கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக் கொண்ட புதிய சீஷர் ஒருவர் தனது மொழியில் வேதாகமத்தைப் பெற்றதும், அதை முத்தமிட்டு கொண்டே; “எங்களுக்கு வழிபடவோ, வழிபாட்டுத் தலத்திற்குள் நுழையவோ, புனிதப் புத்தகத்தைப் பார்க்கவோ அல்லது தொடவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை எங்களுக்கு பரிசாக அளித்துள்ளீர்கள்" எனச் சொல்லி அழுதார். வேதாகமம் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய பரிசு, இது மகிழ்ச்சியுடனும் அன்பான கீழ்ப்படிதலுடனும் பெறப்பட வேண்டும். கடவுளுடைய வார்த்தை பற்றி அறியாதவர்கள் அவர் வார்த்தையின் மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
"அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி…" (யோனா 1:1). யோனாவின் காலத்தில் இஸ்ரவேலில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்திருப்பார்கள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இருந்திருப்பார்கள். தேவ வார்த்தை கோடிக்கணக்கான ஜனங்களுக்கு வரவில்லை, ஆனால் யோனா என்ற ஒரு நபருக்கு வந்தது. என்ன ஒரு பாக்கியம்! வசனத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுபவர்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிய வேண்டும்.
போ.. பகிர்:
நினிவே நகர மக்களுடன் சென்று பகிர்ந்துகொள்ளும் வார்த்தையை யோனா பெற்றார். தேவ வார்த்தையைக் கேட்கத் தயாராக இருக்கும் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதுபோல அந்த வார்த்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு பொறுப்பும் உள்ளது, அது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகும். இருப்பினும், நினிவே மக்களுடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள யோனா விரும்பவில்லை. யோனா வார்த்தையை பகிர்ந்து கொள்ள தயங்கினார், அவர் தண்டிக்கப்பட்டார், பின்னர் நினிவே சென்று தேவ வார்த்தையைப் பகிர்ந்து கொண்டார். பல சீஷர்கள் யோனாவைப் போல தயக்கம் காட்டுகிறார்கள்.
புறக்கணிக்கப்பட்ட உயரடுக்கு:
அரசியல், மதம், சமூகம் மற்றும் நிர்வாகத் தலைவர்களாக இருந்த திபேரியு இராயன், பொந்தியு பிலாத்து, காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது, பிலிப்பு லிசானியா, பிரதான ஆசாரியர்கள் அன்னா மற்றும் காய்பா போன்ற உயரடுக்கினருடன் தேவன் பேசவில்லை. மாறாக, தேவ வார்த்தை யோவான் ஸ்நானகனுக்கு வந்தது (லூக்கா 3:1-3).
உலக அளவில் நிராகரிப்பு:
"ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?" (எரேமியா 8:9). உலகத்தில் ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் முட்டாள்களைத் தேர்ந்தெடுத்தார் (1 கொரிந்தியர் 1:27). அறிவில்லாத மக்கள் வார்த்தையைப் பெறுவதற்கு விசுவாசம் வைத்திருக்கிறார்கள், ஆனால் உலகப்பிரகாரமாக ஞானமுள்ளவர்கள் மூடர்களாகவும், பெருமையாகவும், தன்னிறைவு பெற்றவர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் காணப்பட்டு அவர்கள் வார்த்தையை நிராகரிக்கின்றனர்.
நான் வார்த்தையைப் பெற்றும் கொள்ளும் குழுவில் இருக்கிறேனா அல்லது நிராகரிப்பவர்கள் குழுவில் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்