ஒரு ராபின் ஹூட் போன்ற அரசியல்வாதி அவரது வீட்டிற்கு அருகில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மக்களை பயமுறுத்துவது, சொத்து குவிப்பது, பல இளைஞர்கள் உயர்கல்விக்கு உதவுவது போன்றவற்றில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் மறைமுகமாக ஈடுபட்ட நடவடிக்கைகளை விட்டுவிட்டு, அனைத்து சட்டவிரோத செயல்களிலிருந்தும் விடுபட்டு சாதாரண மனிதரானார். அவர் தனது வழியை மாற்றி, திருமணம் செய்து கொண்டார், அவருக்கு ஒரு மகள் பிறந்தது, ஆனால் அவர் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டார். “கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்” (ஏசாயா 33:1). சீர்திருத்தம் போதாது, உண்மையான மாற்றம் தேவை. கடந்த கால பாவத்தின் விளைவுகளை குறைக்க, சில நடவடிக்கைகள் தேவை.
மனந்திரும்புதல்:
சீர்திருத்தம் என்பது சில செயல்களை விட்டுவிட்டு, சில செயல்களைச் செய்வதன் மூலம் மனசாட்சியை அமைதிப்படுத்துகிறது. ஆனால், மனந்திரும்புதல் என்பது தான் செல்லும் பாதையில் இருந்து ஒரு தீவிர மாற்றம் அடைவதாகும். இது மனமாற்றம் எனலாம், ஆம், கடந்த கால பாவத்திற்காக வருந்துவதும் மற்றும் மன்னிப்புக்கான தேடுதலையும் குறிக்கிறது.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல்:
வருந்துதல் மற்றும் மனந்திரும்புதல் நல்லது, ஆனால் போதுமானதாக இல்லை. பாவங்கள் மன்னிக்கப்பட, அவர்களுக்கு ஒரு மீட்பர் தேவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்தின் சம்பளத்தை, மரணத்தை தம்மீது சுமந்து, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவரால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்.
ஒப்புரவாகுதல்:
அரசியல்வாதி ஒருவேளை வருந்தியிருக்கலாம், ஆனால் அவரது எதிரிகளுடன் ஒப்புரவாகவில்லை. முந்தைய எஜமானனான பிலேமோனுடன் ஒப்புரவாக, கொலோசேயின் ரோமிலிருந்து ஒனேசிமுவை அனுப்பினார் அல்லவா பவுல். பவுலைப் பொறுத்தவரை, ஒனேசிமு கர்த்தரால் மன்னிக்கப்பட்டாலும், அவர் யாருக்கு அநியாயம் செய்தாரோ அவர்களுடன் ஒப்புரவாக செய்யும் பொறுப்பு அவருக்கு இருந்தது (பிலேமோன் 1). ஒப்புரவாகுதல் இல்லை என்றால், பகை, கசப்பு மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை இருக்கும்.
மறுசீரமைப்பு அல்லது மீட்பு:
திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும் (யாத்திராகமம் 22:7). ஒரு திருடன் பிடிபட்டால் ஏழு மடங்கு கொடுக்க வேண்டும் என்று நீதிமொழிகள் கற்பிக்கின்றன (நீதிமொழிகள் 6:31). சகேயு சட்டவிரோதமாக சம்பாதித்ததை நான்கு மடங்கு கொடுப்பதாக உறுதியளித்தான் (லூக்கா 19:8). இவை அனைத்தும் மறுசீரமைப்பின் கொள்கையைப் போதிக்கின்றன. சில பண இழப்புக்கள் பறிக்கப்பட்டவர்களுக்கு மீட்கப்படலாம். அரசியல்வாதிகள் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்களை பறித்தவர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
நான் மனந்திரும்பி, ஏற்றுக் கொண்டு, ஒப்புரவாகி, மறுசீரமைத்து, மாற்றம் பெற்றிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்