஒரு இளைஞன். பரிபூரணமற்ற இந்த உலகை நாம் சற்றே பார்த்தோமேயென்றால், பல உயிர்கள் சிதைக்கப்பட்டும், பாழாக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இருப்பது நமக்கு தெரிய வரும். பெரும்பாலான நேரங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அவல நிலைக்கு பொறுப்பேற்க முடியாவிட்டாலும் நிச்சயமாக, சில நேரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் முட்டாள்தனமும் அதில் உண்டு.
தேவனையும் அவருடைய பிரமாணங்களையும் புறக்கணித்ததற்காக இஸ்ரவேல் தேசம் மீண்டும் மீண்டும் பாழடைந்தது. அவர்கள் செய்த பாவத்துக்கும் அநீதிக்கும் தேவன் தம் கோபத்தை ஊற்றினார். இருப்பினும், ஆமோஸ் தீர்க்கத்தரிசியின் மூலம் தேவன் அவர்களை மீட்டெடுப்பதற்கான வாக்குத்தத்தைக் கொடுத்தார். "அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்" (ஆமோஸ் 9:12). இந்த வாக்குறுதி வாழ்க்கை சிதைந்து போன அல்லது தோற்றுப்போன அனைவருக்கும் பொருந்தும்.
1) பழுது பார்த்தல்:
தேவன் உடைந்தததை சரிசெய்வார். பொதுவாக உடைந்தது வழியாக தான் எதிரி நுழைகிறான். வாழ்க்கையில் நம்முடைய பலவீனமான பகுதிகள் வழியாக தான் சாத்தான் நுழைய முயற்சிக்கிறான். ஆதலால் தேவன் முதலில் உடைந்தததைச் சரிசெய்வார், இதனால் சாத்தானின் தாக்குதல்களை எதிர்ப்பதில் பலம் கிடைக்கிறது.
2) எழுப்புதல்:
இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன், நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்
(எரேமியா 30:18).பாழடைந்த நகரங்கள் எழுப்பப்படும் என்பது இஸ்ரவேல் தேசத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். தேவன் நம்முடைய பாழடைந்த வாழ்க்கையை மீண்டும் எழுப்புவார். நாம் தோற்கடிக்கப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களில் தேவன் நம்மை மீட்டெடுப்பார்.
3) மறுகட்டமைத்தல்:
முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் (ஆகாய் 2:9). பழைய காலங்களைப் போலவே தேவன் மீண்டும் நம் வாழ்வை கட்டியெழுப்புவார். யோசேப்பு பெற்ற அவமானம் உயர்த்தப்படுவதற்கான அவமானம்; தானியேல் அடைந்த அடிமைத்தனம் உயர்த்தப்படுவதற்கான அடிமைத்தனம்; மரணம் மற்றும் அழிவின் விளிம்பிலிருந்து மொர்தெகாயுக்கு ஒரு உயர்வு கிடைக்கப்பட்டது. இவையெல்லாம் வேதாகமத்தில் மீண்டும் கட்டப்பட்ட சிலர் வாழ்க்கையின் அற்புதமான எடுத்துக்காட்டுகள்.
"என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்" (ஆமோஸ் 9:14). ஆம், தேவனால் எந்தவொரு நபரையும் அழிவிலிருந்தும், அவமானத்திலிருந்தும், அழிந்து போவதிலிருந்தும் மற்றும் அவரது மகிமைக்கு ஏற்ப மீட்டெடுக்க முடியும்.
என் வாழ்க்கையில் தேவனின் மறுசீரமைப்புகளை நான் அனுபவித்திருக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்