பிரபல இந்திய எழுத்தாளரான சேத்தன் பகத் இளைஞர்களுக்கு இவ்வாறாக எழுதுகிறார்; “இவர் தொலைக்காட்சியை நன்றாகப் பார்ப்பவர் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்களை விடாமல் கவனிப்பவர் என்று மக்கள் வர்ணிப்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை அல்லவா; ஆனால் இவர் ஒரு சிறந்த புத்தகம் வாசிப்பாளர் (ஒரு புத்தகப் புழு) என சொல்லிக் கேட்டிருக்கிறோமே (வாழ்க்கை விதிகள் 11). அப்படியும் யாரேனும் எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் இல்லை என்று கூறினால், அவர் அடிப்படையில் சோம்பேறி என்று தான் அர்த்தம். ஆம், சிறந்த வாசகர்களே சிறந்த தலைவர்கள்.
வேதம்:
வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தை என்று நாம் எல்லோரும் அறிந்ததே. இது இரட்சகராகிய தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறது (யோவான் 5:39-46).
வாசிப்பதில் ஒரு மகிழ்ச்சி:
வேதத்தை வாசிப்பதும், பிறகு தியானிப்பதும் எப்பொழுதும் மகிழ்ச்சியளிக்கிறது (சங்கீதம் 1:2). பெரேயா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தினமும் வேதத்தை வாசித்தனர் (அப்போஸ்தலர் 17:11). உண்மையில், வேதாகமத்தை வாசிப்பதும் கேட்பதும் ஒரு ஆசீர்வாதமாகும் (வெளிப்படுத்துதல் 1:3).
தெய்வ பக்தியுள்ள எழுத்துக்கள்:
வரலாற்றில் தேவனுடைய பரிசுத்தவான்களின் எழுத்துக்களைப் படிப்பதும் நல்லது. அவர்கள் தியானம் செய்தார்கள், நுண்ணறிவுகளைப் பெற்றார்கள், அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தினார்கள், அந்த எழுத்துக்களில் தங்கள் ஞானத்தை கொண்டு வந்தார்கள் (வடிகட்டினார்கள்). இத்தகைய எழுத்துக்கள் விசுவாசிகளை இப்போது விசுவாசத்தில் நடக்க தூண்டுகிறது மற்றும் வழிகாட்டுகிறது எனலாம்.
பத்திரிகைகள், பிரசங்க குறிப்புகள்:
வேதாகமத்தைப் படிக்கும்போதும் வேதாகமப் போதனைகளைக் கேட்கும்போதும் குறிப்புகளை எடுத்துக்கொள்வது ஒரு நல்ல ஒழுக்கம். பவுல் தீமோத்தேயுவிடம் அவருடைய காகிதத் துண்டுகள், அநேகமாக அவருடைய ஆய்வுக் குறிப்புகள், பிரசங்கக் குறிப்புகள் மற்றும் மற்ற அப்போஸ்தலர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டவற்றைக் கொண்டுவரச் சொன்னார் (2 தீமோத்தேயு 4:13).
வரலாறு மற்றும் கலாச்சாரம்:
நாம் வாழ்கின்ற பகுதி மற்றும் ஊழியம் செய்யும் பகுதி அல்லது சேவை செய்ய விரும்புகின்ற பகுதி மக்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் படிப்பது மிக முக்கியம். கிரேத்தாவில் வாழும் மக்களைப் பற்றி தீத்துக்கு எழுதியபோது பவுல் வேதாகமம் சாராத எழுத்தாளர்களை மேற்கோள் காட்டினார் (அப்போஸ்தலர் 17:28; தீத்து 1:12).
தற்கால இலக்கியம்:
சமகால இலக்கியங்களைப் படிப்பதில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள், மக்கள் எதைப் படிக்கிறார்கள், மேலும் சிந்திக்கவும் நம்பவும் முனைகின்றன. தற்போதைய தலைமுறையின் போக்குகள், நாகரீகங்கள் மற்றும் அறிவுசார் சூழலும் அறியப்படும். புத்தக மதிப்புரைகளைப் படிப்பது எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதைத் தெரிவுசெய்ய உதவுகிறது.
புதுப்பிக்கப்பட்ட மனம்:
பலமான வேதப்பூர்வ அடித்தளத்துடனும், பரிசுத்த ஆவியின் உதவியுடனும், உலக மக்களைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும், தொடர்புகொள்ளவும் விசுவாசிகள் புதுப்பிக்கப்பட்ட மனதைக் கொண்டிருக்க வேண்டும் (ரோமர் 12:2).
எனக்கு புதுப்பிக்கப்பட்ட மனம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்