வேதாகமத்தில் தலைமைத்துவம் என்பது மேய்ப்பனோடு ஒப்பிடப்படுகிறது. தேவன் இஸ்ரவேல் தேசத்தின் மேய்ப்பராக இருந்தார்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மேய்ப்பர் என்றும் மற்றும் தாவீது தேவனை தன்னுடைய தனிப்பட்ட மேய்ப்பராக சித்தரிக்கிறான் (யோவான் 10; சங்கீதம் 23). தலைவர்கள் மேய்ப்பர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்: ஆசிரியர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள், சமுதாயத் (சாதி, மத) தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் ராஜாக்கள் என மேய்ப்பர்களாக இருத்தல் வேண்டும். இருப்பினும், மேய்ப்பர்களுக்கென்று இருக்க வேண்டிய உயரிய தரத்தை தக்க வைத்துக் கொள்ள தலைவர்கள் தவறி விடுகிறார்கள். அப்படிப்பட்ட மேய்ப்பர்களைக் எசேக்கியல் தீர்க்கதரிசி கண்டிக்கிறார் (எசேக்கியேல் 34). தங்கள் குடும்பம், தங்கள் சமுதாயம், தங்கள் சபை, தங்கள் சமூகம் அல்லது தங்கள் தேசம் என சேவை செய்து கொண்டிருககும் நம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
1) தங்களை தாங்களே போஷிக்கும் மேய்ப்பர்கள்:
"தங்களையே மேய்க்கிற மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்" (எசேக்கியேல் 34: 1-4). அதாவது அவர்கள் மக்களை சுரண்டுகிறார்கள் என்று அர்த்தம்: அரசியல்வாதிகள் வரியாகவும், மதத் தலைவர்கள் வழிபாட்டின் பேரில் சுமையை அதிகரிக்கிறார்கள், வணிகர்கள் லாபத்தின் விளிம்பை அதிகரிக்கிறார்கள், அதிக வட்டி வசூலிக்கிறார்கள்.
2) ஊழியம் செய்யவில்லை:
மேய்ப்பர்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் இருக்கிறார்கள். தலைவர்கள் குடிமக்களை மேம்படுத்தவில்லை, மதத் தலைவர்கள் பாமர மக்களை தயார் செய்யவில்லை, ஆசாரியர்கள் சரியான ஆலோசனைகளை வழங்கவில்லை மற்றும் ஆவிக்குரிய குணப்படுத்துதலையும் வழங்கவில்லை. ஆடுகள் வழிதப்பி தன்தன் வழியில் அலைந்து திரிய வாய்ப்புள்ளதால் அவற்றை ஒருங்கிணைத்து கொண்டு வருவது அவசியம் (ஏசாயா 53: 6). அலைந்து திரிவது என்பது தார்மீக ஒழுங்கு ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக அல்லது ஆவிக்குரிய ரீதியாக இருக்கலாம்.
3) அவர்கள் மீதான ஆளுகை:
பகிர்ந்துகொள்வதற்கும், பராமரிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் பதிலாக, மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை ஆண்டார்கள். இந்த அணுகுமுறை மற்றும் நடத்தைக்கு எதிராக பேதுரு எச்சரித்தார் (1 பேதுரு 5: 3). மேய்ப்பர்கள் கடுமையாகவும், கொடுமையாகவும் மற்றும் சுயநலத்துடன் அவர்களை தங்கள் ஆடம்பரத்திற்காகவும், சுகபோகத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் பயன்படுத்தினர்.
4) சிதறியது:
இதன் விளைவாக ஆடுகள் சிதறி, காட்டு மிருகங்களுக்கு உணவாக மாறியது. மேய்ப்பர்களுக்கு பயந்து அவர்கள் காட்டு விலங்குகளிடம் தஞ்சம் புகுந்தார்கள்.
அனைத்து மனித தலைவர்களும் பலவீனத்துடன் இருப்பதால், அவர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியடைகிறார்கள். எனவே, தேவன் மேய்ப்பராக இருப்பார்: அவர் உணவளித்து, வலுப்படுத்தி, குணப்படுத்தி, காயங்கட்டி, காணாமல் போனவைகளையும் திரும்ப தேடிக் கொண்டு வந்து விடுவார் (எசேக்கியேல் 34: 11-16). ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பர், பெரிய மேய்ப்பர் மற்றும் பிரதான மேய்ப்பர் (யோவான் 10: 11, 1பேதுரு 5: 4, எபிரெயர் 13:20). அனைவரும் நல்ல மேய்ப்பனின் சாயலாக வளர வேண்டும். மனிதத் தலைவர்களாக (மேய்ப்பர்கள்) இருப்பவர்கள் பலவீனமானவர்கள், பூரணமற்றவர்கள், எனவே, யாரும் அவர்களை தப்பில் விழாதவர்கள் என்று அவர்களை பிரபலமாக்க கூடாது.
நான் நல்ல மேய்ப்பனின் சாயலில் வளர்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran