பாங்காக்கில் உள்ள வாட் டாக்கியன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பக்தர்கள் திறந்த சவப்பெட்டியில் பூக்கள் மற்றும் தூபக் குச்சிகளை கைகளில் பிடித்துக் கொண்டு பிணங்களைப் போல கிடக்கின்றனர். துறவிகள் சவப்பெட்டியின் உள்ளே இருப்பவர்களுக்காக வேண்டிக் கொள்கிறார்கள், உள்ளே இருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தங்கள் தவத்தை அர்ப்பணிக்கிறார்கள். விழாவுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பிறந்து, துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபட்டு, புத்தாண்டைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கருதுகின்றனர் (தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் ஜனவரி 4, 2023). இந்த காரியம் மரணத்தைப் பிரதிபலிப்பது போலவும், மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும், விவேகமான வாழ்க்கையையும் நடத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
சிலுவையை எடுத்தல்:
ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களை ஆண்டுக்கு ஒருமுறை சடங்கு செய்ய அழைக்கவில்லை மாறாக சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்; அதாவது அதற்கு மரணத்தைத் தழுவுதல் என்று பொருள் (மத்தேயு 16:24-26). எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு ரோமானியர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சிலுவையில் அறையும் தண்டனையைக் கொடுத்தனர். குற்றவாளிகள் தங்கள் சொந்த சிலுவையை மரணதண்டனையின் கருவியாக சுமந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். ஆனால் சீஷர்கள் தங்கள் சிலுவையை தானாக முன்வந்து, மகிழ்ச்சியுடன், விருப்பத்துடன் சுமந்து அவரைப் பின்பற்ற அழைக்கப்படுகிறார்கள்.
தினசரி செயல்:
தன்னை தான் வெறுப்பது என்பது தினசரி செயலாக நடக்க வேண்டும். இது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சடங்கு அல்ல, ஆனால் அநுதினமும் தேவனிடம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையை நடத்துவதே இதன் பொருள். இது சுயநலமோ அல்லது பிறரை மையமாகவோ அல்லது ஆலோசனை மையமாக வைத்தோ அல்ல, மாறாக தேவராஜ்யத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை. தற்காலிக ஈர்ப்புகளை மறுத்து, நித்திய பலனைத் தழுவுவது ஒரு சீஷனின் வாழ்க்கை முறையாகிறது.
ஜீவ பலியாகுதல்:
விசுவாசிகளை ஜீவ பலியாக இருக்கும்படி பவுல் அறிவுறுத்துகிறார் (ரோமர் 12:1). ஒரு மிருகம் கொல்லப்பட்ட பிறகு பலிபீடத்தில் வைக்கப்படுகிறது அல்லது பலிபீடத்தில் கட்டப்பட வேண்டும். இல்லையெனில், அது தப்பிக்கக்கூடும். ஆனால் சீஷர்கள் தானாக முன்வந்து பலிபீடத்தின் மீது ஏறி அங்கேயே படுத்துக்கொள்ள வேண்டும் என்றும், எப்போதும் ஆண்டவரின் வேலைக்காகவும் அருட்பணிக்காகவும் தயாராக இருக்க வேண்டும் என பவுல் விரும்புகிறார்.
புதிய சிருஷ்டியாகுதல்:
சீஷர்கள் ஒரு புதிய சிருஷ்டியாகுறார்கள் (2 கொரிந்தியர் 5:17). பழைய காரியங்கள் எல்லாம் ஒழிந்து போகின்றன. இது ஒரு ஆவிக்குரிய மாற்றம். இது ஒரு சடங்கு அல்ல, அதில் ஒருவர் கடந்த கால சாபங்கள் அல்லது துரதிர்ஷ்டங்கள் விட்டுச் சென்றதாக கற்பனை செய்து அல்லது கண்மூடித்தனமாக நம்புகிறார்.
மரித்ததாக எண்ணுதல்:
சீஷர்கள் தங்களை பாவத்திற்கும், உலகத்திற்கும், சாத்தானுக்கும் மரித்தவர்களாக கருத வேண்டும் (ரோமர் 6:11). அவர்கள் கிறிஸ்துவில், கிறிஸ்துவுக்காக ஜீவனோடு இருக்கிறார்கள்.
நான் என் சுயத்தை வெறுத்து அநுதினமும் என் சிலுவையைச் சுமக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்