சமூக வலைதளங்களில் கிறிஸ்தவ தலைவர்கள் குறித்து பல விவாதங்கள் நடந்து வருகின்றன. விமர்சனங்கள் சில, எதிர்வாதம் சில, அதைக் குறித்து பேசுபவர்களை சபிப்பது சில என்பதாக நடந்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தில் குழப்பமாக பலர் உள்ளனர். குறைந்தபட்சம் இரண்டு வகையான பிரச்சனைகளை கையாள வேண்டும். முதலாவதாக, இது உள்ளூர் சபையால் கையாளக்கூடிய ஒரு பிரச்சினை. இரண்டாவதாக, பல சபை பிரிவுகளைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. இரண்டு சூழல்களுக்கும் வேதாகமக் கோட்பாடுகள் மற்றும் உதாரணங்கள் உள்ளன.
1) உள்ளூர் சபை:
வேசித்தனம் போன்ற பாவம் செய்யக்கூடியவர்களும் இருக்கிறார்கள். முதலில், சபை மூப்பர்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். இரண்டாவதாக இரண்டு அல்லது மூன்று பெரியவர்கள் முன்னிலையில் பேச வேண்டும். மூன்றாவதாக, சபையில் காணப்பட வேண்டிய ஒழுங்குமுறையை சபையில் அனைவரின் முன்பதாக அறிவிக்க வேண்டும் (மத்தேயு 18:15-17). நான்காவதாக, "அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்" (1 கொரிந்தியர் 5:5) என்று தைரியமாக கூறினார் பவுல்.
2) பொது கண்டனம்:
பேதுரு ஒரு மூத்த அப்போஸ்தலர். ஆனால் அவர் இனவெறியை (சாதி உணர்வு) கடைப்பிடித்தார், எனவே ஒரு இளைய அப்போஸ்தலனாகிய பவுல் அவரை பகிரங்கமாக கண்டித்தார் (கலாத்தியர் 2:11-14). ஒரு சபையில் உள்ள ஒரு விசுவாசியினாலோ அல்லது மூப்பரினாலோ அல்ல, ஒரு தலைவரின் நடத்தையின் காரணமாக அது அனைத்து சபைகளையும் பாதிக்கலாம். தலைவர் பேதுருவிற்கு அதிகாரமும் மரியாதையும் இருந்தது. அவரது அணுகுமுறை ஆரம்பகால சபைக்கும் எதிர்கால சந்ததியினர் முழுமைக்கும் தீங்கு விளைவிக்கும்.
3) பொது அறிவிப்பு:
அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு பொது அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது. அதாவது தவறான உபதேசம் செய்பவர்களுக்கு விருந்தோம்பல் அல்லது ஊழிய வாய்ப்புகள் வழங்கப்படக்கூடாது என்பதாகும். "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்" (2 யோவான் 1:10,11).
4) பொது பழித்துரை:
விசுவாசத்தையும், நல்ல மனசாட்சியையும் கடைப்பிடிக்காத சிலர், பகிரங்கமாக கண்டிக்கப்படுகிறார்கள். "இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்" என்கிறார் பவுல் (1 தீமோத்தேயு 1:20).
விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவர் மற்றும் தேவனுடைய வார்த்தையின் உதவியால் பகுத்தறிந்து, உள்ளூரிலும் பரந்த கோளத்திலும் பொருத்தமான திருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
நான் பொய்யான, கள்ள உபதேசம் மற்றும் தவறான போதகர்களை பகுத்தறிகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran