தற்கொலைக்கான அடைக்கலம்

இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு பணக்காரர் தனது செல்வத்தை சேமித்து வைக்க ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்தார். அவர் ஒரு நூலகத்தை கட்டினார், அதற்கு அவர் ஒரு பிரத்தியேகமான நுழைவாயிலைக் கொண்டிருந்தார், மற்றவர்களுக்கு பொதுவான நுழைவாயில் இருந்தது. நூலகத்தின் கீழ் அவருக்கு ஒரு ரகசிய அறை இருந்தது, அதை அவர் மாத்திரமே உபயோகிக்க முடியும். அறைக்கு வலுவான கதவுகள் இருந்தன. ஒரு நாள் அவர் அந்த அறைக்குள் சென்றார். சிறிது நேரத்திலேயே திடீரென்று ஒரு சூறாவளி ஏற்பட்டது, அதனால் அந்த அறையின் கதவு மூடப்பட்டது மற்றும் நூலகத்தின் கதவுகளும் மூடப்பட்டன. அச்செல்வந்தர் வெளியில் வர முடியாதபடி தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தில் சிக்கினார். அவர் கதவைத் தட்டிப் பார்த்தார், உடைக்கப் பார்த்தார் அதற்கான உபகரணங்கள் இல்லாததால் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர் அதே அறையில் பரிதாபகரமான மனிதராக இறந்து போனார். அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவர் கட்டிலில் செல்வத்துடன் இறந்து கிடந்தார். அங்கு ஒரு காகிதத்துண்டு இருந்தது; அதில் "செல்வத்தின் மத்தியில், நான் ஒரு பரிதாபகரமான மரணம் அடைகிறேன்" என்று எழுதியிருந்தது. உண்மையில், செல்வம் இந்த மனிதனுக்கு தற்கொலைக்கான புகலிடமாக அல்லவா இருந்தது.

"இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்" (சங்கீதம் 52:7) என்பதாக தாவீது ராஜா எழுதியுள்ளாரே. செல்வம் என்பது ஒரு மாயையான அடைக்கலம்.

1) பாதுகாக்க முடியாது:
செல்வத்தால் அந்த மனிதனை அவனது உடனடி மரணத்திலிருந்து பாதுகாக்க முடியவில்லை. ஆம், செல்வம் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படலாம், ஆனால் மனிதனுக்கு அது மிகவும் தேவைப்படும்போது அது பயன்படுத்தப்படவில்லை.

2) வழங்க முடியாது:
உணவும் தண்ணீரும் இருந்தால் பணக்காரன் தன்னைத்தானே பாதுகாத்திருப்பான். தங்கத்தையோ அல்லது ரூபாய் நோட்டுகளையோ அல்லது கடன் அட்டைகளையோ சாப்பிட முடியவில்லை. அவன் உருவாக்கிய வலுவான அறையில், அந்த மனிதன் தனக்கு உணவு வாங்க முடியாத செல்வத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டான்.

3) விடுதலையை அளிக்க முடியாது:
செல்வத்தால் அவனுக்கு விடுதலையை கொடுக்க முடியவில்லை. நிஜத்தை சொல்லப்போனால், செல்வம் அவனை மரணத்தில் மாட்டிக்கொள்ள வைத்தது. ஐசுவரியம் வஞ்சிக்கக்கூடியதேயன்றி, வாழ்வில் பலனை அனுமதிக்காது (மாற்கு 4:19). செல்வத்தின் காரணமாக பலர் தங்கள் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கிறார்கள்.

4) அர்த்தம் கொடுக்க முடியாது:
செல்வத்தால் அப்பணக்காரனின் வாழ்க்கையை வரையறுக்கவோ அல்லது வாழ்க்கைக்கான நோக்கத்தையோ வழங்க முடியவில்லை. வாழ்க்கை தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டால் மட்டுமே, திறமைகள், வரங்கள், நேரம், வளங்கள் உள்ளிட்ட நமது உடைமைகள் நோக்கத்துடன் பயன்படுத்தப்படும்.

தேவனின் நாமம் என் உண்மையான அடைக்கலமா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download